இரும்புத்திரை படம் பார்த்தால் இண்டர்நெட் மீது பயம் வரும்… : சமந்தா

இரும்புத்திரை படம் பார்த்தால் இண்டர்நெட் மீது பயம் வரும்… : சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Irumbu Thirai movie will give you fear on Internet says Samanthaவிஷால் தயாரித்து நடித்துள்ள படம் இரும்புத்திரை.

இப்படத்தில் நாயகியாக நடித்துள்ள சமந்தா இப்படம் குறித்து கூறியதாவது…

இரும்புத்திரை படத்தின் கதையை கேட்கும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

நாம் வாழும் இந்த சமூகத்தில் நமக்கு தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மீடியம் மூலமாக நம்மை சுற்றி நடக்கிறதா என்று பதைபதைக்க வைத்தது.

படத்தின் கதையை கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய கைபேசியை தொடவே பயமாக இருந்தது.

இந்த படம் இன்டர்நெட் மூலமாக நமக்கு என்னவெல்லாம் பிரச்சனைகள் உள்ளது அது நமக்கு எப்படியெல்லாம் தீங்கு விளைவிக்கும் என்று மிக தெளிவாக வெளிச்சம் போட்டு காட்டும்.

நமது பிரைவசி எப்படி வெளியே கசிகிறது என்பதை பற்றியும் இப்படம் பேசும்.

எனக்கு புதுமுக இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம் தான். ஆனால் இயக்குனர் மித்ரன் ஒரு போதும் என்னை அப்படி பீல் பண்ண வைத்து இல்லை.

அவர் கதை சொல்லும் போதே நாம் ஒரு திறமையான இயக்குநரோடு இணைந்து பணியாற்ற போகிறோம் என்று தெரியவைத்தார்.

அவர் சொன்னது போலவே படத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் வருவது போன்ற சம்பவங்கள் எதுவும் என்னுடைய வாழ்க்கையில் நடந்தது இல்லை. அதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

ஆனால் என்னுடைய நட்பு வட்டத்தில் உள்ள சிலர் இன்டர்நெட் மூலம் நடக்கும் மோசடிகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது 1 கோடி ரூபாய் வென்றுள்ளீர்கள் என்று வரும் விளம்பரங்களுக்கு பதிலளித்து, பல லட்சங்கள் கொடுத்து ஏமாந்து உள்ளார்கள்.

இன்று ட்விட்டர் , பேஸ்புக் , இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூகவலை தளங்கள் அனைத்தும் முக்கித்துவம் வாய்ந்த ஒன்றாகிவிட்டது. அவற்றுக்கு நாம் அடிக்ட் ஆகிறோம் என்பது தான் தவறு.

அதை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். இரும்புத்திரை ரசிகர்களுக்கு சமூக வலைதளங்கலால் ஏற்படும் பிரச்சனை பற்றியும். அதை நாம் எப்படி சரியாக பயன்படுத்தலாம் என்பது பற்றியும் எடுத்து கூறி நம்மிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருக்கும்.

விஷால் மற்றும் அர்ஜுன் சார் என்று இருவருமே அவரவர் ஸ்டைலில் ஹாட்டஸ்ட் ஹீரோக்கள் தான். அவர்களோடு இப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி என்றார் சமந்தா அக்கினேனி.

இரும்புத்திரை வருகிற மே மாதம் 11 தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Irumbu Thirai movie will give you fear on Internet says Samantha

Big Breaking: ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல்

Big Breaking: ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bomb threat to Super Star Rajinikanth home by Mysterious person10 நாட்கள் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார்.

இன்று மே 5ஆம் தேதி ரஜினி சென்னை திரும்பியுள்ள நிலையில் அவரது வீடு அமைந்துள்ள போயஸ் கார்டனுக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக ஒரு நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் பழனிசாமியின் கிரீன்வேஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பிரதீப் என்பவர்தான், ரஜினி வீட்டுக்கும் மிரட்டல் விடுத்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தற்போது சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

Bomb threat to Super Star Rajinikanth home by Mysterious person

Breaking: மெடிக்கல் ஷாப்-லைப்ரரி இல்ல; டாஸ்மாக் இருக்கு.. : சூர்யா பேச்சு

Breaking: மெடிக்கல் ஷாப்-லைப்ரரி இல்ல; டாஸ்மாக் இருக்கு.. : சூர்யா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

We dont have library Medical shops but every where Tasmac is there says Suriyaஇன்று அகரம் அறக்கட்டளை சார்பாக அறம் செய்ய விரும்புவோம் என்ற புத்தகம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அதில் நடிகர் சூர்யா கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது…

“கல்வி தாகத்தோடு இருப்போருக்கு எல்லாம் வெளிச்சத்தை கொடுப்பது அகரம்.2006 ல் பேட்சில் இருந்த அகரம் இதை சேவையாக பார்க்காமல் ஒரு கடமையாக இருக்க வேண்டும் என்று செய்து வருகிறது.

