ஜி.வி.பிரகாஷுக்காக வடிவேலு எடுக்கும் ரிஸ்க்… ரஸ்க் ஆகுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘புரூஸ் லீ’ மற்றும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்கள் அடுத்த நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு, தில்லுக்கு துட்டு ராம்பாலா இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

ஸ்டீபன் தயாரிக்கும் இப்படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதை தெரிவித்திருந்தோம்.

தற்போது வடிவேலு கேரக்டர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

காமெடி கலந்த வில்லன் வேடத்தை செய்யப்போகிறாராம் வடிவேலு.

எத்தனையோ படங்களில் காமெடியனாகவும் நாயகனாகவும் வடிவேலு நடித்திருந்தாலும், அவர் வில்லனாக நடிப்பது இதான் முதல்முறை.

அவர் ஒரு படத்தில் சொல்வதுபோல… அவர் எடுக்கும் ரிஸ்க் ரஸ்க் ஆகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கீர்த்திக்கு பதிலாக ரித்திகா; மீண்டும் விஜய்சேதுபதிக்கு ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான படம் றெக்க.

இதற்கு சில நாட்களுக்கு முன் ‘ஆண்டவன் கட்டளை’ என்ற படம் வெளியானது.

மணிகண்டன் இயக்கிய இப்படத்தில் ரித்திகா சிங் நாயகியாக நடித்திருந்தார்.

இப்படத்தை போலவே இப்படத்தின் ஜோடியும் பெரிதாக பேசப்பட்டது.

இந்நிலையில் இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது.

‘ரேணிகுண்டா’ இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கும் படத்தில்தான் இவர்கள் இணைகின்றனர்.

முதலில் இவ்வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ ரீமேக்.? ஞானவேல்ராஜா விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அரசியல் உலகை மிஞ்சும் வகையில் தமிழ் சினிமா உலகில் எதிர்பாராத கூட்டணி அண்மைகாலமாக உருவாகி வருகிறது.

அப்படி உருவான கூட்டணிதான் சூர்யா படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என்ற செய்தி.

‘தானா சேர்ந்த கூட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இது பாலிவுட்டின் ‘ஸ்பெஷல் 26’ படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டு வந்தது.

இது ரீமேக் படம் இல்லை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

இப்படத்தை அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

விஜய்-கருணை; அஜித்-நல்லஜோடி; சிவகார்த்திகேயன்-ஆச்சரியம்; – த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா.

இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை கேட்டனர்.

சிலர் திருமணத்தைப் பற்றி கேட்டபோது, அது எனக்கு பிடிக்காத கேள்வி என்று பதிலளித்தார்.

அஜித்-ஷாலினி ஜோடிப் பொருத்தம் பற்றி ரசிகர் ஒருவர் கேட்டதற்கு மேட் பார் ஈச் அதர் (மிக சரியான பொருத்தமான ஜோடி) என்றார்.

விஜய் பற்றி கேட்டபோது, தொழில் பக்தி கொண்டவர். கூடவே அவரது கருணை உள்ளம் பிடிக்கும் என்றார்.

ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனின் லேடி கெட்டப் குறித்து கேட்டதற்கு ‘அவரது முயற்சி பெரும் ஆச்சரியமானது’ என்றார்.

அன்று கமல்; இன்று ஐஸ்வர்யாராய்; அரசியல் வலையில் சினிமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2013ஆம் பெரும் எதிர்பார்ப்பில் உருவான கமலின் ‘விஸ்வரூபம்’ படத்திற்கு விஸ்வரூப பிரச்சினை எழுந்தது.

இஸ்லாமிய சமூகத்தை இழிவு படுத்தும் காட்சிகள் படத்தில் உள்ளதாக பிரச்சினை உருவாக படம் தமிழகத்தில் வெளியாகாமல் அண்டை மாநிலங்களில் வெளியானது.

இதனால் நாட்டை விட்டு வெளியேற தயார் என கமல் கூறியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அதன்பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், (தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட இது தொடர்பாக அப்போது பேட்டியளித்திருந்தார்) சர்ச்சைக்குரிய காட்சிகளை வெட்டிய பின் படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆனது.

தற்போது இதே நிலைமை கரண் ஜோஹரின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள ‘ஏ தில் ஹே முஷ்கில்’ என்ற படத்திற்கு எழுந்துள்ளது.

பாகிஸ்தான் நடிகர் ஒருவர் இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்திற்கு பிரச்சினை உருவாகியுள்ளது.

இப்படம் வெளியானால், மஹாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா அமைப்பு திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றனர்.

இதனால் மஹாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தலைமையில் படக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையின் முடிவில் இனி தனது படங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று தயாரிப்பாளர் கூறியதன் பின்னர் படம் வெளியாக தயாராகிவிட்டது.

ஒரு திரைப்படத்தை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல அனுமதிக்கலாமா? என்பதை முடிவு செய்ய சென்சார் கமிட்டி உள்ளது.

ஆனால் இது போன்ற சில அமைப்புகளால் சினிமாவிற்கு மேலும் பிரச்சினைகள் வலுத்து வருகிறது.

மேலும் இந்திய மண்ணில் பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட் விளையாட வருகிறார்கள். இங்குள்ளவர்கள் அங்கே விளையாட செல்கிறார்கள்.

ஆனால், மொழி, மதம், இனம், மாநிலம் பார்க்காத சினிமாவில் தற்போது இதுபோன்ற பிரச்சினைகள் எழுவதன் காரணமாக இயக்குனரின் படைப்பு சுதந்திரம் பறிக்கப்படும் சூழ்நிலை உருவாகும் என்பது மட்டும் நிச்சயமே.

‘விழாவுக்கு வராத நயன்தாராவுக்கு சம்பளம் கட்..’ – விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் இணைந்து நடித்துள்ள படம் காஷ்மோரா.

கோகுல் இயக்கியுள்ள இப்படம் வருகிற அக். 28ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் கார்த்தி, விவேக், கோகுல், படத்தின் தயாரிப்பாளர் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது விவேக் பேசும்போது….

ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி வரவில்லை என்றால் இந்த காஷ்மோரா படத்தை இந்தியாவே கொண்டாடும். அந்த அளவுக்கு இருக்கும்.

ஆனால் இப்போது இந்த படம் வருவதால் நிச்சயம் பாகுபலியுடன் ஒப்பீடு இருக்கும். அதுவேண்டாம். இப்படம் ஒரு ஜாலியான படம்.

நயன்தாராவுடன் கள்வனின் காதலி படத்தின் நடித்தேன். அதன் பிறகு அவருடன் நடிக்கும் வாய்ப்பு இப்படத்தில் கிடைத்தும், அவருடன் நடிக்கும் சீனே படத்தில் இல்லை.

இப்போது நயன்தாரா இங்கு வரவில்லை. பொதுவாக சில நடிகைகளும் வருவதில்லை.

அதற்கு அவர்கள் புத்திசாலித்தனமாக சொல்லும் காரணம் என்னவென்றால், நான் வந்தால் சென்டிமெண்ட்டாக ஒர்க் அவுட் ஆகாது என்கின்றனர்.

அப்படி சொல்லும் அவர்கள் படத்தின் சம்பளத்தின் கடைசி தொகையை (லாஸ்ட் பேமண்ட்) வாங்காமல் இருப்பார்களா? என்று பேசினார் விவேக்.

More Articles
Follows