‘ஜெயிலர்’ விழா.: ஆன்லைனில் ப்ரீ டிக்கெட் பெற்று ரஜினி ரசிகர்களுக்கு விற்கும் அவலம்

‘ஜெயிலர்’ விழா.: ஆன்லைனில் ப்ரீ டிக்கெட் பெற்று ரஜினி ரசிகர்களுக்கு விற்கும் அவலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் மோகன்லால் சிவராஜ்குமார் ஜாக்கிசரஃப் சுனில் ரம்யா கிருஷ்ணன் தமன்னா ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் ‘ஜெயிலர்’.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று ஜூலை 28 மாலை 6 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

பொதுவாக இது போன்ற விழாக்களுக்கு அனைத்து மீடியாக்களையும் தயாரிப்பு நிறுவனம் அழைப்பது வழக்கம்.

ஆனால் சன் டிவி தயாரிக்கும் படங்களின் விழாக்களுக்கு மற்ற மீடியாக்களை அழைப்பதில்லை.

இந்த விழாவை முன்னிட்டு ஆன்லைனில் புக்கிங் செய்யும் ரசிகர்களுக்கு இலவசமாக அனுமதி சீட்டுகளை வழங்கியது சன் நிறுவனம். இது 15 நொடிகளில் விற்றதாகவும் பெருமை பேசிக்கொண்டது.

இந்த நிலையில் இதனை ஆன்லைனில் புக்கிங் செய்து இலவசமாக பெற்ற சிலர் தற்போது அந்த டிக்கெட்டுகளை ரஜினி ரசிகர்களுக்கு கூடுதல் கட்டணமாக விற்று வருகின்றனர்.

ரூ 500 – 1000 வரை டிக்கெட் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Jailer free pass tickets sold out for big price

GUILD கில்ட் பிரச்சினை குறித்து ஜாக்குவார் தங்கம் அறிக்கை.; என்னதான் நடக்குது.?

GUILD கில்ட் பிரச்சினை குறித்து ஜாக்குவார் தங்கம் அறிக்கை.; என்னதான் நடக்குது.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் சங்கத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது…

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக சில பிரச்சினைகள் சென்றுகொண்டு இருக்கிறது.

இதுகுறித்து சந்தா கட்டாத ஒரு சில உறுப்பினர்கள் என்னை பற்றி தவறாக சொல்லி வருகின்றனர். கடந்த 2015ல் நான் கில்ட் செயலாளராக பொறுப்பேற்றேன். அப்போது சங்கத்தில் சில ஆயிரங்கள்தான் இருந்தது. 2018ல் தலைவரான பின்பு இன்று ரூ.6.50 கோடி உள்ளது.

கில்ட் மூலம் நிறைய உதவிகள் செய்து வந்தோம். கில்ட் தற்போது நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். மேலும் உறுப்பினர்கள் மற்றும் சில நிர்வாகிகள் உதவியுடன் இவ்வளவு தூரம் வளர்ந்துள்ளது.

கடந்த 2018ல் நடந்த தேர்தலில் நான் தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். எனது அணியில் சிலரும் எதிர் அணியில் சிலரும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் வந்ததும் சங்கத்தை பூட்ட வேண்டும் என்றனர். நான் ஏன் பூட்ட வேண்டும் என்றேன்.

இதில் சில விஷயங்கள் நடக்கிறது பூட்டிவிட்டு மீண்டும் திறக்கலாம் என்றனர்‌. நான் முடியாது என்றேன். அப்போது தனியாக மீட்டிங் நடத்தினர். வங்கியில் உள்ள பணத்தை எடுக்க தங்களுக்கு தான் உரிமை உள்ளது என்றனர்.‌

ஏனென்றால் அவர்களது நோக்கம் பணத்தை எடுப்பது தான். வங்கியில் போலியாக லெட்டர் பேட் தயாரித்து பணத்தை எடுக்க முயற்சித்தனர். மீண்டும் ஒரு மீட்டிங் நடத்தி என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியதாக கூறினார்கள்.

