கூட்டி கழிச்சுப்பாரு கணக்கு சரியா வரும்; சர்கார் படத்தில் ரஜினி பன்ச்

கூட்டி கழிச்சுப்பாரு கணக்கு சரியா வரும்; சர்கார் படத்தில் ரஜினி பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

In Sarkar movie Vijay and Radharavi used Annamalai style punch dialogueசூப்பர் ரஜினிகாந்த் நடித்து வெளியான அண்ணாமலை திரைப்படம் 25 ஆண்டுகளை கடந்துவிட்டது.

ஆனாலும் அதில் இடம் பெற்ற கூட்டிக்கழிச்சிப்பாரு கணக்கு சரியா வரும் என்ற டயலாக்கை யாரும் எளிதில் மறக்க முடியாது.

படத்தின் வில்லன் ராதாரவி இந்த டயலாக்கை பல முறை சொல்லிக் கொண்டே இருப்பார்.

ஒருகட்டத்தில் அதே டயலாக்கை ராதாரவியிடம் ரஜினி திருப்பி சொல்வார். அப்போது தியேட்டரில் அப்ளாஸ் அள்ளியது எல்லாம் பெரும் கதை.

சரி. இப்போது விஷயத்துக்கு வருவோம்.

இதுபோன்ற ஒரு டயலாக் விஜய்யின் சர்கார் படத்திலும் இடம் பெற்றுள்ளதாம்.

அரசியல்வாதியாக நடித்துள்ள ராதாரவி இது போன்ற ஒரு டயலாக்கை பல காட்சிகளில் சொல்வாராம்.

அதே டயலாக்கை வேறு ஒரு சமயத்தில் விஜய் சொல்வது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.

அந்த காட்சி மாஸாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

In Sarkar movie Vijay and Radharavi used Annamalai style punch dialogue

பாலியல் கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க பெண்ணியல் ஆர்வலர்கள் கோரிக்கை

பாலியல் கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க பெண்ணியல் ஆர்வலர்கள் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Minor Girl Molestation Case solidarity Protest by Students and Celebritiesசென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமி பாலியல் வல்லுறவு செய்து துன்புறுத்தப்பட்டுள்ள நிகழ்வை கண்டித்து சென்னையில் பெண்ணியல் ஆர்வலர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய பெண்ணியல் ஆர்வலரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான அப்சரா அவர்கள், சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

பெண் குழந்தைகளுக்கு உடன் பழகுவோர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை சிறுவயதிலிருந்தே கற்றுத் தருவது அவசியமான ஒன்று என்று கூறினார்.

அதிலும் பிறரிடம் பழகும் போது தொட்டுபேசுவது பேசுவது குறித்த முழுமையான புரிதலை பெண் குழந்தைகளுக்கு இன்றைய காலக்கட்டத்தில் அவசியமாகியுள்ளது என்றார்.

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும்.

இதன் மூலம் சமூகத்தில் இதுபோன்ற குற்றச்செயல்களை செய்ய நினைப்போருக்கு ஒருவித அச்ச உணர்வை இது போன்ற தண்டனைகள் நினைவுப்படுத்தும் என்றார்.

தொடர்ந்து பேசிய டாக்டர் கமலா செல்வராஜ், பெண் குழந்தைகளை தவறான எண்ணத்தில் தொட நினைத்தால் மரண தண்டனை நிச்சயம் என்பது நினைவுக்கு வரவேண்டும் என்றார்.

பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து சிறையில் அடைப்பதென்பது தேவையற்ற நிர்வாக செலவுகள் என்றும் டாக்டர் கமலா செல்வராஜ் குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மன நல ஆலோசகர் வசந்தி பாபு, நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராமன், சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Minor Girl Molestation Case solidarity Protest by Students and Celebrities

Minor Girl Molestation Case solidarity Protest by Students and Celebrities

விஜய்யை இயக்க அட்லிக்கு ஏகப்பட்ட கண்டிசன்ஸ் போடும் ஏஜிஎஸ் ?

விஜய்யை இயக்க அட்லிக்கு ஏகப்பட்ட கண்டிசன்ஸ் போடும் ஏஜிஎஸ் ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AGS conditions to Atlee to direct Vijay for Thalapathy 63ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தை அடுத்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் என்பதை பார்த்தோம்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க அட்லி இயக்கவுள்ளார்.

விஜய்யுடன் அட்லியும் கீர்த்தியும் இணைவது இது 3வது முறையாகும்.

இப்படத்தை இயக்க அட்லிக்கு ஏஜிஎஸ் நிறுவனம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

தெறி படத்தில் எமியின் கால்ஷீட்டை நிறைய பெற்றுக் கொண்டு படத்தில் நிறைய காட்சிகளை வைக்கவில்லையாம்.

அதுபோல் மெர்சல் படத்தை சொன்ன பட்ஜெட்டில் முடிக்காமல் இழுத்தடித்தாராம் அட்லி.

