ஷாரூக்கான் & நயன்தாரா இணையும் படத்திற்கு மாஸான டைட்டில் வைத்த அட்லி

ஷாரூக்கான் & நயன்தாரா இணையும் படத்திற்கு மாஸான டைட்டில் வைத்த அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெறி, மெர்சல், பிகில் ஆகிய விஜய்யின் பேவரைட் படங்களை இயக்கியவர் அட்லீ.

கோலிவுட்டில் வெற்றிகளை அடுக்கி விட்டு தற்போது பாலிவுட்டில் பயணிக்கவுள்ளார்.

அட்லி இயக்கும் ஹிந்தி படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இவர்களுடன் பிரியாமணி, யோகிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், இப்படத்திற்கு LION ‘லயன்’ என தலைப்பு வைத்திருக்கிறார் அட்லி.

இது தொடர்பான ஒரு சூட்டிங் பர்மிசன் லெட்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Is the official title of #SRK – #Atlee film leaked online?

அசத்தும் அமுதவாணனின் ‘கோட்டா’..; உலகளவில் 100 விருதுகளை நெருங்குமா.?

அசத்தும் அமுதவாணனின் ‘கோட்டா’..; உலகளவில் 100 விருதுகளை நெருங்குமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் அமுதவாணனின் இயக்கத்தில் 2020ஆம் ஆண்டு தீபாவளி முடிந்த ஒரு வாரத்தில் வெளியான ‘கோட்டா’ திரைப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்தது.

அப்படம் வெளியான போது திரையரங்குகளில் மிகுந்த வரவேற்பையும் ரசிகர்களையும் பெற்றுக் கொடுத்தது.

மேலும் சிறந்த விமர்சனங்களையும் பெற்றிருந்தது.

இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் ட்ரெய்லரை சினிமா மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள பல பிரபலங்கள் வெளியிட்டிருந்தார்கள்.

அத்துடன் ‘கோட்டா’ திரைப்படத்தின் பயணம் நின்று விடவில்லை.

இன்றைய தேதி வரை சுமார் 64 சர்வதேச விருதுகளை குவித்துள்ளது.

இதன் பிறகும் இன்னும் பல விருதுகளை குவிக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதில் முக்கிய விருதாக டொரன்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படமாக விருதை வென்றுள்ளது.

இந்நிலையில், மேலும் 16 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

The Best Feature Film Audience Award from Toronto International Tamil Film Festival 2021 for the movie #QUOTA

தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்.. – முதல்வர் முக ஸ்டாலின்

தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான்.. – முதல்வர் முக ஸ்டாலின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக. ஸ்டாலின் கலந்துக் கொண்டார்.

அப்போது விருதுகளை வழங்கினார்.

பெரியார் விருது – மிசா மதிவாணன்

அண்ணா விருது – எல்.மூக்கையா

கலைஞர் விருது – கும்மிடிப்பூண்டி வேணு

பேராசிரியர் விருது – முபாரக்

பாவேந்தர் விருது- வாசுகி ரமணன்

உள்ளிட்டோருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.

முப்பெரும் விழாவில் முதலமைச்சர் முக. ஸ்டாலின் உரையாற்றினார்.

அதில் முக்கியமானவை..

தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சி தான் என்கிற வகையில் நமது செயல்பாடு அமைந்திட வேண்டும்.

9 மாவட்டங்களில் வருகிற‌ ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதன்பிறகு வருகிற நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக 100 சதவீதம் வெற்றி பெற்றாக வேண்டும்.

கோட்டையில் கையெழுத்திட்டு அறிவிக்கப்படும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர உள்ளாட்சி நிர்வாகத்தில் திமுகவினர் இடம் பிடிப்பது முக்கியம்.

ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் பல நல்லத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். இனி வருகிற ஒவ்வொரு மாதங்களிலும் திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த விழாவில் முரசொலி செல்வம் எழுதிய ‘முரசொலி – சில நினைவலைகள்’ எனும் நூல் வெளியிடப்பட்டது..

DMK rule should no longer be permanent says MK Stalin

JUST IN ஹோட்டல் 11PM வரை.. BAR 10PM வரை.; புதுச்சேரி காரைக்காலில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

JUST IN ஹோட்டல் 11PM வரை.. BAR 10PM வரை.; புதுச்சேரி காரைக்காலில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று செப்டம்பர் 15 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அனைத்து கடைகளும் வணிக நிறுவனங்களும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி

இதேபோல் மதுக்கடைகள் மொத்தம் மற்றும் சில்லறை இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி

உணவகங்கள் மற்றும் மது அருந்தும் வசதியுடன் கூடிய உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

மேலும் கடற்கரை சாலைகள் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்

இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் கூடுதல் தளர்வுகளை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Lockdown extenstion in Pondy and Karaikkal

ஏழைகளின் ரியல் ஹீரோ சோனு சூட் இடங்களில் வருமான வரித்துறை சோதனை

ஏழைகளின் ரியல் ஹீரோ சோனு சூட் இடங்களில் வருமான வரித்துறை சோதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் கள்ளழகர், சந்திரமுகி, ஒஸ்தி, கோவில்பட்டி வீரலட்சுமி என பல படங்களில் நடித்தவர் ஹிந்தி் நடிகர் சோனு சூட்.

