‘துணிவு’ படம் பேங்க் கொள்ளை கதை? நெகட்டிவ் ரோலில் அஜித்.? வினோத் சொல்லும் சீக்ரெட்

‘துணிவு’ படம் பேங்க் கொள்ளை கதை? நெகட்டிவ் ரோலில் அஜித்.? வினோத் சொல்லும் சீக்ரெட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்து வரும் ‘துணிவு’ படத்தை இயக்கியுள்ளார் வினோத்.

இந்த படம் பேங்க் கொள்ளை சம்பவத்தை பற்றிய கதை என கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வினோத் தன் சமீபத்தை பேட்டியில் ‘துணிவு’ படத்தின் கதை பற்றி தெரிவித்துள்ளார்.

அதில்… “இந்த படத்தின் கதையை பற்றி இப்போது சொல்ல முடியாது. அது மற்றவர்களின் யூகமாகவே இருக்கட்டும்.

ஒரு பேங்க் போன்ற செட் போட்டது உண்மைதான். எனவேதான் இந்த படத்தின் கதை பேங்க் கொள்ளை பற்றியது என்று செய்திகள் வலம் வந்தன.

இதில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறாரா அஜித்? எனவும் பேச்சுக்கள் எழுந்துள்ளன அதைப்பற்றி தெரிவித்தால் மீண்டும் மங்காத்தா போன்ற கதையா? என்ற யூகங்கள் எழும்.

எனவே துணிவு ரிலீஸ் வரை காத்திருங்கள்” என தெரிவித்துள்ளார் வினோத்.

‘துணிவு’ வினோத் இயக்கத்தில் கதையின் நாயகனாக யோகி பாபு

‘துணிவு’ வினோத் இயக்கத்தில் கதையின் நாயகனாக யோகி பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சதுரங்க வேட்டை’ & ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் வினோத்.

இதனையடுத்து ‘நேர்கொண்ட பார்வை’ & ‘வலிமை’ & ‘துணிவு’ ஆகிய மூன்று அஜித் படங்களை தொடர்ந்து இயக்கி வந்துள்ளார்.

‘துணிவு’ படம் விரைவில் வெளியாக உள்ளது

இவர் அடுத்ததாக கமல் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இவரின் இயக்கத்தில் கதையின் நாயகனாக நடிக்க உள்ளார் யோகி பாபு்

இந்த படம் ஒரு திருடனுக்கும் காவல்துறை அதிகாரிக்கும் நடக்கும் கதையாம்.

இதனை ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் எச் வினோத்.

3வது முறையாக இணையும் விஜய்சேதுபதி – மணிகண்டன்; ஆனால் இது படமல்ல.!

3வது முறையாக இணையும் விஜய்சேதுபதி – மணிகண்டன்; ஆனால் இது படமல்ல.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வித்தியாசமான கதையமைப்பில் உருவாக்கப்பட்ட ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

மணிகண்டன் இயக்கிய இந்த படத்தில் முக்கிய வேடத்தில் யோகி பாபு நடித்திருந்தார் .

இதனையடுத்து மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’ என்ற படத்திலும் நட்புக்காக சிறப்பு தோற்றத்தில் விஜய்சேதுபதி மற்றும் யோகி பாபு நடித்திருந்தனர்.

இந்த நிலையில் விரைவில் 3வது முறையாக இந்த கூட்டணி இணைய உள்ளது.

ஆனால் இந்த முறை இது ஒரு திரைப்படமாக உருவாகாமல் வெப் தொடராக உருவாக்க உள்ளதாம்.

எனவே விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

ரத்தன் டாடாவின் வாழ்க்கையை படமாக்குகிறாரா சுதா கொங்கரா.?

ரத்தன் டாடாவின் வாழ்க்கையை படமாக்குகிறாரா சுதா கொங்கரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரித்து நடித்த ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா.

இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானாலும் 5 தேசிய விருதுகளை பெற்று தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்தது.