முதல் தலைமுறை மாணவர்கள்,தன் தாய்,தந்தை படிப்பறிவு இல்லாமல்,படிக்க தேவையான புத்தகம்,பேனா போன்றவற்றை வாங்க முடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்காகவே ஆரமிக்கப்பட்டது தான் இந்த அகரம்.

இது போல் படி படியாக பலவற்றை கூறலாம்.பல ஏற்ற தாழ்வுகள் கொண்டது தான் இந்த சமூகம். எல்லா தகுதியும்,திறமையும் இருந்தும் வசதி மட்டும் இல்லாத காரணத்தினால் அவர்கள் வாழ்க்கை மாற வேண்டுமா?.

பன்னிரண்டு வருடம் படித்த மாணவன் வருமையின் காரணமாக கூலி வேலைக்கே செல்ல வேண்டுமா? என்ற கேள்விக்கு பதிலே அகரம்.

2006ல் பேட்சில் இருந்த அகரம் 2010ல் விதையானது.அகரத்தில் தன்னார்வர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.குழந்தைகளின் திறனை கண்டறிந்து அதற்கேற்ப அவர்களை வழிநடத்துவதுதான் இந்த அகரத்தின் வேலை.

2010ல் 160 மாணவர்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.பணம் தேவையில்லை அன்பும் அக்கரையும் இருந்தாலே எல்லாத்தையும் மாற்ற முடியும் என்பதை இந்த அகரம் பயணம் உணர்த்தியது.

வெள்ளி,சனி,ஞாயிறு போன்ற நாளை ஒதுக்கி சுயநலமின்றி இரண்டாயிரம் கிராமங்களை தேர்வு செய்து பின்தங்கிய மாணவர்களை தேர்வு செய்வது தன்னார்வர்களின் முக்கியத்துவமாக இருக்கிறது.

அவர்கள் தான் அச்சாணியாக செயல்படுகின்றனர்.90சதவீதம் முதல் தலைமுறையினர்.60சதவீதம் பெண்கள்,40சதவீதம் ஆண்கள் உள்ளனர்.

அன்பும் அக்கரையும் இருப்பவர்களால் மட்டுமே மாணவர்களை படிக்க வைக்க முடியும்.ஒரு குழந்தையை படிக்க வைத்தாலே அக்குடும்பத்தில் எல்லா குழந்தையும் படிக்கும் இது போன்ற மகிழ்ச்சியான அனுபவமும் உண்டு.

அகரத்திற்கு வருடம் எட்டாயிரம் விண்ணப்பம் வந்தாலும் அதில் ஐநூறு பேர்களையே படிக்க வைக்க முடிகிறது.பன்னிரண்டாம் வகுப்பு படித்து விட்டு கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்ற மாநிலத்தை விட தமிழ்நாட்டில் 45சதவீதம் அதிகம் இந்தியா கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இந்த புத்தகத்தை படித்தால் கண்டிப்பாக கண்கள் கலங்கும் மக்கள் என்ன வாழ்கை வாழ்கிறார்கள் என்பது புரியும்.

யாராக இருந்தாலும் சரி அவர்கள் மூலம் ஒரு குழந்தையின் கல்வி மேற்கொள்ள படுகிறதோ அப்போது தான் அகரம் முழுமை அடையும்.

பெற்றோர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் கல்வியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.பல அரசு பள்ளிகளில் குழந்தைகள் ஆசிரியர் இல்லாமல் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.அதை பற்றி வெளியில் பேசினால் மட்டுமே குறைகள் தீர்க்கப்படும்.

இப்போது மாற்றத்தை கொண்டு வந்தால் மட்டுமே இந்தியாவை மாற்ற முடியும்.இலவச கல்வி என்று இருப்பதனால் சில மாணவர்களால் படிக்க முடிந்தது.

