இணையத்தை அதிர வைக்கும் ரஜினி டான்ஸ் – பன்ச் டயலாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ஹீமா குரோஷி, அஞ்சலி பட்டீல், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் காலா.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பை 40 நாட்கள் மும்பையில் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதன் சூட்டிங்கின் போது திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட பாடல் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த ஓபனிங் பாடலில் ரஜினி நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் உள்ளது.

மேலும், ரஜினி பேசும் பன்ச் டயலாக் ’நான் கால வைக்கிறதும் வைக்காததும், உன் தலை இருக்குறதும், இருக்காததும் உன் கையிலதான் இருக்கு…’ என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது.

இது இணையத்தில் தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

மீண்டும் கலக்க வரும் சந்தானம்-ராஜேஷ் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எம்.ராஜேஷ்.

இதில் பெரும்பாலான படங்களில் காமெடி நாயகனாக சந்தானம் நடித்திருந்தார்.

தற்போது சந்தானம் ஹீரோவாகிவிட்டதால் ராஜேஷ் இறுதியாக இயக்கிய கடவுள் இருக்கான் குமாரு படத்தில் காமெடியனாக ஆர்.ஜே. பாலாஜி நடித்திருந்தார்.

இந்நிலையில் சந்தானத்தை நாயகனாக வைத்து ராஜேஷ் புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டாராம்.

இப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

“GST-ஐ அமல்படுத்தினால் சினிமாவை விட்டு விலகுவேன்” – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாடு முழுவதும் விரைவில் ஜிஎஸ்டி-ஐ மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.

இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசியதாவது…

“சினிமா சூதாட்டம் போன்றது அல்ல; சினிமா என்பது கலை.

ஹாலிவுட் படத்திற்கு நிகராக இந்திய சினிமாவுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது சரியல்ல.

சினிமாவை சரியாகவும், தவறாகவும் பயன்படுத்திய அரசியல் தலைவர்கள் உள்ளனர்.

திரைப்படத்துறையினரின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

சினிமா டிக்கெட்டிற்கு 28% வரி விதிக்கும் முடிவை கைவிட அரசு பரிசீலிக்க வேண்டும்.

28% ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தினால் சினிமாவை விட்டு விலகுவதை தவிர எனக்கு வேறு வழியில்லை” என்றார் கமல்ஹாசன்.

விஜய் பிறந்தநாளுக்கு முன்பே ரசிகர்களுக்கு ‘தெறி’ ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகிவரும் படத்திற்கு இதுவரை தலைப்பிடப்படவில்லை.

எனவே விஜய் பிறந்தநாளில் அதாவது ஜீன் 22ஆம் தேதி பர்ஸ்ட் லுக் தலைப்புடன் வெளியாகவுள்ளது.

எனவே அன்றைய தின கொண்டாட்டத்திற்கு தற்போது விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் பிறந்தநாளுக்கு முன்பே தெறி படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை வெளியிட உள்ளதாக அதன் ஆடியோ உரிமையை வாங்கியிருந்த திங் மியூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் மற்றொரு விருந்துக்கும் விஜய் ரசிகர்கள் தயாராகவிட்டனர்.

80களின் மாஸ் ஹீரோ கெட்டப்பில் ஆட்டம் போடும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் 4 வேடங்களில் நடித்து வருகிறார் சிம்பு.

இப்படத்தில் யுவன் இசையில் இளையராஜா பாடிய ரோட்டுல வண்டி ஓடுது பாடலை இன்று வெளியிடுகின்றனர்.

இந்நிலையில் மற்றொரு பாடலுக்கான சூட்டிங்கை இன்று சென்னை, கிண்டியில் தற்போது படமாக்கி கொண்டிருக்கிறார்களாம்.

இப்பாடல் மதுரை மைக்கேல் என்ற கேரக்டருடைய பாடல் என்பதால், 80களின் மாஸ் ஹீரோக்கள் கெட்டப்பில் சிம்பு ஆட்டம் போடவிருக்கிறாராம்.

விஜய்க்கு பதிலாக ஜிவி. பிரகாஷ்…? இது சீமானின் ‘கோபம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 

இயக்குநரும் நடிகருமான சீமான் தற்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

இருந்தபோதிலும் இடையிடையே படங்களில் கவனம் செலுத்தவும் இருக்கிறாராம்.

இவர் விஜய்யுடன் இணைந்து ஒரு படத்தில் பணி புரியவிருந்தார்.

ஆனால் சில காரணங்களால் அது தடைப்படவே, ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து பணிபுரிய இருக்கிறாராம்.

இப்படத்திற்கு கோபம் என தலைப்பிட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இது விஜய்க்காக எழுதிய கதையா..? அல்லது வேறு ஒரு புதிய கதையா..? என்ற விவரங்கள் தெரியவில்லை

More Articles
Follows