நான் அவர்களை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினேன். இதனால் அவர்கள் நீதிமன்றம் சென்றனர். ஆனால் நீதிமன்றம் அவர்கள் உள்ளே வரக்கூடாது என்று உத்தரவிட்டது. அவர்கள் மீது பல புகார்கள் காவல்நிலையத்தில் உள்ளது.

மேலும் வடபழனியில் ரூ.13 கோடியில் சங்கத்திற்கு இடம் பார்த்தோம். இதன்‌ மூலம் கில்ட் உறுப்பினர்களுக்கு உதவி செய்ய நினைத்தோம். இது எதிரிகளுக்கும் சில சங்கங்களுக்கும் பிடிக்கவில்லை.

இதனால் என் மீது பல குற்றச்சாட்டுக்கள் வைத்தனர். கில்ட் பணத்தை எடுத்து விட்டேன் என்றனர். தற்போது அவர்கள் மீது நான் வழக்கு தொடுத்து எப்ஐஆர் போடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட உள்ளது.

சங்கத்திற்கு தேர்தல் வேண்டும் என்று நான்தான் நீதிமன்றத்தில் கேட்டேன். ஆனால் நான் தேர்தல் நடத்தமாட்டேன் என்கிறேன் என்று சொல்கின்றனர்.

சந்தா கட்டமுடியாத விரல்விட்டு எண்ணக்கூடிய சில உறுப்பினர்கள் தேர்தல் நடத்த விடமாட்டேன் என்கின்றனர். மேலும் கில்ட் சங்கம் போலவே இவர்களும் ஒரு சங்கத்தை தொடங்கி கோடிக்கணக்கில் வசூல் செய்தனர். இதையும் நீதிமன்றம் மூலம் தடுத்தோம்.

நான் இருக்கும் வரை பணத்தை எடுக்க முடியாததால் வேறு நபரை வைத்து எடுக்க பார்க்கிறார்கள். கொரோனாவுக்கு முன்பு என்னை அழைத்து பேரம் பேசினர். தற்போது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எல்லாம் தயாரிப்பாளர்கள் கிடையாது மீடியேட்டர்கள்தான்.

நான் 2023 வரை உள்ள உறுப்பினர்களை வைத்து தேர்தல் நடத்த வேண்டும் என்கிறேன். ஆனால் அவர்கள் 2013வரை உள்ள உறுப்பினர்களை வைத்து மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும் என்கின்றனர் இதுதான் தற்போது வரை பிரச்சினயாக உள்ளது.

மூன்று வருடமாக தேர்தல் நடத்த முயற்சித்து வருகிறேன். துரைசாமி என்பவர் மற்றவர் மாதிரி அழகாக போலி கையெழுத்து போடக்கூடியவர்” என்று தெரிவித்துள்ளார்.

ஜாக்குவார் தங்கம்

Stunt Master Jaguvar Thangam reveals Guild issues

மம்முட்டியுடன் இணைய மாட்டோமா.? ஐஸ்வர்யாவின் கனவை நிறைவேற்றிய ‘பஸூகா’

மம்முட்டியுடன் இணைய மாட்டோமா.? ஐஸ்வர்யாவின் கனவை நிறைவேற்றிய ‘பஸூகா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மாதம் ரிலீஸான தெலுங்கு மற்றும் பான் இந்தியா படமான ‘ஸ்பை’ சூப்பர் ஹிட் அடித்த வகையில் ஆந்திராவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகியிருக்கும் ஐஸ்வர்யா மேனன், கார்த்திகேயா, ‘ஸ்பை’ நாயகன் நிகில் சித்தார்த்தா உட்பட தெலுங்கின் முன்னணி ஹீரோக்களுடன் அடுத்தடுத்து பிசியாக வலம் வருகிறார்.

இந்நிலையில் மாபெரும் ஜாக்பாட்டாக மம்முட்டி படத்தின் நாயகியாக ஒப்பந்தமாகி, கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவரது காம்பினேஷனில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன்.

