ரெண்டா.? எப்பவும்ஒரே சூப்பர்ஸ்டார் ரஜினி; சுஹாசினியை கண்டித்த இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை வெகு விமரிசையாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னையில் 2 நாட்களாக நடத்தியது.

இன்று பிப்ரவரி 3ஆம் தேதி இதன் இறுதி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ரஜினி, கமல், ஷங்கர், விக்ரம், விஜய்சேதுபதி, கார்த்தி மற்றும் தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், மோகன்பாபு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மலையாள சினிமாவில் இருந்து டைரக்டர் சித்திக், நடிகர் நரேன் கலந்துக் கொண்டார்.

இந்த விழாவில் ரஜினிகாந்த் மேடையேறினார்.

அப்போது சுஹாசினி பேசும்போது… இரண்டு சூப்பர் ஸ்டார்கள் மேடையில் உள்ளனர். ஒருவர் இசை சூப்பர் ஸ்டார் இளையராஜா மற்றொருவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றார்.

உடனே இடைமறித்த இளையராஜா அவர்கள்… ஏம்மா.. மேடையேறிட்ட என்ன வேனாலும் பேசுவீங்களா? சினிமான்னா அது ஒரே சூப்பர் ஸ்டார் தான். அது எப்பவுமே ரஜினிதான் என்று சுஹாசினியை கண்டித்து பேசினார் இளையராஜா.

என் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்..; ஷங்கர் சொன்ன சீக்ரெட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அவரின் திரைத்துறை சாதனைகளை கௌரவிக்கும் வகையிலும் இளைராஜா 75 என்ற நிகழ்ச்சியை 2 நாட்களாக சென்னையில் நடத்தியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.

இன்று பிப்ரவரி 3ஆம் தேதி இதன் இறுதிநாள் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

அப்போது இளையராஜைவை பற்றி பேச டைரக்டர் ஷங்கர் மேடையேறினார்.

இந்த விழாவை நடிகை ரோகினி தொகுத்து வழங்கும் போது, இளையராஜா மற்றும் ஷங்கர் கூட்டணியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். என்றார்.

உடனே அதை மறித்து, யாருடன் பணி புரிய வேண்டும் என்பது ஷங்கரின் விருப்பம் என்றார்.

அதன்பின்னர் ஷங்கர் பேசும்போது…

ஜென்டில்மேன் படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை முடிவு செய்துவிட்டு அவரை சந்திக்க அனுமதியும் வாங்கிவிட்டேன்.

ஆனால் அவர் மீது பயம். எப்படி வேலை செய்வது? என்பதால் அதன் பின்னர் சந்திக்கவில்லை.

ஆனால் அரசுக்காக நான் இயக்கிய வருமான வரி விழிப்புணர்வு விளம்பரத்திற்கு இளையராஜா தான் இசையமைத்தார். அதில் கமல் நடித்திருந்தார்.

அந்த இசையில் சில திருத்தங்களை சொன்னேன். உடனே அவரும் எந்த வித தயக்கமுமின்றி செய்து கொடுத்தார்.” என்று பேசினார்.

இளையராஜா 75 நிகழ்ச்சியில் மகள் ஸ்ருதியுடன் இணைந்து பாடிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், இளையராஜா 75 என்ற பாராட்டு நிகழ்ச்சி சென்னையில் 2 நாட்களாக நடந்தது.

இதில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், தனது மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து பாடல்களை பாடினார்.

ஹேராம் படத்திலிருந்து ஹே ராம் ராம் பாடல்களை பாடினார். இதில் சில திருத்தங்களை இளையராஜா அதையும் சரி செய்து பாடினார்.

சிவப்பு ரோஜாக்கள் படத்தில் இடம்பெற்ற, நினைவோ ஒரு பறவை என்ற பாடலை பாடினர்.

விரும்பாண்டி படத்திலிருந்து உன்ன விட இந்த உலகத்துல என்ற பாடலை பாடகி சித்ரா உடன் இணைந்து பாடினார்.

ஒவ்வொரு பாடல்களின் போதும் சில சுவாரஸ்யமான நினைவுகளை கமலும், இளையராஜாவும் பகிர்ந்து கொண்டது நிகழ்ச்சியின் சிறப்பு.

என்னைவிட கமலுக்கு தான் நல்ல பாட்டு கொடுத்தார் இளையராஜா..; ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா 75 நிகழ்ச்சி சென்னையில் நடைப்பெற்றது.

அதில் நடிகர் ரஜினிகாந்த பேசினார். அவர் பேசியதாவது…

எல்லா கலைகளை விட சிறந்தது இசை கலைதான்.

இசையமைப்பாளர்களுக்கு ஆண்டவனின் ஆசிர்வாதமும், நம்மை இயக்கும் சக்தியும் உள்ளது. சில லிங்கம் நீரில் உருவாகும், சில லிங்கம் மனிதனால் உருவாக்கப்படும், சுயம்புவாகவும் சில லிங்கம் உருவாகும், அது தானாகவே உருவாகும்.

