தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து ஓரிரு தினங்களுக்கு முன் வெளியான 2.0 படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
உலகின் பல நாடுகளிலும் இப்படம் திரையிடப்பட்டாலும் மக்கள் தொகை அதிகமுள்ள சீனாவில் இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
எனவே அடுத்த 2019 வருடம் பிப்ரவரி மாதம் சீனாவில் 2.ஓ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாம் தயாரிப்பு லைகா.
பாகுபலி படமும் இதுபோல்தான் சில மாதங்களுக்கு பின் சீனாவில் வெளியானது. அங்கு பல சாதனையை படைத்தது.
2.ஓ படம் பாகுபலி2 சாதனையை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
In 2019 February Lyca plans to release 2pointO in China country