சிம்பு-வின் ‘பத்து தல’ இசை வெளியீட்டு விழாவுக்கு வரும் கெஸ்ட் இவரா?

சிம்பு-வின் ‘பத்து தல’ இசை வெளியீட்டு விழாவுக்கு வரும் கெஸ்ட் இவரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு மீண்டும் தனது ரசிகர்களை மகிழ்விப்பதற்காக ‘பத்து தல’ படத்தின் மூலம் மீண்டும் வருகிறார். STR நீண்ட நாட்களுக்குப் பிறகு க்ரைம் த்ரில்லர் படத்தில் நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகமா உள்ளது. இசை புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

பத்து தல படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 18 ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. அந்த நிகழ்வில் ARR நேரலையில் பங்கேற்க உள்ளார். தற்போது, ​​இந்த விழாவில் நடிகர் சூர்யா விருந்தினர்களில் ஒருவராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Is this top hero joining Atman Simbu in the grand audio launch of ‘Pathu Thala’?

MEENA 40.. ரஜினி முதல் 90s நட்சத்திரங்கள் மீனாவுக்கு பாராட்டு

MEENA 40.. ரஜினி முதல் 90s நட்சத்திரங்கள் மீனாவுக்கு பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரம் ஆக அறிமுகமானவர் நடிகை மீனா.

1980களில் குழந்தை நட்சத்திரமாக ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ என்ற படத்தில் நடித்தவர் மீனா.

இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், பாக்யராஜ், கார்த்தி, முரளி, சரத்குமார், அஜித், விஜய், பிரசாந்த் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார்.

MEENA 40

மீனா திரையுலகில் 40 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சென்னையில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிலையில், இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மீனாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், நடிகர்கள் சரத்குமார், ராஜ்கிரண், நாசர், பிரபுதேவா, பிரசன்னா, இசையமைப்பாளர் தேவா, தயாரிப்பாளர்கள் போனிகபூர், தாணு, நடிகைகள் ரோஜா, ராதிகா, குஷ்பு, சினேகா, தேவயாணி, சுஹாசினி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

MEENA 40

meena 40 event rajinikanth and 90s stars attend

சமூக கண்ணோட்டத்துடன் சூர்யா & சசிகுமார்.; ‘அயோத்தி-க்கு சுசீந்திரன் பாராட்டு

சமூக கண்ணோட்டத்துடன் சூர்யா & சசிகுமார்.; ‘அயோத்தி-க்கு சுசீந்திரன் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மந்திரமூர்த்தி இயக்கி சசிகுமார் நடிப்பில் உருவான படம் ‘அயோத்தி’.

இப்படத்தில் சசிகுமார், யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க ட்ரைன் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ளார்.

‘அயோத்தி’ திரைப்படம் மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, நாளுக்கு நாள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், சசிகுமார் நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ படத்திற்காக இயக்குனர் சுசீந்திரன் பாராட்டியுள்ளார்.

மேலும், சுசீந்திரன் சசிகுமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “சூர்யா சார், சசிகுமார் போன்றோர் தான் சமூக கண்ணோற்றத்துடனும் திரைப்படம் நடிக்கிறார்கள்…மனிதத்தை போற்றும் அயோத்தியை ஆதரிப்போம்…சசிகுமார் அண்ணனுக்கு என் வாழ்த்துக்கள்..சிறப்பான திரைப்படம்…” என சசிகுமாரை பாராட்டியுள்ளார்.

குறிப்பு..

சுசீந்திரன் இயக்கி 2019 ஆம் ஆண்டு வெளியான ‘கென்னடி கிளப்’ படத்தில் நடிகர் சசிகுமார் முக்கிய வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தி

Director Susienthiran lauds Sasikumar’s ‘Ayothi’

STR 48 Update – காட்டுப் பசியில இருக்கேன்..; மீண்டும் இயக்குநராகும் சிம்பு.?

STR 48 Update – காட்டுப் பசியில இருக்கேன்..; மீண்டும் இயக்குநராகும் சிம்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு பல படங்களின் நடித்து இன்று வரை ரசிகர்களின் ஆஸ்தான நடிகராக இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் தந்தையின் இயக்கத்தில் நாயகனாக அறிமுகமான இவர் பின்னர் முன்னணி இயக்குனரின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

மேலும் இளம் வயதிலேயே திரைப்படத்தை இயக்கும் அளவுக்கு உயர்ந்து ‘மன்மதன்’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.

சிம்புவின் சினிமா கேரியரில் இந்த படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் சிம்புவின் நடிப்பு அனைவராலும் பாராட்ட பெற்றது.

இதனையடுத்து வெற்றி தோல்வி என அனைத்தையும் கலந்து கொடுத்தார் சிம்பு.

