இந்திய ரூபாய் நோட்டில் நேதாஜி படம் இடம் பெறுமா..?; ஐகோர்ட் உத்தரவால் பரபரப்பு.!

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இந்திய ரூபாய் தாள்களில் தேசத் தந்தை மஹாத்மா காந்தி படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

இந்திய ரூபாய் நோட்டில் காந்தியை போல தேசிய தலைவர்கள் படங்களும் இடம் பெற வேண்டும் அடிக்கடி கோரிக்கை எழும்.

இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் நேதாஜி படம் இடம்பெற வேண்டும் என பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில்…

“பிரிட்டீஷ் அரசை எதிர்த்துப் போரிட, இந்திய தேசிய ராணுவத்தை – ஐ.என்.ஏ., நேதாஜி உருவாக்கினார்.

விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டார் என நம்பப்பட்டாலும், அவரது உடல் மீட்கப்படவில்லை.

சுதந்திரத்திற்கு பாடுபட்ட அவருக்கு உரிய மரியாதை அளிக்க, மத்திய அரசு தவறி விட்டது.

சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் தியாகம் குறித்து தற்போதைய இளைஞர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை.

எனவே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படத்தை, ரூபாய் நோட்டுகளில் இடம்பெறச் செய்யக் கோரி, மத்திய அரசுக்கு மனு அனுப்பினேன்.

இது தொடர்பான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார்.

இதனையடுத்து நீதிபதிகள் ‘பிரதமர் மற்றும் நிதித்துறை செயலர், மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

Indian leader Netaji photo on currency note

Overall Rating : Not available

Latest Post