இவர் தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

பெரும்பாலும் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களிலேயே நடித்தவர் இவர்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் இவர் செய்த உதவிகள் ஏராளம்.

குறிப்பாக இடம்பெயர் தொழிலாளர்கள் அவதிபட்டபோது பேருந்து விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார்.

உதவி செய்வதற்காகவே தன் சொத்துக்களை 10 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்தார்.

மாணவர்கள் ஆன்லைன் கல்வி கற்பதற்காக ஸ்மார்ட்போன்களை வழங்கினார்.

மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவர் வைத்தும் கொடுத்துள்ளார்.

விவசாயிகளுக்கும் பெரும் உதவி செய்துள்ளார்.

கொரோனா காலத்தில் இவரது சேவையைப் பாராட்டி ஐநா சபை சார்பில் விருது வழங்கப்பட்டது.

தெலங்கானா மாநிலத்தில் சித்தி பேட் மாவட்டத்தில் உள்ள துப்ப தண்டா என்ற கிராமத்தில் சோனு சூட் சிலை அமைத்து கோயில் கட்டியுள்ளனர்

எனவே பொதுமக்கள் இவரை ரீல் ஹீரோவாக இல்லாமல் ரியல் ஹீரோவாகவே பார்த்தனர்.

இந்த நிலையில் இவருக்கு சொந்தமான 6 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப் சட்ட சபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடிகர் சோனு சூட் களமிறக்கப்படலாம் என தகவல்கள் பரவியது.

மேலும் புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு திட்டத்தின் தூதராக சோனு சூட் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

I-T Department Raids 6 Places Linked To Bollywood Actor Sonu Sood

அண்ணாத்த எங்கள் ஆண்டவன்..; அதான் ரத்த அபிஷேகம்.; அது எப்படி அருவருப்பு..? ரஜினியிடம் கேள்வி கேட்கும் ரசிகர்கள்

அண்ணாத்த எங்கள் ஆண்டவன்..; அதான் ரத்த அபிஷேகம்.; அது எப்படி அருவருப்பு..? ரஜினியிடம் கேள்வி கேட்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்துள்ள அண்ணாத்த பட பர்ஸ்ட்லுக் போஸ்டருக்கு பொது வெளியில் வைக்கப்பட்ட கட்-அவுட்டிற்கு பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் ஆட்டை பலி கொடுத்து ரஜினி ரசிகர்கள் ரத்தாபிஷேகம் செய்தனர்.

இது தமிழகம் முழுவதும் சர்ச்சையானது.

இந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியானதால் சமூக ஆர்வலர்கள் கண்டன குரல் கொடுத்தனர்.

மேலும் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தது போய் தற்போது ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்கிற நடிகர் ரஜினிகாந்த ரசிகர்களின் இந்த செயலை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டித்தது.

இதனையனுத்து அகில இந்திய ரஜினிகாந்த ரசிகர் மன்றம் சார்பில் நிர்வாகி சுதாகர் அறிக்கை வெளியிட்டார்.

அதில்..

அண்ணாத்த போஸ்டர் மீது சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்தனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அருவருப்பான இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.” என அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த அறிக்கை நேரடியாக ரஜினி தரப்பில் வெளியாகாமல் அகில இந்திய ரஜினிகாந்த ரசிகர் மன்றம் சார்பில் வெளியானது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள அருவருப்பு என்ற வார்த்தை ரசிகர்களை டென்ஷன் ஆக்கியுள்ளது.

தீபாராதனை, பாலாபிசேகம், தேங்காய் உடைத்தல், பொங்கலிடுதல் போல ஆடு, கோழி வெட்டி கொண்டாடுவதும் கடவுள் வழிபாட்டு முறைகள் தான்.

கடவுளுக்கு நிகராக மதித்து செய்ததை.. இப்படி அருவருக்கத்தக்கது என சொல்ல தேவையுமில்லை. அப்டி சொல்வதே கடவுள் நம்பிக்கையை கொச்சைப்படுத்துவது போலதான் என ரஜினிக்கு எதிராக அவரது ரசிகர்கள் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.

Fans ask question to his idol Super Star Rajinikanth

More Articles
Follows