அதுபோன்ற தவறுகளை இதில் செய்யக் கூடாது என கறாராக சொல்லிவிட்டார்களாம்.

மேலும் படத்தின் பட்ஜெட்டை முன்பே அறிவித்துவிட்டு அக்ரிமென்ட்டில் ஒப்பந்தம் போட சொல்லி இருக்கிறார்களாம். பட்ஜெட் எகிறினால் அதற்கு அட்லியே பொறுப்பு என தெரிவித்துள்ளதாம் ஏஜிஎஸ்.

AGS conditions to Atlee to direct Vijay for Thalapathy 63

25 வருடங்களை கொண்டாடிய ஷங்கருக்கு உதவி இயக்குனர்கள் வாழ்த்து

25 வருடங்களை கொண்டாடிய ஷங்கருக்கு உதவி இயக்குனர்கள் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Shankar completed 25 years in his Cinema carrierபிரபல தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் தயாரித்த ‘ஜென்டில்மேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர்.

1993-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது.

ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகி 25 வருடங்கள் ஆகிவிட்டன.

எனவே, பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் பாராட்டி வருகின்றனர்.

25 வருடங்கள் ஆனாலும் இந்த பயணத்தில் 12 படங்களை மட்டுமே ஷங்கர் இதுவரை இயக்கியுள்ளார்.

ஷங்கரிடம் உதவி இயக்குனர்களாக இருந்த மாதேஷ், பாலாஜி சக்திவேல், ஹோசிமின், வசந்தபாலன், அறிவழகன், அட்லி உள்ளிட்ட பலரும் ஷங்கரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் ஷங்கருக்கு நினைவுப் பரிசையும் கொடுத்து கௌரவித்தனர்.

அந்த சந்திப்பு குறித்து ஷங்கர் ,“என்னுடைய உதவியாளர்களின் அளவுக்கதிகமான அன்பினால் நனைந்தேன். நீங்கள் இல்லாமல் என்னுடைய இந்தப் பயணம் நடந்திருக்காது,” என்று கூறினார்.

ஷங்கர் இயக்கியுள்ள ரஜினியின் 2.0 அடுத்து வெளியாக உள்ளது. விரைவில் கமல்ஹசான் நடிக்கவுள்ள இந்தியன் 2 படத்தை தொடங்கவுள்ளார்.

Director Shankar completed 25 years in his Cinema carrier

shankar 25 years

கலைஞர பார்க்கல; குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்னேன்.. : ரஜினி

கலைஞர பார்க்கல; குடும்பத்தாருக்கு ஆறுதல் சொன்னேன்.. : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth met Karunanidhi and his family and Kauvery Hospital at Chennaiஇந்திய அரசியலின் மூத்த தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இதனால் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்துச் செல்கின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தியும் , மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் தன் பட சூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பி காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.

ஆனால் கருணாநிதி நல்ல உறக்கத்தில் இருந்ததால் அவரை பார்க்கவில்லை.

பின்னர் கருணாநிதி குடும்பத்தினரிடம் அவருடைய உடல்நிலை பற்றிக் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்…

“இந்திய அரசியலில் மூத்த தலைவரான கருணாநிதியின் நலனை விசாரிக்க வந்தேன். அழகிரி, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட அவரின் குடும்பத்தினர் அங்கு இருந்தனர்.

அவர்களுக்கு நான் ஆறுதல் மட்டுமே சொன்னேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

கலைஞர் தூங்கிக் கொண்டிருந்ததால் என்னால் பார்க்க முடியவில்லை” என்றார்.

Rajinikanth met Karunanidhi and his family and Kauvery Hospital at Chennai

சிங்கத்தை வசூல் மழையில் நனைக்கும் கடைக்குட்டி சிங்கம்

சிங்கத்தை வசூல் மழையில் நனைக்கும் கடைக்குட்டி சிங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya and his brother Karthi were happy about Kadaikutty Singam collectionsஅட.. இந்த காலத்துல பேமிலி செண்டிமென்ட் எல்லாம் ஒர்க் அவுட் ஆகாது என்ற ஒரு பேச்சு பல வருடங்களாக இருந்து வருகிறது.

ஆனால் அதையெல்லாம் தவிடு பொடியாக்கி வசூலை வாரி குவித்து வருகிறது கடைக்குட்டி சிங்கம்.

கார்த்தி, சத்யராஜ், சாயிஷா, சூரி நடித்திருந்த இப்படத்தை பாண்டிராஜ் இயக்க, நடிகர் சூர்யா தயாரித்திருந்தார்.

விவசாயத்தின் மேன்மையையும் கூட்டுக் குடும்பத்தையும் பற்றி சொன்ன இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படம் இதுநாள் வரை பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது.

2 வாரங்களில் ரூ.62க்கு கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டித் தந்துள்ளதாம்.

இதனால் படத்தை தயாரித்த சூர்யா தரப்பு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

Suriya and his brother Karthi were happy about Kadaikutty Singam collections

More Articles
Follows