சினிமாவுக்கு முழுக்கு போடும் விக்ரம்; வதந்தியை பரப்பும் மீடியாக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா இசையில் பாலா இயக்கிய சேது படத்தின் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரீ ஆனவர் விக்ரம்.

சேது வெற்றியால் இவர்களை ரசிகர்கள் சீயான் விக்ரம் என்றே அழைத்தனர்.

அதன்பின்னர் தில், ஜெமினி, சாமி, ஐ என பல அதிரடி ஹிட்டுகளை கொடுத்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.

அண்மையில் இவரின் மகன் துருவ்வை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஆதித்ய வர்மா படத்தை மேற்பார்வையிட்டு வந்தார். இதனால் சில படங்களில் நடிப்பதையும் தவிர்த்து வந்தார்.

தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் திடீரென இந்த இரு படங்களை முடித்து விட்டு விக்ரம் நடிப்பதிலிருந்து ஓய்வுப்பெற போகிறார் என்றும் தன் மகனின் எதிர்காலத்தை முன்னேற்ற அவர் இப்படியொரு தீர்மானத்திற்கு வந்திருக்கிறார் என தகவல் பரவியது.

முற்றிலும் தவறான இந்த செய்தியை எதையும் ஆராயாமல் முன்னணி மீடியாக்களே செய்தியாக வெளியிட்டது. நம் தளத்தில் வெளியாகவில்லை.

தற்போது இதை விக்ரம் தரப்பில் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

இது முற்றிலும் வதந்தி, விக்ரம் அடுத்தடுத்து படங்களில் நடிக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா மீது தீராத காதல் கொண்டவர் நடிகர் விக்ரம். சினிமாவுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.

அப்படியிருக்கையில் அவரை பற்றி எப்படிதான் இதுபோன்ற செய்திகளை உண்மையை அறியாமல் சிலர் வெளியிடுகிறோர்களோ என தெரியவில்லை.

‘சந்திரமுகி 2’ படத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க மறுக்க என்ன காரணம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த படம் ‘சந்திரமுகி’.

இந்த படம் பல சாதனைகளை படைத்தது. சென்னையில் மட்டும் ஒரு தியேட்டரில் 850 நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது.

இந்த விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

தற்போது 15 வருடங்களுக்கு பின் சந்திரமுகி 2வது பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார்.

முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே படத்தை இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

ஆனால் சந்திரமுகி 2 படத்தில் ரஜினி நடிக்கவில்லையே அது ஏன்? என ரஜினி ரசிகர்களே குழம்பியிருந்தனர்.

அண்மைக்காலமாக ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், முருகதாஸ், சிவா உள்ளிட்ட புது இயக்குனர்களுடன் பணியாற்றி வருகிறார் ரஜினி.

விரைவில் அரசியலுக்கு ரஜினிகாந்த் வரவிருப்பதால் மீண்டும் தன்னை இயக்கிய இயக்குனர்களுடன் இணைய விரும்பவில்லை என கூறப்படுகிறது.

தல ரசிகர்களை கலாய்த்தாலும் அஜித்தை பாராட்டிய கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித் மீது நன்மதிப்பு வைத்திருந்தாலும் அவரின் ரசிகர்களை அடிக்கடி கலாய்ப்பது கஸ்தூரியின் வேலை.

இவருக்கும் அஜித் ரசிகர்களுக்கும் அடிக்கடி ட்விட்டரில் சண்டை வருவது சகஜம்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நடிகர் அஜித் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் நிதியுதவியாக அளித்துள்ளார்.

மேலும் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கியிருந்தார் அஜித்.

இந்த நிலையில் அஜித்தை பாராட்டியுள்ளார் கஸ்தூரி.

“தல அஜித் அவர்களின் நல்ல மனசுக்கு 1.25 கோடி நன்றி. நீடூழி வாழ்க. அஜித்துக்கு தாராள மனசு. 1.25 கோடி ரூபாய் தான் கொரோனா நிவாரண நிதிக்காக தமிழ் சினிமா துறையில் இருந்து ஒருவர் வழங்கும் அதிக நிதி என நான் நினைக்கிறேன்.

பெப்சிக்காக 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியதற்காக ஸ்பெஷல் நன்றி”, என கஸ்தூரி அஜித் பாராட்டியுள்ளார்.

நடிகை ராஷ்மிகா மீது செம கிரஷ்: தாராள பிரபுவின் தாராள வார்த்தை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஷ்மிகா மந்தனா… இந்த பெயரை கேட்டாலே தெலுங்கு மற்றும் கன்னட ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

இவர் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இங்கும் இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தை ரெமோ டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார்.

இவர் போட்டோக்கள் இணையத்தில் வெளியானாலே தென்னிந்திய ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் ராஷ்மிகா மீது தனக்கு கிரஷ் இருப்பதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் ரசிகர்களுடன் உரையாடும் போது தெரிவித்துள்ளார்.‘

ஒரு நடிகர் இப்படி ஓபனாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரிஷ் கல்யாண் நடித்த தாராள பிரபு படம் அண்மையில் வெளியானது. கொரோனா ஊரடங்கு உத்தரவால் படத்தின் திரையிடல் நின்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷா விலக இதுதான் காரணம்..; சீக்ரெட்டை உடைத்த சிரஞ்சீவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி.

இதில் நாயகியாக முதலில் த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

ஆனால் திடீரென இந்த படத்திலிருந்து விலகினார்.

தற்போது த்ரிஷாவுக்கு பதிலாக காஜல் அகர்வால் இதில் நாயகியாக இணைந்துள்ளார்.

இந்த நிலையில் த்ரிஷா ஏன் விலகினார்? என்ற சீக்ரெட்டை உடைத்துள்ளார் சிரஞ்சீவி.

“மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதற்காக த்ரிஷா மொத்தமாக கால்ஷீட் கொடுத்து விட்டதால் ‘ஆச்சார்யா’ படத்திலிருந்து விலகி விட்டார்.

மற்றபடி பிரச்சனை எதுவும் இல்லை” என கூறியுள்ளார் சிரஞ்சீவி.

கொரானா நிவாரண நிதிக்கு ரூ 3 கோடியை வாரி வழங்கிய லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் மட்டுமே சிலர் ஹீரோக்களாக வாழும் தருணத்தில் நிஜத்திலும் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ்.

இவர் எண்ணற்ற அனாதை குழந்தைகளை தத்தெடுத்து தன் அறக்கட்டளை சார்பில் வளர்த்து வருகிறார்.

ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை என்கிற பெயரில் அறக்கட்டளையைத் தொடங்கி சேவை செய்து வருகிறார்.

பார்வையற்ற மற்றும் இதர மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகம் உதவி வருகிறார். அவர்களின் சிகிச்சைக்கும் லட்சங்களை செலவு செய்து வருகிறார்.

மேலும் ஏழைகள் வீடு கட்டவும், வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் தனது அறக்கட்டளை மூலம் உதவி வருகிறார்.

இந்த நிலையில் கொரோனா நிவாரண தொகையாக 3 கோடி ரூபாயை தருவதாக அறிவித்துள்ளார் லாரன்ஸ்.

– பிரதமரின் PM Cares நிதிக்கு 50 லட்சம் ரூபாய்
– முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய்
– FEFSI சங்கத்திற்கு 50 லட்சம் ருபாய்
– நடன கலைஞர்கள் சங்கத்திற்கு 50 லட்சம் ரூபாய்
– மாற்று திறனாளிகளுக்கு உதவ 25 லட்சம் ரூபாய்
– ராயபுரம் பகுதியில் உள்ள தினகூலி தொழிலாளர்களுக்கு 75 லட்சம் ருபாய்

என மொத்தமாக 3 கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக ராகவா லாரன்ஸ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் ரஜினிகாந்த் ஆசியுடன் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கவுள்ளதை அறிவித்துள்ளார். இந்த 3 கோடி ரூபாய் சந்திரமுகி 2 பட அட்வான்ஸ் தொகை எனவும் கூறப்படுகிறது.

Lawrence donates Rs 3 crore to Covid 19 relief fund

More Articles
Follows