‘கோல்மால்’ செய்ய மொரிஷியஸ் பறக்கும் ஜீவா – பாயல் & சிவா – தான்யா ஜோடிகள்

‘கோல்மால்’ செய்ய மொரிஷியஸ் பறக்கும் ஜீவா – பாயல் & சிவா – தான்யா ஜோடிகள்

மிருகா’ படத்தை தயாரித்த ஜாகுவார் ஸ்டுடியோசின் பி வினோத் ஜெயின் அதிக பொருட்செலவில் தயாரிக்கவுள்ள ‘கோல்மால்’ என்ற படத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் சிவா இணைந்து நடிக்கவுள்ளனர்.

இயக்குநர்கள் கே பாக்யராஜ், கே எஸ் ரவிகுமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்பு கன்னடத்தில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ள பொன்குமரன் இந்த தமிழ் திரைப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி & தனஞ்செயன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

“முழுநீள நகைச்சுவையுடன் கூடிய குடும்ப பொழுதுபோக்கு படமாக கோல்மால் இருக்கும், இப்படம் அனைவரையும் மகிழ்விக்கும், ரசிகர்களை அவர்களது குடும்பத்துடன் திரையரங்கிற்கு வரவழைக்கும்,” என்று பொன்குமரன் தெரிவித்தார்.

“ஜீவாவும் சிவாவும் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். அவர்கள் கூட்டணி அமைக்கும் பொழுது அது இன்னும் சிறப்பாக இருக்கும். பாயல் ராஜ்புத் மற்றும் தான்யா ஹோப் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

முரளி சர்மா, யோகி பாபு, சோனியா அகர்வால், மனோபாலா, கருணாகரன், ரமேஷ் கண்ணா, நரேன், ஜார்ஜ் மரியான், சஞ்சனா சிங், மொட்டை ராஜேந்திரன், பஞ்சு சுப்பு, சாது கோகிலா, விபின் சித்தார்த் மற்றும் கே எஸ் ஜி வெங்கடேஷ் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளனர்,” என்று அவர் தெரிவித்தார்.

அதிக பொருட்செலவில் மொரிஷியஸில் ‘கோல்மால்’ முழு படமும் படமாக்கப்படும் என்று பொன்குமரன் மேலும் கூறினார்.

“இந்த படத்தை தயாரிப்பதற்கு வினோத் ஜெயின் மிக்க மகிழ்ச்சியுடன் முன்வந்துள்ளார்,” என்று இயக்குநர் கூறினார்.

நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கி டிசம்பர் மாதம் நிறைவடையும். 2022-ம் ஆண்டின் முதல் பாதியில் படம் வெளியிடப்படும், என்று அவர் தெரிவித்தார்.

அருள் தேவ் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை எஸ் சரவணன் கையாளவுள்ளார்.

படத்தொகுப்பை டான் போஸ்கோவும், கலை இயக்கத்தை சிவாவும் மேற்கொள்ள, கவிஞர்கள் மதன் கார்க்கி மற்றும் விவேகா பாடல்களை இயற்றவுள்ளனர்.

எம் நரேஷ் ஜெயின் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆவார். எம் செந்தில் நிர்வாக தயாரிப்பு பணிகளை மேற்கொள்வார். டூனி வடிவமைப்பு பணிகளை செய்வார். படத்தின் மக்கள் தொடர்பை நிகில் முருகன் கவனிப்பார்.

தயாரிப்பு: ஜாகுவார் ஸ்டுடியோஸ் வினோத் ஜெயின்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: பொன்குமரன் (இவர் ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் கதாசிரியர் ஆவார்)

Jaguar Studios’ Vinod Jain to produce and Ponkumaran to direct Jiiva and Shiva-starrer fun-filled family entertainer ‘Golmaal’

முதன்முறையாக இணையும் இளையராஜா வெற்றிமாறன் கௌதம் மேனன் விஜய்சேதுபதி

முதன்முறையாக இணையும் இளையராஜா வெற்றிமாறன் கௌதம் மேனன் விஜய்சேதுபதி

இளையராஜா இசையில் வெற்றிமாறன் இயக்கத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்து வரும் படம் ‘விடுதலை’.