அண்மைக்காலமாக ‘மாநாடு உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது சமீபத்திய பேட்டியில்..

“நான் காட்டுப் பசியில் இருக்கிறேன்.. என் நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு சிறந்த திரைக்கதை வேண்டும்.. அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு மன்மதன் படத்தில் அமைந்தது அந்தப் படத்தை நானே இயக்கியிருந்தேன்.

தற்போது மீண்டும் நடிப்பு பசியில் இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

எனவே மீண்டும் சிம்பு படம் இயக்குவது குறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தன் ட்விட்டர் பதிவில் எஸ் டி ஆர் 48 எனக் குறிப்பிட்டுள்ளார் நடிகர் சிம்பு.

Patience is a virtue. It took a lot of faith but it’s worth the wait ??

#STR48 https://t.co/VqG0NTEtkk

STR plans to direct his next film

15 வருடங்களுக்கு பிறகு இணையும் ஊர்வசி – கலாரஞ்சனி.; நாயகன் யார் என ‘யோசி’-ங்க.!?

15 வருடங்களுக்கு பிறகு இணையும் ஊர்வசி – கலாரஞ்சனி.; நாயகன் யார் என ‘யோசி’-ங்க.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

J&A Prime Productions தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘யோசி’. இந்த படத்தை ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கியுள்ளார். அபய் சங்கர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரேவதி வெங்கட் நடித்துள்ளார். பிரபல நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோருடன் அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா, கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ராபின் ராஜசேகர், கே.குமார், வி.அருண், ஏ.எஸ்.விஜய் என நான்கு இசையமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர்.

பின்னணி இசையை இத்தாலியை சேர்ந்த பிரான்செஸ்கோ ட்ரெஸ்கா என்பவர் அமைத்துள்ளார். பாடல்களை ரட்சகன் மற்றும் இசையமைப்பாளர் வி.அருண் இருவரும் எழுதியுள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை ஆறுமுகம் கவனிக்கிறார். படத்தொகுப்பை ரோஷன் பிரதீப்.ஜி மற்றும் ரதீஷ் மோகனன் ஆகியோர் மேற்கொள்கின்றனர்.

நீட் தேர்வை எதிர்கொள்ள பயந்து தற்கொலை முடிவு எடுக்கும் மாணவி ஒருத்தி மலைப்பகுதிக்கு சென்று அங்கிருந்து தற்கொலை செய்ய முயற்சிக்கிறாள்.

முயற்சி தோல்வியடைய அந்த காட்டில் இருந்து தப்பி உயிர் பிழைக்க மிகப்பெரிய உயிர் போராட்டத்தில் இறங்குகிறாள்.
அவளுக்கு என்ன ஆபத்து நேர்ந்தது, அவற்றிலிருந்து அந்த பெண்ணால் தப்பிக்க முடிந்ததா என்பதை மையப்படுத்தி விறுவிறு திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது.

இந்த படம் பற்றி படத்தின் நாயகன் அபய் சங்கர் கூறும்போது…

“கடந்த 40 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் நடிப்பில் பல சாதனைகளை செய்த நடிகை ஊர்வசியின் நெருங்கிய உறவினர் நான். கொரோனா காலகட்டத்தில் ஸ்டண்ட் இயக்குனர் ஜாக்கி ஜான்சன் மூலமாக இந்த படத்தின் இயக்குனர் ஸ்டீபன் ஜோசப்பை சந்தித்தேன்.

நடிக்கும் எண்ணம் எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே இருந்து இருந்து வந்தது. அதுமட்டுமல்ல ஊர்வசி, கலாரஞ்சனி, மறைந்த நடிகை கல்பனா என சகோதரிகள் மூவரும் மற்றும் அவர்கள் குடும்பத்தினரும் நம் குடும்பத்திலிருந்து இன்னொருவர் நடிப்புத்துறைக்கு வரவேண்டும் என்று எப்போதுமே என்னை ஊக்கப்படுத்தி வந்தார்கள். அதற்கேற்றபடி இறுதி நேரத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தவர் இந்த படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டபோது நானே கதாநாயகனாக மாறினேன்.

எனக்காக மட்டுமல்ல, கதைக்காகவும் இந்த படத்தில் ஊர்வசியும் அவரது சகோதரி கலாரஞ்சனியும் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் குறித்து அவர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

கதாநாயகி ரேவதி வெங்கட் மும்பையை சேர்ந்த ஒரு விளையாட்டு வீராங்கனை. இந்த படத்தின் மூலம் முதன்முறையாக சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார்.