சிறந்தப் படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை என்றப் பிரிவுகளில் தேசிய விருதுகளைப் பெற்றது.

தற்போது இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து தயாரித்து வருகிறார் சூர்யா. மேலும் அவர் இதில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

அக்‌ஷய் குமார் நடிப்பில் இந்தியில் ரீமேக் இயக்ககுகிறார் சுதா கொங்காரா.

இதன்பின்னர் பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா வாழ்க்கையை தழுவி புதிய படத்தை சுதா இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் நம் FILMISTREET தளத்தில் அப்படி ஒரு தவறான செய்தியை பதிவிடவில்லை.

இந்த தகவலை இயக்குநர் சுதா கொங்கரா மறுத்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில், “நான் மிகவும் போற்றும் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை.

என் அடுத்த படம் குறித்த உங்கள் ஆர்வத்திற்கு நன்றி.. ” என பதிவிட்டுள்ளார் சுதா.

சினிமாவில் செஞ்சுரி அடித்தார் நடிகர் கூல் சுரேஷ்.; குஷியாகும் ரசிகர்கள்

சினிமாவில் செஞ்சுரி அடித்தார் நடிகர் கூல் சுரேஷ்.; குஷியாகும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கூல் சுரேஷ்.. இவரைப் பற்றி அறிமுகம் தேவையில்லை.. காரணம் யூட்யூப்பில் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இவர் தான் எப்போதும் ட்ரெண்டிங் நாயகனாக உள்ளார்.

தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.

தற்போது திரைப்பட நிகழ்ச்சிகளில் பேசும் பொருளாக மாறிவிட்டார். ஒரு புதிய படம் வெளியாகும் போது இவரது விமர்சனத்தை கேட்கவே மீடியாக்களும் ரசிகர்களும் காத்துக் கிடக்கின்றனர்.

வெந்து தணிந்தது காடு.. சிம்புவுக்கு வணக்கத்தை போடு.. என ட்ரெண்டிங் ஆன இவர் தற்போது எஸ் டி ஆரின் பத்து தல.. நாம தான் கெத்து தல..” என ட்ரெண்டிங் செய்து வருகிறார்.

இவை இல்லாமல் திருமண நிகழ்ச்சி.. கடை திறப்பு விழாக்கள்.. புதிய பட இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கும் இவர்தான் சிறப்பு விருந்தினர்.

இந்த நிலையில் இவர் தற்போது நூறாவது படத்தை நெருங்கி விட்டார்.

மோகன் ஜீ இயக்கத்தில் செல்வராகவன் நட்டி நடித்துள்ள ‘பகாசூரன்’ என்ற படம் கூல் சுரேஷ் நடிப்பில் 100வது படமாக வளர்ந்துள்ளது.

இந்தப் படத்தின் டிரைலர் நாளை டிசம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

திரையுலகில் கூல் சுரேஷ் செஞ்சுரி அடித்து உள்ளதால் விரைவில் அவரது ரசிகர்கள் இதை பெரும் விழாவாக கொண்டாடினாலும் ஆச்சரியம் இல்லை.

அஜித் – விக்னேஷ்சிவன் இணையும் AK-62 பட அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி

அஜித் – விக்னேஷ்சிவன் இணையும் AK-62 பட அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படம் அடுத்த வருடம் 2023 பொங்கல் தினத்தில் வெளியாகிறது.

இப்பட ஷூட்டிங் முடியும் முன்பே அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது என அறிவிப்பு வந்தது.

இந்த நிலையில் AK62 (ஏகே 62) படத்தின் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

இவரது சமீபத்திய பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது..

“அஜித் படத்தை ஒப்புக்கொண்ட பின்னர் விக்னேஷ் சிவனிடம் பேசினேன்.

அப்போது அப்பட கதை குறித்து என்னிடம் விவரித்தார். மிகவும் இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. அந்த படத்திற்காக நான் காத்திருக்கிறேன்.. எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடிதான்’ மற்றும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களில் விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows