அரசு தேர்வில் ‘கவர்ச்சி பாம்’ சன்னி லியோனின் பெயர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசுப் பொதுத்தேர்வில் நாட்டில் உள்ள அனைத்து துறைகளை பற்றிய கேள்விகள் கேட்கப்படுவது வழக்கமான ஒன்று.

அதுபோல் சினிமா துறை சம்பந்தமான கேள்விகளும் அரசுத் தேர்வில் இடம் பெற்று வருகிறது.

ஆனால் சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற ஒரு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியின் கேர்ள் பிரண்ட் யார்? என்ற கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மத்திய அரசு பணியாளர்களுக்கான UPSC தேர்வில் சன்னிலியோனின் பெயர் இருந்ததால் இது தேர்வு எழுதியவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம்.

அந்த கேள்வியில் ஒரு புத்தகத்தின் பெயரை குறிப்பிட்டு அந்த புத்தகத்தை எழுதியவர் யார்? என்ற கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.

கொடுக்கப்பட்ட நான்கு பதில்களில் முதலாவதாக சன்னிலியோன் பெயரும், அதற்கான ஒரிஜினல் விடையை நான்காவதாக குறிப்பிட்டு இருந்தார்களாம்.

அதற்கான விடை சன்னி லியோன் இல்லையென்று தெரிந்தும் அதை குறிப்பிட்டது ஏனோ? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஜெய் நடித்த வடகறி என்ற தமிழ் படத்தில் சன்னி லியோன் ஆட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது.

சிம்பு-விக்னேஷ் சிவனை வாழ்த்திய நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்து அச்சம் என்பது மடமையடா படம் இன்று ரிலீஸ் ஆகிறது.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஷோக்காளி என்ற பாடலை விக்னேஷ் சிவன் எழுத, ஆதியா ராவ், கனகாரத்னம் மற்றும் ஸ்ரீரஸ்கல் உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.

இந்நிலையில் சிம்பு, கௌதம் உள்ளிட்ட படக்குழுவினரை வாழ்த்தியுள்ள நயன்தாரா, ஷோக்காளி பாடலுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதி-சமந்தா இணையும் படத்தலைப்பு உறுதியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இவ்வருடம் மட்டும் அரை டஜன் படங்களை கொடுத்துவிட்டு இன்னும் அசராமல் தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய்சேதுபதி.

இவர் அடுத்து நடிக்கவுள்ள படத்தை ஆரண்ய காண்டம் படப்புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்குகிறார் என்பதை பார்த்தோம்.

இதில் சமந்தா, மிஷ்கின், ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு அநீதிக் கதைகள் எனப் பெயரிட்டுள்ளனர்.

அதர்வா பட இயக்குனருடன் இணையும் ஜிவி.பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதர்வாவின் கேரியரில் முக்கியமான படம் பரதேசி, ஈட்டி, கணிதன் உள்ளிட்ட படங்களை சொல்லலாம்.

விரைவில் இவர் மணிரத்னம் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

ஆனால் இந்த செய்தி அவரை பற்றியது இல்லை.

அதர்வா நடித்த ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு பற்றியது.

இவர் அடுத்து இயக்கவுள்ள படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறாராம்.

அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

காலக்கூத்து…. ரசிகர்களை ஏமாற்றிய தனுஷ்-கலையரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படப்புகழ் கலையரசன் மற்றும் பிரசன்னா ஆகியோர் முதன்முறையாக இணைந்துள்ள படம் காலக்கூத்து.

இதில் தன்ஷிகா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே நாயகிகளாக நடித்துள்ளனர்.

நாகராஜன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை இன்று ட்விட்டரில் 6.00 மணிக்கு தனுஷ் வெளியிடுகிறார் என விளம்பரப்படுத்தப்பட்டது.

ஆனால் 20 நிமிடங்கள் ஆகியும் இதுவரை டீசரும் வெளியாகவில்லை.

அதற்கான காரணமும் வெளியாகவில்லை.

ஒருவேளை முடியவில்லை என்றால், காரணம் கூட சொல்லாமல் ரசிகர்கள் ஏன் இப்படி காத்திருக்க வைக்கின்றனர் என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பின்குறிப்பு… இச்செய்தி வெளியாகும் வரை எந்த தகவலும் வரவில்லை. அதன்பின்னர் தற்போது நடிகர் பிரசன்னாவின் ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Due to a slight technical glitch, teaser launch is pushed to 11 tonight! will launch as announced. sorry guys

 

ரஜினிக்கு இவர் வழக்கமான வில்லன் இல்லையாம்; அதுக்கும் மேல!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்க, லைக்கா பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படம் 2.ஓ.

இதில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார், சுதான்ஷு பாண்டே நடிக்க, ஏஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் வில்லன் கேரக்டர் குறித்து சுதான்ஷு பாண்டே தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது…

எனக்கும் ரஜினிசாருக்கு பைட் சீன்ஸ் இல்ல. நான்தான் அவருக்கு வில்லன்.

ஆனால் வழக்கமான வில்லன் இல்லை.

இதில் விஞ்ஞானி போஹ்ராவின் மகனாக நடிக்கிறேன்.

எனக்கும் அக்ஷய் குமாருக்கும் அதி பயங்கர பைட் சீன்ஸ் உள்ளது.

நிச்சயம் ரசிகர்களுக்கு அது ஆக்ஷன் விருந்தாக இருக்கும்” என்றார்.

இப்படம் குறித்த விபரங்களை கலைஞர்கள் வெளியிடக்கூடாது என ஷங்கர் முன்பே கூறியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

More Articles
Follows