அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்த இயக்குனர் வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான்

அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்த இயக்குனர் வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விடுதலை’ படத்தின் முதல் பாகத்திற்கு முழு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வெற்றிமாறன் திரைக்கதையை வடிவமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, காடுகளில் தேடப்படும் வாத்தியார் மனிதனை வேட்டையாடுவதையும், சூரியின் கீழ்நிலை கான்ஸ்டபிள் கதாபாத்திரம் அவரை எப்படிப் பிடிக்கிறது என்பதையும் படம் மையமாகக் கொண்டுள்ளது.

‘விடுதலை 2’ வாத்தியார் யார், எப்படி அவர் தப்பியோடிய குற்றவாளி என்பதை வெளிப்படுத்தும்.

இதன் தொடர்ச்சியாக விஜய் சேதுபதியின் ஆதிக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டுப்புற பாட்டு.. கானா & ஹிப் ஹாப்.. ஒப்பாரி.; 3 நாட்களில் ரஞ்சித்தின் ‘மார்கழியில் மக்களிசை’

நாட்டுப்புற பாட்டு.. கானா & ஹிப் ஹாப்.. ஒப்பாரி.; 3 நாட்களில் ரஞ்சித்தின் ‘மார்கழியில் மக்களிசை’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பா.இரஞ்சித்தின்
நீலம் பண்பாட்டு மையம் கடந்த 2020 மற்றும் 2021 ல் முன்னெடுத்த மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி சென்னை, மதுரை மற்றும் கோவையில் 500 க்கும் மேற்ப்பட்ட கலைஞர்கள்,100க்கும் மேற்ப்பட்ட திரைபட பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள், மற்றும் 15000 த்திற்கும் மேற்ப்பட்ட பார்வையாளர்கள் என மிக பிரம்மாண்டமாக நிகழ்ச்சி நடைபெற்று மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இந்த வருடம் 2022-கான மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி சென்னையில் வருகிற 28-ஆம் தேதி சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் கான்சர்ட் ஹாலில் வைத்து பறையிசை மேள தாளங்களுடன தொடங்கவுள்ளது.

நிகழ்ச்சியின் முதல் நாளான டிசம்பர் 28 ஆம் தேதி நாட்டுப்புற மற்றும் பழங்குடியினர் பாடல்கள் மேடையில் அரங்கேற்றப்படுகின்றது. 2வது நாளான 29 ஆம் தேதி கறுப்பின மக்களின் புரட்சி வடிவமாக திகழும் ஹிப் ஹாப் இசையும், சென்னையின் கருவூலமான கானாப் பாடல்களும் இடம்பெற உள்ளது.

மேலும் நிகழ்ச்சியின் கடைசி நாளான 30ஆம் தேதி நம் மக்களின் பழம்பெரும் கதையாடல்களான ஒப்பாரி பாடல்கள் , விடுதலைக்கான எழுச்சிமிகு பாடல்கள் மேடையேற்றப் படுகின்றது. திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் சார்ந்த சமூக அமைப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மக்களிசையை மக்களோடு கொண்டாட தயாராக இருக்கிறார்கள்.

நிகழ்ச்சிகளை காண கட்டணம் இல்லை.

மேலும் கீழே உள்ள டவுன் ஸ்க்ரிப்ட் என்ற வலைதள அமைப்பின் லிங்க் யை கிளிக் செய்வதன் மூலம் “கட்டணமில்லா” முன்பதிவை பெறுவது மற்றும் நிகழ்ச்சிக்கான முழு விபரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம்.

நாள் 01- நாட்டுப்புற பாடல்கள் & பழங்குடியினர் இசைகள்
townscript.com/e/margazhiyil-…

நாள் 02- கானா & ஹிப்- ஹாப்
townscript.com/e/margazhiyil-…

நாள் 03 – ஒப்பாரி & விடுதலை பாடல்கள் townscript.com/e/margazhiyil-…

வாருங்கள் !
மார்கழியில்
மக்களிசையை !
கொண்டாட தயாராவோம்..!

‘எனக்கு போட்டி நான் மட்டுமே…; விஜய்யின் பேச்சுக்கு விவரமான பதிலளித்த சீமான்

‘எனக்கு போட்டி நான் மட்டுமே…; விஜய்யின் பேச்சுக்கு விவரமான பதிலளித்த சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் விஜய்க்கு போட்டியாக அஜித் எனவும்.. அரசியலில் விஜய்க்கு போட்டியாக உதியநிதி என்றும் கடந்த சில நாட்களாகவே செய்திகள் பரவி வந்தன.

மேலும் துணிவு படத்தை உதயநிதி வாங்கியதால் வாரிசு vs வாரிசு மோதல் என சித்தரிக்கப்பட்டு செய்திகள் பரவியது.

இதனிடையில் தான் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசும்போது.. “எனக்கு போட்டி நான் மட்டுமே..” என்று மறைமுகமாக பேசி இருந்தார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சீமானிடம் விஜய்யின் இந்த பேச்சு குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு சீமான் பதில் அளிக்கையில்…

“தனக்குத்தானே பந்து போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார். விஜய் அப்படி என்றால் தான் தனக்குத்தானே போட்டி என்று சொல்லிக் கொள்ள முடியும்.