அதேசமயம் நிறைய விளம்பர படங்களில் நடித்த அனுபவமும் அவருக்கு இருக்கிறது.. இந்தி பிக்பாஸ் சீசனில் இறுதி போட்டியாளராக வந்த அர்ச்சனா கெளதம் இந்த படத்தில் ஒரு நெகட்டிவ் சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெறும் நான்கு விதமான பாடல்களுக்கு நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர்.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் கே.ஜே.அய்யனார் இந்த படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராமக்கல் மெட்டு மலைப்பகுதியில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு மேல் எந்த வசதிகளும் இல்லாத அந்த மலைப்பகுதியில் தினசரி நான்கு கிலோமீட்டருக்கு மேல் நடந்து சென்று படப்பிடிப்பை நடத்தினோம்.

அடர்ந்த காடு, வனவிலங்குகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு இடையே படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.

முக்கியமான ஒரு காட்சியில் செங்குத்தான மலைப்பகுதியில் நான் கீழ்நோக்கி ஓடி வரும்போது திடீரென கால் தவறி சரிவில் உருண்டு மரத்தில் மோதி எனது நெஞ்சில் பலத்த அடி விழுந்தது . ஆனாலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்” என்றார்.

தமிழில் உருவாகியுள்ள இந்த படத்தை கர்நாடகா மற்றும் கேரளாவில் வெளியிடவும் வேலைகள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து பாடகர் கார்த்திக் பாடிய அன்பே அன்பே என்கிற லிரிக் பாடல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருக்கிறது.

A V I மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து J & A பிரைம் புரொடக்ஷன்ஸ் இந்த படத்தை மார்ச் இறுதியில் வெளியிடும் திட்டத்தில் செயல்பட்டு வருகின்றனர்.

*நடிகர்கள்* :

அபய் சங்கர் (ஹீரோ), ரேவதி வெங்கட் (கதாநாயகி), ஊர்வசி, கலாரஞ்சனி, அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா, கிருஷ்ணா மற்றும் பலர்

*தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்*

தயாரிப்பு நிறுவனம் ; j & A பிரைம் புரொடக்ஷன்ஸ்

வெளியீடு ; j & A பிரைம் புரொடக்ஷன்ஸ் & A V I மூவி மேக்கர்ஸ்

இயக்கம் ; ஸ்டீபன் எம். ஜோசப்

இசையமைப்பாளர்கள்: ராபின் ராஜ்சேகர், கே குமார், வி. அருண், ஏ.எஸ்.விஜய்

பாடியவர்கள் : கார்த்திக், கே.ஜே. அய்யனார், ஜெகதீஷ் குமார், மோனிஷா சௌந்தரராஜன்

பாடலாசிரியர்: ராக்சகன், வி. அருண்

இசை உரிமைகள்: MRT இசை

பின்னணி இசை: பிரான்செஸ்கோ ட்ரெஸ்கா (இத்தாலி)

BGM அசோசியேட் ; ஏ.எஸ். விஜய்

ஒளிப்பதிவு : ஆறுமுகம்

அதிரடி இயக்குனர்: ஜாக்கி ஜான்சன்

இரண்டாவது யூனிட் கேமராமேன்: பெரியசாமி & ஆனந்த் கிருஷ்ணா

நடனம்: ஜெய் & டயானா

படத்தொகுப்பு: ரோஷன் பிரதாப் ஜி – ரதீஷ் மோகனன்

ஆடை: டயானா

ஒப்பனை: கலைவாணி

PRO: A.ஜான்

சுவரொட்டி வடிவமைப்பு: நௌஃபல் குட்டிபென்சில்

தலைப்பு வடிவமைப்பு: ரிதன் விவேக், பிரம்மன்

ஸ்டில்ஸ்: கிரீஷ் அம்பாடி

தமிழ் வானொலி பார்ட்னர் & ஆடியோ வெளியீட்டு பங்குதாரர் : சூர்யன் எஃப்எம் 93.5

பிரச்சார ஸ்பான்சர்: L&T EduTech

DI: பேவுட் ஸ்டுடியோ (ப்ரிசம் & பிக்சல்ஸ் ஸ்டுடியோ), சென்னை

கலரிஸ்ட்: ரகுராமன்

Urvashi and Kala Ranjani joins for Yosi after 15 years

இந்த தேதியில் ரிலீஸ் ஆகிறதா உதயநிதியின் மாமன்னன்?

இந்த தேதியில் ரிலீஸ் ஆகிறதா உதயநிதியின் மாமன்னன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் மாமன்னன் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்பு.

அரசியல் திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் தயாரித்துள்ளது. படம் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பமானது. சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. தற்போது, ​​போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மே 12, 2023 அன்று மாமன்னன் திரைப்படத்தை பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Is this the release date of Udhayanidhi & Vadivelu starrer ‘Maamannan’?

More Articles
Follows