மதியஉணவு என்ற திட்டத்தின் மூலம் உணவுக்காகவாது கல்வி கற்றார்கள்.இப்போது காணப்படும் கல்வியானது நடைமுறைக்கு சாதகம் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.உலகத்தை கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. மாணவர்களுக்காக கல்வி துறையில் இருப்பவர்கள் நல்லதே செய்ய வேண்டும்.கல்வி தரம் உயர வேண்டும்.மதிப்பெண்கலுக்காக மட்டுமே படிக்கும் நிலை மாற வேண்டும்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். நூலகம். மெடிக்கல் ஷாப் ஆகியவை இல்லாத ஊரில் கூட டாஸ்மாக் கடை உள்ளது.

இந்த புத்தகம் இரண்டாயிரம் மாணவர்களின் வாழ்கையை மாற்றிய தன்னார்வலர்களின் சாட்சியாக அமைந்துள்ளது” என பேசினார் சூர்யா.

We dont have library Medical shops but every where Tasmac is there says Suriya

ஹன்சிகாவின் புதிய படத்தின் சூட்டிங் ஜூன் மாதம் தொடங்குகிறது

ஹன்சிகாவின் புதிய படத்தின் சூட்டிங் ஜூன் மாதம் தொடங்குகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director jameelதமிழ் சினிமாவுக்கு எப்போதும் நல்ல திறமையாளர்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் இருக்கும் ஜியோ ஸ்டார் எண்டர்பிரைசஸ், ஹன்சிகா மோத்வானி நாயகியாக முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் புதிய பெயரிடப்படாத படத்தை அறிவித்திருக்கிறது.

இதுவரை ஜாலியான பெண் கதாபாத்திரங்களையே ஏற்று நடித்து வந்த ஹன்சிகா, மிகுந்த ஈடுபாடும், அர்ப்பணிப்பும் உள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

மனிதநேய செயல்களுக்கு பெயர் போன இந்த அழகு நடிகை இந்த சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நேர்த்தியாக நடிப்பதற்காக தற்போது ஹோம் வொர்க் செய்து வருகிறார்.

நாயகியை மையப்படுத்தி சுழலும் இந்த திரில்லர் கதையில் மிகவும் பவர்ஃபுல்லான நடிப்பை வெளிப்படுத்த இருக்கிறார் ஹன்சிகா.

மசாலா படம், ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜமீல் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார்.

வணிக மற்றும் தொழில்நுட்ப விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் தயாராக இருக்கிறது.

ரசிகர்கள் பார்க்க விரும்பும் வகையில் வணிக ரீதியில் திரைக்கதையை மேம்படுத்த நிறைய உழைப்பை கொடுத்திருக்கிறோம்.

மிகுந்த பொறுப்பும், அர்ப்பணிப்பும் தேவைப்படுகிற இந்த கதாபாத்திரத்துக்கு முதன்மையான தேர்வாக ஹன்சிகா இருந்தார்.

பெருகி வரும் நாயகிகளை மையப்படுத்திய கதைகள் ட்ரெண்டும், ரசிகர்கள் மத்தியில் குறையாத ஹன்சிகாவின் புகழும் தான் இந்த படம் உருவாக முக்கிய காரணம். அவருடன் இரண்டு படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறேன், அவர் என்னை ஈர்த்திருக்கிறார்.

அதனாலேயோ என்னவோ இந்த கதையை எழுதும்போதே அவரின் இமேஜ் இந்த கதையில் பொருந்தி விட்டது.

இந்த கதையில் இன்னும் சில கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது, அதற்காக பிரபலமான நடிகர்களை தேர்வு செய்து வருகிறோம்.

ஜியோஸ்டார் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராவ் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் விஜய் வர்மா சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை தருவதாக உறுதி அளித்திருக்கிறார்கள்.

ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது, படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும்.

Hanshika to star in a female oriented thriller Will be directed by Jameel

 

யாளி படத்தின் மூலம் இயக்குனராகும் ஆர்யாவின் மச்சினிச்சி அக்ஷயா

யாளி படத்தின் மூலம் இயக்குனராகும் ஆர்யாவின் மச்சினிச்சி அக்ஷயா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Akshaya became director by Yaalee movieAB கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பாலச்சந்தர்.T தயாரித்திருக்கும் படம் “யாளி“.

இந்த படத்தில் தமன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடித்து இயக்கியிருக்கிறார் அக்ஷயா. மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார்.

(இவர் ஆர்யா நடித்த கலாபக்காதலன் (மச்சினிச்சியாக நடித்திருந்தார்), விஜயகாந்த் நடித்த “எங்கள் ஆசான், டாக்டர் கலைஞர் கதை, வசனம் எழுதிய உளியின் ஓசை, போன்ற படங்களில் நடித்தவர் அக்ஷயா என்பவபர் குறிப்பிடத்தக்கது.

