காலா படத்தை பார்க்க ஊழியர்களுக்கு லீவு கொடுத்த ஐடி நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை மறுநாள் ஜீன் 7ல் வெளியாகிறது.

இப்படத்திற்கு இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு சில தியேட்டர்களை தவிர பல இடங்களில் முதல் நான்கு நாட்களுக்கு தியேட்டர்கள் இப்போதே புக் ஆகிவிட்டது.

கேரளாவில் மட்டும் 300க்கும் மேற்ப்பட்ட தியேட்டர்களில் இப்படம் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் இப்படம் வெளியாகும் தினத்தன்று தன் கம்பெனி ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளித்துள்ளது கேரளாவை சேர்ந்த ஒரு ஐடி நிறுவனம்.

அந்த சர்குலரில் உங்கள் ஒவ்வொருவரின் கோரிக்கைக்காக காலா ரிலீஸ் அன்று கம்பெனிக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IT company granted holiday for their company to watch Kaala on its release date

அந்த நிறுவனத்தின் காலா ஹாலிடே சர்க்குலர் இதோ….

Big News: காலாவை திரையிட பாதுகாப்பு கொடுங்கள்; தனுஷ் வழக்கில் கோர்ட் தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

தனுஷ் தயாரித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் ஜீன் 7-ம் தேதி வெளியாகிறது.

காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதால், கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கன்னட அமைப்பினர் கூறி வருகின்றனர்.

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியும் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று கூறிவிட்டார்.

எனவே, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இப்பட தயாரிப்பாளர் தனுஷ் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் 140 கோடி ரூபாய் பட்ஜெட்டில் காலா உருவாகியுள்ளது.

அதனால் ‘காலா’ படத்தை கர்நாடகாவில் திரையிடப்படுவதற்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும், என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் சற்றுமுன் விசாரணைக்கு வந்தது

இவ்வழக்கு விசாரித்த நீதிமன்றம் காலா படத்தை திரையிட கட்டாயப்படுத்த முடியாது என தீர்ப்பளித்துள்ளது.

ஆனால் தனுஷ் தரப்பு வழக்கறிஞர் தொடர்ந்து வாதாடினார்.

எனவே இறுதியாக படம் திரையிடப்படுவதற்கு அரசு பாதுகாப்பளிக்க என அவர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

Karnataka Govt must give protection to Kaala screening theatres Order by High Court

சினிமாவை கலாய்த்த தமிழ்படம்2-க்கு பாராட்டு; அரசியலை கலாய்த்த “டிராபிக் ராமசாமி*க்கு மிரட்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி முதல் விஜய், அஜித் வரை எல்லா படங்களையும் கலாய்த்து தமிழ்ப்படம் 2.0 படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.

அமுதன் இயக்கியுள்ள இப்படத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார்.

அதில் சினிமாவை மட்டுமே கலாய்த்து இருந்தனர். இதற்கு ரசிகர்கள் தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் விக்கி இயக்கத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ள டிராபிக் ராமசாமி படத்ல் கோமாளி என்ற பாடலில் இந்திய நாட்டில் தற்போது நடந்து வருகின்ற அனைத்து அரசியல் நிகழ்வுகளையும் கலாய்த்துள்ளனர்.

எனவே அந்த படக்குழுவினர் மிரட்டல்கள் வரத் தொடங்கியுள்ளது.

இந்த பாடல் குறித்து விவரம் வருமாறு…

மத்திய மாநில அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களின் மீது காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் டிராபிக் ராமசாமியின் கோமாளி பாடல் நேற்று வெளியானது. உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை எல்லாவற்றையும் நக்கலடிக்கும் பாடலாக இது அமைந்திருக்கிறது.

பெரியார் பற்றி பதிவிட்டு பின் அட்மின் செய்த தவறு என்று சொன்ன எச்.ராஜா முதல் ஓட்டுக்கு பணம் வாங்கும் கலாச்சாரம் வரை பாடலாசிரியர் கபிலன்வைரமுத்து போட்டு தாக்கியிருக்கிறார்.