முக்கிய கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார்.

இப்படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க ஒளிப்பதிவாளராக வேல்ராஜ் & சண்டை இயக்குநராக பீட்டர் ஹெய்ன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இதில் காவல்துறை அதிகாரியாக கவுதம் மேனன் நடித்திருக்கிறாராம்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் & ருத்ர தாண்டவம் படங்களில் கௌதம் மேனன் நடிப்பு பெரியளவில் பேசப்பட்ட நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் கவுதம் நடிப்பது இதுவே முதன் முறை.

அடுத்தாண்டு ‘விடுதலை’ படம் விடுதலை (ரிலீஸ்) ஆகும் எனத் தெரிகிறது.

இப்பட பணிகளை முடித்துவிட்டு தாணு தயாரிக்க சூர்யா நடிக்கவுள்ள ‘வாடிவாசல்’ படத்தில் இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.

Gautham Menon plays important role in Vetrimaaran’s next

‘டாக்டர்’ செம டக்கர்..; விஜய்யை இயக்கி விட்டு மீண்டும் சிவகார்த்திகேயனை இயக்கும் நெல்சன்.; புரொடியூசர் இவரா?

‘டாக்டர்’ செம டக்கர்..; விஜய்யை இயக்கி விட்டு மீண்டும் சிவகார்த்திகேயனை இயக்கும் நெல்சன்.; புரொடியூசர் இவரா?

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘டாக்டர்’.

நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோ சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன், வினய், யோகி பாபு, கிங்ஸ்லி, அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அக்டோபர் 9ல் ரிலீசான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த மாபெரும் வெற்றியால் நெல்சன் இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்க பிரபல லைகா நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

தற்போது சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்து வரும் ‘டான்’ படத்தையும் லைகா இணைந்து தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தை அடுத்து, இந்தப் படத்தை நெல்சன் இயக்குவார் எனத் தெரிய வந்துள்ளது.

Sivakarthikeyan and Nelson Dilip Kumar joins again

கொரோனா காலத்தில் சிரிப்பு மருந்து தந்த ‘டாக்டர்’.: பாராட்டி தள்ளும் ஷங்கர் & SR பிரபு

கொரோனா காலத்தில் சிரிப்பு மருந்து தந்த ‘டாக்டர்’.: பாராட்டி தள்ளும் ஷங்கர் & SR பிரபு

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸுடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம் ‘டாக்டர்’.

இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

இவர்களுடன் வினய் ராய், யோகி பாபு, இளவரசு, மிலிந்த் சோமன், அருண் அலெக்சாண்டர், சுனில் ரெட்டி, ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

2 மணி 28 நிமிடம் ஓடக்கூடிய படம் இந்த படம் கடந்த சனிக்கிழமை அக்டோபர் 9ல் தியேட்டர்களில் ரிலீசானது.

கொரோனா இரண்டாம் அலைக்குப் பிறகு மக்கள் அதிகமாக தியேட்டர்களுக்கு வந்து ‘டாக்டர்’ படம் பார்ப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் திரையுலக பிரபலங்களும் படத்தைப் பார்த்து விட்டுப் படக்குழுவினருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

பிரபலங்களின் ட்வீட் பாராட்டு மழை இதோ…

Director Producer Shankar

#Doctor gave us the best laughter medicine in these covid-times. Hats off to Director @Nelsondilpkumar for making everyone ROFL. Thanks to @Siva_Kartikeyan , @anirudhofficial and the whole team for this family entertainer! Happy to see the theatrical experience is back

Producer SR Prabu

#Doctor film was full on fun! Loved it!! Happy to see all the theatres going with full capacity!! Congratulations @Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @KVijayKartik @kjr_studios and the team!!

