தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத் திறமை படைத்தவர் நடிகர் தனுஷ்.
இவரின் தயாரிப்பில் உருவாகியுள்ள ரஜினியின் காலா திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
நடைபெற்று வரும் சினிமா ஸ்டிரைக்கால் இந்த தேதியில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவரின் தயாரிப்பு இல்லாமல் இவர் நடித்துள்ள 4 படங்கள் இந்த 2018ல் வெளியாகவுள்ளதால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழச்சியில் உள்ளனர்.
தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான தி எக்ஸ்ட்ராடனரி ஜர்னி ஆஃப் பகீர் படம் மே மாத இறுதியில் வெளியாகவுள்ளது.
இதனையடுத்து வடசென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி2 ஆகிய படங்களும் திரைக்கு வரவுள்ளது.
In 2018 Dhanush fans will have four movies from their star