பாலமுரளி பாலு இசை அமைத்திருக்கிறார். இப்பாடல் வெளியானது முதல் பல்வேறு தரப்பில் இருந்து படக்குழுவினர்க்கு மிரட்டல்கள் வந்துகொண்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

Komaali 2nd Single Track from Traffic Ramasamy made an issue

ஆன்மிக அரசியல் ஒரு பிசினஸ்; ரஜினி மீது சத்யராஜ் மறைமுக தாக்கு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைஞர் கருணாநிதி அவர்களின் 95வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சத்யராஜ் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் ரஜினியின் ஆன்மிக அரசியலை கிண்டலடித்து பேசினார்.

அவர் பேசியதாவது….

நாம் எங்கே ஹோட்டல் வைக்க திட்டமிட்டுவோம்? மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சைவ ஹோட்டல் அல்லது அசைவ ஹோட்டல் வைக்க திட்டமிட்டுவோம்.

அதுபோல் வெற்றிடம் இருப்பதாக கூறி அரசியலுக்கு வருகிறார் ஒருவர் (ரஜினி). அந்த ஆன்மிக அரசியல் ஒரு பிசினஸ் அவ்வளவுதான்.

சேவை மனப்பான்மையுடன் அரசியலுக்கு வரவேண்டும்” என சத்யராஜ் பேசினார்.

Rajinis Aanmeega Arasiyal is like business says Actor Sathyaraj

என் 43 வருட சினிமா கேரியரில் காலாவுக்கு புரோமோ தேவையில்லை… -ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாளை மறுநாள் ஜீன் 7ல் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா ரிலீஸ் ஆகவுள்ளது.

பெரும்பாலும் ரஜினி படங்கள் வெளியாகும்போது அவர் அரசியல் குறித்து ஏதாவது பேசுவார். பின்பு ஆஃப் ஆகிவிடுவார். அடுத்த படம் வரும்போது எதாவது சர்ச்சையாக பேசி தன் படத்திற்கு புரோமோ செய்வார் என்ற குற்றச்சாட்டு அதிகளவில் உள்ளது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் காலா பிரஸ் மீட்டை முடித்துக் கொண்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பிய போது ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களை ரஜினி சந்திக்க சென்றது காலா படத்தின் புரோமோசனுக்கா..? என்றும் சிலர் கேள்விகளை முன் வைத்தனர்.

அதற்கு சிரித்துக் கொண்டே ரஜினி பேசியதாவது…

கடவுள் அருளால், மக்கள் அன்பால் என் ரசிகர்கள் ஆதரவால் இந்த வயசுல என் 43 வருட சினிமா கேரியர்ல என் படங்களுக்கு புரோமோசன் செய்ய வேண்டிய தேவையில்லை.

காவிரி நீர் தொடர்பாக கர்நாடக முதல்வரை கமல் சந்தித்தது நல்லதுதான். பேச்சுவார்த்தையால் எதையும் முடிவுக்கு கொண்டு வரலாம். நிறைய சான்றோர்கள் அதை தான் செய்துள்ளார்கள்.” என்றார்.

I dont want to promote my movies since i am 43 years in Cinema says Rajini

காலாவுக்கு எதிர்ப்பு கம்மிதான்; இன்னும் எதிர்பார்தேன்.. ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கி தனுஷ் தயாரித்துள்ள காலா திரைப்படம் நாளை மறுநாள் ஜீன் 7ல் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு காவிரி பிரச்சினையால் கர்நாடகாவில் எதிர்ப்புகள் வந்தாலும் உலகமெங்கும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் தெலுங்கு பதிப்புக்கான காலா பிரஸ்மீட்டில் கலந்துக் கொண்டார் ரஜினிகாந்த்.

இதனை முடித்துவிட்டு சென்னை திரும்பியபோது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது….

காலா படத்திற்கு கர்நாடகாவில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

கர்நாடக முதல்வர் நடவடிக்கை எடுப்பார். மேலும் நான் மதிக்கும் தேவகௌடா அவர்கள் இது குறித்து பேசுவார் என நம்புகிறேன்.

இந்த எதிர்ப்பு கம்மிதான். நான் இன்னும் அதிகமா எதிர்பார்த்தேன்.

படம் நன்றாக இருந்தால் மக்கள் பார்க்க போகிறார்கள். இல்லையென்றால் அவ்வளவுதான்.

சினிமா வேற அரசியல் வேற. இரண்டையும் எப்போதும் இணைத்து பார்க்கக்கூடாது” என ரஜினி ஓபனாக பேசினார்.

I expected more opposition for Kaala movie Rajinikanth open talk

More Articles
Follows