தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘ஜெயிலர்’.
இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு புதுச்சேரி – கடலூர் பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது சென்னை புறநகர் பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூரில் நடந்து வருகிறது.
தற்போது, சூட்டிங் 50% நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தை அடுத்தாண்டு 2023, ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கு முன் ரஜினி நடித்த வீரா, அருணாச்சலம், படையப்பா உள்ளிட்ட படங்கள் தமிழ் புத்தாண்டு சமயத்தில் (ஏப்ரல்) வெளியானது குறிப்பிட்டத்தக்கது.