அவரது சினிமா வசனம் என்று நினைத்து பேசி விட்டார்

எனக்கு போட்டி அவர்.. எனக்கு போட்டி இவர்… என்று யாரையாவது பெயரை சொல்லிக் குறிப்பிட்டால் அது வேறு விதமான பிரச்சினையில் முடியும்.

எனவே தான் முதிர்ச்சியாக எனக்கு நானே போட்டி என்று பேசி இருப்பார்”.

இவ்வாறு சீமான் பேசினார்.

ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார்’: உலகளவில் ரூ 7000 கோடி வசூல்..; இந்தியாவில்…??

ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார்’: உலகளவில் ரூ 7000 கோடி வசூல்..; இந்தியாவில்…??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார்’: தி வே ஆஃப் வாட்டர் உலகம் முழுவதும் பார்வையாளர்களின் நம்பர் 1 தேர்வாக இருந்து ரூ. 7000 கோடி வசூல் செய்துள்ளது.

இந்தியாவில் ரூ. 300 கோடி+ GBOC வெறும் பத்து நாட்களில் வசூல் செய்துள்ளது.

இந்தத் தலைமுறை பார்வையாளர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றத் திரைப்படமாக ஜேம்ஸ் கேம்ரூனின் ‘அவதார்’: தி வே ஆஃப் வாட்டர் உள்ளது.

தொடர்ச்சியாக இந்த திரைப்படம் இந்தியாவில் வெளியான பத்தே நாட்களில் ரூ. 300 Cr+ GBOC வசூல் செய்துள்ளது. இந்தியாவில் ’அவென்ஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்திற்குப் பிறகு ‘அவதார்’ திரைப்படம் இரண்டாவது மிகப்பெரிய ஹாலிவுட் படமாக இந்தியாவில் உள்ளது.

இந்தியாவில் இதுவரை எந்தவொரு ஹாலிவுட் திரைப்படத்திற்கும் கிடைத்திராத மிகப்பெரிய வகையில், குடும்பத்தினர் கொண்டாடும் பொழுதுபோக்குப் படமாகவும் பிரம்மாண்டமான காட்சிகளைக் கொண்ட படமாகவும் இரண்டாவது வாரத்திற்குள் நுழைந்திருக்கிறது ‘அவதார்’.

தொடர்சியான விடுமுறைகள் மற்றும் ‘அவதார்’ படத்திற்கு எந்த ஒரு போட்டியும் வரும் வாரத்திலும் இல்லாததால் பாக்ஸ் ஆஃபிஸ் வரலாற்றின் பல சாதனைகளை முறியடித்து, புதிய பல சாதனைகளைப் படைத்து வருகிறது ‘அவதார்’ திரைப்படம்.

’அவதார்’: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

நல்ல படத்துக்கு ப்ரோமோசன் தேவையில்லன்னு சொன்னாரே அஜித்.; இப்போ ‘துணிவு’ பாராசூட் எந்த கணக்குல..?

நல்ல படத்துக்கு ப்ரோமோசன் தேவையில்லன்னு சொன்னாரே அஜித்.; இப்போ ‘துணிவு’ பாராசூட் எந்த கணக்குல..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ படம் 2023 பொங்கல் சமயத்தில் வெளியாகிறது.

இதனை முன்னிட்டு படத்தை புரமோட் செய்யும் வகையில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்தோம்.

இதனையடுத்து வெளிநாடுகளில் படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக பாராசூட் மூலம் துணிவு போஸ்டரை வானத்தில் பறக்க வைத்தனர்.

‘துணிவு’ படத்தின் பெரிய அறிவிப்பு ஒன்று டிசம்பர் 31ல் வெளியாகும் என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அஜித்தையும் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா ஆகியோரையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அதாவது ஒரு நல்ல படத்துக்கு ப்ரமோஷன் தேவையில்லை.. விளம்பரம் தேவையில்லை.. ஒரு படம் நன்றாக இருந்தால் அதுவே தானாக ஓடும் என்று தெரிவித்திருந்தனர்.

தற்போது இவர்கள் செய்யும் புரமோஷன் எந்த கணக்கில் வரும்.? என்று கலாய்த்து வருகின்றனர்.

‘வாரிசு’ ஜெயிக்கனும்… அடுத்த படம் கேட்காதீங்க… அரசியல் ஒண்ண்ண்ணுமே தெரியாது.. – ஷோபா சந்திரசேகர்

‘வாரிசு’ ஜெயிக்கனும்… அடுத்த படம் கேட்காதீங்க… அரசியல் ஒண்ண்ண்ணுமே தெரியாது.. – ஷோபா சந்திரசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்திருந்தார்.

சாமியை தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்..

அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

“எல்லாரும் கோயிலுக்கு வருவது போல நானும் கடவுளை தரிசிக்க கோவிலுக்கு வந்தேன். விஜய் படம் வாரிசு நல்ல ஓடணும் நீங்கள் எல்லாரும் வேண்டிக் கொள்ளுங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் இந்த படத்தில் கூறப்பட்டுள்ள குடும்ப செண்டிமெண்ட் குறித்து கேட்டபோது படம் பார்க்கவில்லை.

அடுத்த படம் எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்று கேட்ட கேள்விக்கு இந்த படத்தை பற்றி தெரியல.. அடுத்த படத்தை பற்றி கேட்காதீங்க..” என்றார்.

மேலும் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு.. “எனக்கு ஒண்ண்ணுமே தெரியாது” என்ற பதிலளித்தார்.

More Articles
Follows