Celebrities Shankar and SR Prabhu praises Sivakarthikeyan’s Doctor

பெரிய படமா இருந்தாலும் ஒரே மாசம்தான் சூட்டிங்…; டைரக்டர் கண்ணன் போடும் கண்டிசன்

பெரிய படமா இருந்தாலும் ஒரே மாசம்தான் சூட்டிங்…; டைரக்டர் கண்ணன் போடும் கண்டிசன்

2008 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம் கொண்டான்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆர்.கண்ணன், அப்படத்தை தொடர்ந்து ‘கண்டேன் காதலை’, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியதோடு, தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

மசாலா பிக்ஸ் என்ற தனது நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து இயக்கி வரும் ஆர்.கண்ணன், இயக்கத்தில் ‘காசேதான் கடவுளடா’ மற்றும் தள்ளிப் போகாதே’ ஆகிய இரண்டு படங்களில் உருவாகி வருகின்றன.

அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தள்ளிப் போகாதே’ படத்தில் அமிதாஷ், ஜெகன் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் காளி வெங்கட், ஆடுகளம் நரேன், வித்யுலேகா ராமன், ஆர்.எஸ்.சிவாஜி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இளமை துள்ளும் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற படத்தின் ரீமேக் என்பதால், தமிழிலும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ‘தள்ளிப் போகாதே’ படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் படம் குறித்து பேசிய இயக்குநர் ஆர்.கண்ணன்,…

“நான் இந்த மேடையில் நிற்பதற்கு தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் சார் தான் காரணம். இன்று இயக்குநராக பத்துக்கு மேற்பட்ட படங்கள் இயக்கியிருப்பதோடு, படம் தயாரிப்பிலும் ஈடுபட்டு வெற்றிகரமாக பயணிப்பதற்கு அவர் தான் காரணம். அவருடைய சரியான திட்டமிடலை பின்பற்றி தான், நான் இயக்கி தயாரிக்கும் படங்களின் பணிகளை மேற்கொண்டு வருகிறேன்

ஒரு படத்தை தொடங்கும் சரியான திட்டமிடலோடு தொடங்கினால், படப்பிடிப்பை குறுகிய நாட்களில் முடித்துவிடலாம். எப்படிப்பட்ட பெரிய படமாக இருந்தாலும் நான் 30 நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிடுவேன். அதற்கு காரணம் சரியான திட்டமிடல் தான். இந்த திட்டமிடலை எனக்கு கற்றுக்கொடுத்த டி.ஜி.தியாகராஜன் சார், மணிரத்னம் சார் ஆகியோருக்கு நன்றி.

நான் டி.ஜி.தியாகராஜன் சாரிடம் படம் பண்ண கதை சொல்லிவிட்டு இரண்டு வருடங்கள் காத்திருந்தேன். 250 முறை கதை சொல்லியிருப்பேன். அப்படிப்பட்ட ஒரு முறையில் இயக்குநரானதால் தான் என்னால் இத்தனை படங்களை இயக்க முடிகிறது.

ஆனால், இப்போது வருபவர்கள் ஒன்று இரண்டு படங்களில் பணியாற்றி விட்டு இயக்குநராகி விடுகிறார்கள். என்னிடம் பணியாற்றிய ஒருவர் வெறும் பத்து நாட்கள் பணியாற்றிவிட்டு படம் இயக்க சென்றுவிட்டார். அப்படி ஒரு அனுபவத்தை வைத்துக்கொண்டு அவர் எந்த மாதிரியான படம் எடுப்பாரோ, என்று தெரியவில்லை.

‘தள்ளிப் போகாதே’ அனைவருக்கும் பிடித்தமான ஒரு படமாக இருக்கும். அதர்வா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரது கெமிஸ்ட்ரி மற்றும் வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் அமிதாஷ் கதாப்பாத்திரங்கள் ரசிகர்களை வெகுவாக கவரும்.” என்றார்.

நடிகர் அதர்வா பேசுகையில்…

“தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தை தமிழில் பண்ண வேண்டும், என்று நான் விரும்பியதும் கண்ணன் சார் தான் என் நினைவுக்கு வந்தார். அவர் படத்தை வேகமாக எடுத்தாலும், மிக் அழகாக எடுக்க கூடியவர்.