படம் பற்றி இயக்குனரும், நாயகியுமான அக்ஷயா கூறியதாவது..

பெண் இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போது நல்ல வரவேற்பு இருக்கும் அந்த வரிசையில் நாம் இணைந்துள்ளேன். இது ஒரு ரொமான்டிக், திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறோம். மும்பை பின்னணியில் நடக்கும் கதை.

முக்கியமான மூன்று கதாபாத்திரங்களை சுற்றி திரைக்கதை நகரும். நாயகி ஜனனி ( அக்ஷயா ),நாயகன்(தமன் )இருவரும் காதலிக்கிறார்கள்.

ஆனால் இவர்களுக்கு தொடர்பு இல்லாத பாலா (அர்ஜுன்) என்ற கதாபாத்திரம் ஜனனியை பின்தொடர்கிறார். யார் அவர் எதற்காக ஜனனியை பின் தொடர்கிறார், அந்த நேரத்தில் மும்பையில் தொடர் கொலை சம்பவங்கள் வேறு நடக்கின்றன.

அந்த கொலை சம்பவங்களுக்கும் இந்த மூன்று கதாபாத்திரத்திரங்களுக்கும் என்ன தொடர்பு இறுதியில் ஜனனி என்ன ஆனார் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

விறு விருப்பான திரைக்கதை ரசிக்கும்படியாக இருக்கும்.

படப்பிடிப்பு மும்பை, மலேசியா,சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றது, ஜூன் மாதம் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. ஜூலை மாதம் படம் திரைக்கு வர உள்ளது என்கிறார் அக்ஷயா.

ஒளிப்பதிவு – V.K.ராமராஜு
இசை – SR.ராம்
பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, கவிதாவாணி V.லக்ஷ்மி
எடிட்டிங் – அஹமது,சந்துரு
மக்கள் தொடர்பு – மணவை புவன்.
இணை இயக்கம் – உன்னி பிரணவம்
இணை தயாரிப்பு – கவிதாவாணி V.லக்ஷ்மி
தயாரிப்பு – பாலச்சந்தர்.T
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அக்ஷயா.B

Actress Akshaya became director by Yaalee movie

thaman akshaya from yaalee movie

 

மய்யம் விசில் சத்தம் கேட்க ஆரம்பிச்சுட்டு.; கமலின் நடவடிக்கை என்ன.?

மய்யம் விசில் சத்தம் கேட்க ஆரம்பிச்சுட்டு.; கமலின் நடவடிக்கை என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan reaction to Maiam whistle complaintமக்கள் நீதி மையம் என்ற கட்சியை துவங்கியுள்ள கமல், சமீபத்தில் மையம் விசில் என்ற மொபைல் ஆப்பை அறிமுகம் செய்தார்.

அந்த ஆப் விசிலை டவுன் லோடு செய்து வைத்துக்கொண்டு, சமூகத்தில் நடக்கும் தவறுகள், மக்கள் விரோத செயல்கள் அனைத்தையும் பதிவு செய்து அனுப்பலாம் என கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீங்கள் அனுப்பும் தகவல் உடனடியாக பிரச்சினை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு ஆவன செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார் கமல்.

இதனையடுத்து ஏராளமானோர் விசில் செயலிலை டவுன்லோடு செய்து வந்த நிலையில், விசில் செயலியில் சில புகார்கள் வந்துள்ளன.

அதாவது சென்னை அனகாபுத்தூரில் உள்ள தோல் தொழிற்சாலையில் வெளியிடப்படும் கழிவுகள் அங்கிருந்து ஆற்றில் கலந்து நீர் மாசு ஏற்படுகிறது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கமல்ஹாசன் டுவிட்டரில் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது…

மக்கள் நீதி மையம் பெருமளவு வேலைவாய்ப்பு கொடுத்து வரும் தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல.

ஆனால் வணிகம் மற்றும் வேலைவாய்ப்பின் பெயரில் நிகழும் கொடுமையான மாசுகளுக்கு எதிரானது. அரசு இதுபோன்ற கொடுமையான மாசுக்களை தடுப்பதற்கான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

அனகாபுத்தூரில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை தேவை. தொழில்கள் மெல்லச் சாகக்கூடாது… மக்களும் தான் என கமல் பதிவிட்டுள்ளார்.

Kamalhassan reaction to Maiam whistle complaint

More Articles
Follows