தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு பிரமாண்டமான படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது.
இப்படத்தை இயக்க சுந்தர் சி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தியை முன்பே பார்த்தோம்.
இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகவுள்ளதால் பெரிய ஹீரோவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.
இதில் சூர்யா நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் அந்த செய்திகளை மறுத்தார்.
தற்போது அந்த வேடத்தில் விஜய் நடிப்பார் என கூறப்படுகிறது.
இது உறுதியாகும் பட்சத்தில் விஜய்-சுந்தர் சி இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.