இந்த படத்திற்காக நான் தாடி வளர்க்க வேண்டி இருந்தது. அதனால், ஒரு 20 நாட்கள் பிரேக் எடுத்துக்கொண்டேன். அப்போது தாடி வளர்ந்தது போதுமா? என்று கேட்பதற்காக கண்ணன் சாருக்கு போன் பண்ணேன், அங்கே சார்ட் கட் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அவரிடம் அது குறித்து கேட்ட போது, ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறேன், என்றார். ஆச்சரியமாக இருந்தது. அவர் அப்படி தான் எப்போதும் வேகமாக இருப்பார். ஆனால், காட்சிகளை தரமாக எடுப்பார். இந்த படத்திற்கு கபிலன் சார் பாடல்களையும், வசனமும் எழுத ஒப்பந்தமானவுடன் படம் மிகப்பெரிய படமாக மாறிவிட்டது.

அதேபோல், ஹீரோவுக்கு நிகராக வில்லன் வேடம் இருக்கும். அதற்கு சரியான நடிகரை நடிக்க வைக்க வேண்டும், என்று நினைத்தோம். எங்களின் எதிர்ப்பார்ப்பை அமிதாஷ் மிக சரியாக பூர்த்தி செய்திருக்கிறார். படம் நிச்சயம் ரசிகர்களை கவரும்.” என்றார்.

கோபி சுந்தர் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு என்.சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா ஆர்.கே படத்தொகுப்பு செய்ய, கபிலன் வைரமுத்து பாடல்கள் மற்றும் வசனம் எழுதியுள்ளார். ஸ்டண்ட் சில்வா ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, சதீஷ் கிருஷ்ணன் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

Director Kannan talks about his upcoming film Thalli Pogathey

இனி அவர் விஷயத்தில் நானும் என் விஷயத்தில் அவரும் தலையிட மாட்டோம்.. – விமல்

இனி அவர் விஷயத்தில் நானும் என் விஷயத்தில் அவரும் தலையிட மாட்டோம்.. – விமல்

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான பசங்க படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி களவாணி படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விமல்.

மினிமம் கியாரண்டி ஹீரோ என்கிற பெருமையைப் பெற்ற இவர் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார்.

கடந்த சில வருடங்களில் அவரது படத்தை தயாரித்த வகையிலும் அவரது சில படங்களை வினியோகம் செய்த வகையிலும் தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கும் விமலுக்கும் சில பிரச்சனைகள் இருந்து வந்தன.

இந்த நிலையில் அவற்றை சுமுகமாக முடிவுக்கு கொண்டு வரும் விதமாக நடிகர் விமல் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

இதுபற்றி நடிகர் விமல் கூறும்போது…

“சிங்காரவேலனுக்கும் எனக்கும் எனது படங்கள் தொடர்பாக ஏற்பட்ட சில பிரச்சனைகள் இருந்தன. அவை எனது அடுத்தடுத்த படங்கள் சரியான சமயத்தில் வெளியாவதற்கு தடைக்கற்களாக இருந்தன.

தற்போது அவற்றை சட்டரீதியாகவும் பரஸ்பர புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாகவும் முடிவுக்குக் கொண்டு வந்து விட்டோம். இனி அவர் விஷயத்தில் நானும் என் விஷயத்தில் அவரும் எந்த தலையீடும் செய்வதில்லை என முடிவு செய்து உள்ளோம்.

மேலும் தொடர்ந்து நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து ரசிகர்களை மகிழ்விக்கும் முயற்சி ஒன்றையே நோக்கமாகக் கொண்டு படங்களில் நடிப்பேன்.

அதுமட்டுமல்ல, தயாரிப்பாளர்களுக்கு எந்தவித சங்கடங்களையும் தராத, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் விரும்பும் ஹீரோவாக இனி என்னுடைய திரைப் பயணம் தொடரும்” என்று கூறியுள்ளார் நடிகர் விமல்.

Fight between Actor Vimal and Producer Singara Velan

More Articles
Follows