இதுகுறித்துப் பேசிய அவர்…

“நான் மம்முட்டியின் தீவிர ரசிகை. அவர் படத்தில் ஒரே ஒரு காட்சியிலாவது நடித்துவிட மாட்டோமா என்று கனவு கண்டு காத்திருந்திருக்கிறேன்.

தற்போது அந்தக் கனவு ‘பஸூகா’ படத்தின் மூலம் நனவாகி கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அவருடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறேன்.

இப்படத்தின் இளம் நாயகனுக்கு ஜோடியாக மிக முக்கியமான, கதைக்கு திருப்பம் தரும் ஒரு கேரக்டரில் நடிக்கிறேன்.

அறிமுக இயக்குநர் டீனோ டென்னிஸ் இயக்கும் இப்படத்தை தியேட்டர் ஆஃப் ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மம்முட்டி எத்தனை தேசிய விருதுகள், கேரள அரசின் மாநில விருதுகள் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் மனதை வென்ற மனிதர்… ஆனால் படப்பிடிப்பில் மிக எளிமையாக பாசமாக, அவர் பழகும் விதம் நெகிழச் செய்கிறது.

அவருடன் இணைந்து நடிப்பது வாழ்வின் மறக்க முடியாத அம்சமாக மாறியிருக்கிறது. இப்படம் கமிட் ஆன பிறகு வரிசையாக அடுத்தடுத்த படங்களுக்கும் தொடர்ந்து அழைப்பு வருகிறது” என்று உற்சாகமாகப் பேசுகிறார் ஐஸ்வர்யா மேனன்.

மம்முட்டி

Ishwarya Menon join hands with Mammootty

ரஜினி – மோகன்லால் – சிவராஜ்குமார் இணைந்த ‘ஜெயிலர்’ படத்தின் சென்சார் அப்டேட்

ரஜினி – மோகன்லால் – சிவராஜ்குமார் இணைந்த ‘ஜெயிலர்’ படத்தின் சென்சார் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சமீபத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் மூன்றாவது பாடலான “ஜுஜுபி” என்ற பாடலை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், இப்படத்தின் தணிக்கை குழு அளித்த சான்று குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘ஜெயிலர்’ படத்திற்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்று அளித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

ஜெயிலர்

Rajini’s ‘Jailer’ movie gets U/A certificate by Censor Board

தனுஷ் பிறந்தநாளில் டீசருடன் ரிலீஸ் தேதியை அறிவித்தது ‘கேப்டன் மில்லர்’ டீம்

தனுஷ் பிறந்தநாளில் டீசருடன் ரிலீஸ் தேதியை அறிவித்தது ‘கேப்டன் மில்லர்’ டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதிஷ், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்த டீசர் நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டீசர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜூன் 28) நள்ளிரவு 12.01 மணிக்குவெளியாகியது.

இந்த டீசர் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது

மேலும், ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

CAPTAIN MILLER -Teaser

Dhanush’s ‘Captain Miller’ movie Teaser Released

துல்கரின் ‘கிங் ஆஃப் கோதா’ பட ரிலீஸ் & சிங்கிள் புரோமோ அப்டேட்

துல்கரின் ‘கிங் ஆஃப் கோதா’ பட ரிலீஸ் & சிங்கிள் புரோமோ அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’.

இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, செம்பன் வினோத் ஜோஸ், பிரசன்னா, அனிகா சுரேந்தர், கோகுல் சுரேஷ், ஷம்மி திலகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ‘கிங் ஆஃப் கோதா’ டீசரை படக்குழு வெளியிட்டிருந்தது.

இப்படத்தின் முதல் பாடலான ‘கலாட்டாக்கார’ பாடல் இன்று (ஜூன் 28) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘கலாட்டாக்கார’ பாடலின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த புரோமோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கிங் ஆஃப் கோதா

Dulquer’s ‘King Of Kotha’ movie ‘Kalapakkaara’ Song Promo released

More Articles
Follows