இளையராஜா சுயம்பு லிங்கம் போன்றவர், அது அபூர்வமாகவே உருவாகும், அது வெளிப்படும் போது அதன் சக்தியும், அதிர்வும் அபாரமாக இருக்கும்.

அன்னக்கிளியில் ஆரம்பித்த அந்த அபூர்வ சக்தியை இப்போது வரை பார்க்கிறேன். நான், அவரை சார் என்று தான் கூப்பிடுவேன்.

ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் பேண்ட் சர்ட்டிலிருந்து வேட்டி ஜிப்பாவுக்கு மாறினார் இளையராஜா.

அந்த நிமிடத்திலிருந்து அவரை சாமினு கூப்பிட ஆரம்பிச்சுட்டேன், என்னை, அவரும் சாமினு தான் கூப்பிடுகிறார்,

எனது படங்களை விட கமல் படங்களுக்கு தான் மிக அருமையான இசைகளை கொடுத்தார் என்றார்.

அப்போது குறுக்கிட்ட இளையராஜா, இவர் இப்படி சொல்றார், அவரை (கமலை) கேட்டால் ரஜினிக்கு போட்ட மாதிரி எனக்கு ஏன் பாட்டு போட மாட்டேங்கிறீங்க என சொல்வார் என்றார்.

அதன்பின்னர் மேடைக்கு வந்தார் கமல்ஹாசன். அப்போது ஆமா என் படத்தை விட ரஜினிக்கு நல்ல பாடல்கள் கொடுத்துள்ளார் இளையராஜா என்றார்.

இளையராஜா குரலுக்கு ரஹ்மான் இசை; இசைஞானிக்கு தங்க வயலின் பரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்றது.

நாளை மாலையும் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற உள்ளது.

இன்றைய நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார்.

இன்றைய நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு தங்கள் சினிமா பயணத்தில் இளையராஜாவின் பங்கு குறித்து பேசினர்.

நடிகர்கள் சிவகுமார், விஷால், மனோபாலா, நவரச நாயகன் கார்த்திக், ராதா, நதியா, சுஹாசினி, கோவை சரளா உள்ளிட்டவர்கள் மேடையேறி பேசினர்.

நடிகைகள் ரம்யா நம்பீசன், இனியா, நிக்கி கல்ராணி, ஆண்ட்ரியா, நமீதா உள்ளிட்டவர்கள் இளையராஜா பாடலுக்கு ஆடினர்.

நடிகைகள் சுஹாசினி, கஸ்தூரி, லட்சுமி பிரியா, அனுஹாசன் உள்ளிட்டவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்கம் சார்பில், இளையராஜாவுக்கு தங்க வயலின் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது.

இன்றைய நிகழ்ச்சியில் ஹைலைட்டாக இளையராஜாவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் மேடையேறினார்.

‘ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடன் 500 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்” எனக் குறிப்பிட்டு இளையராஜா பேசினார்.

”உங்களுடன் ஒரு படத்தில் பணியாற்றுவதே பெரிய விஷயம்”என ஏஆர். ரஹ்மான் அவரை புகழ்ந்து பேசினார்.

இதில் திடீரென நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்களில் ஒருவரான கஸ்தூரி அவர்கள் இளையராஜா பாடல் பாட ஏஆர். ரஹ்மான் இசையமைக்க வேண்டும் என ரசிகர்கள் சார்பாக கேட்டுக் கொண்டார்.

அடுத்த கனமே `மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையா..!’ என இளையராஜா பாட அதற்கேற்ப ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.

இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் கைதட்ட அந்த இடமே அதிர்ந்தது.

Ilayaraaja 75 Highlights AR Rahman compose music of Ilayaraaja voice

அசுரன் படத்தில் தனுஷுடன் இணையும் கருணாஸின் மகன் கென்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் இணைந்து நடிக்கும் படம் ‘அசுரன்’.

கலைப்புலி எஸ் தானு இப்படத்தை தயாரிக்க ஜிவி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படமானது கரிசல் எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ என்ற நாவலை மையமாக வைத்து உருவாகி வருகிறது என்பதை பார்த்தோம்.

தனது அண்ணனை கொலை செய்தவனைப் பழிவாங்கும் பதினைந்து வயது சிறுவன், தனது தந்தையுடன் ஒரு வாரம் காடுகளில் சுற்றித் திரிந்து, நீதிமன்றம் செல்லும் பயணம் தான் இந்த ‘வெக்கை’ நாவல்.

தந்தை கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. அந்த சிறுவன் கேரக்டரில் நடிகர் கருணாஸின் மகன் கென் நடிக்கவுள்ளார்.

இதற்கு முன்பே ‘அழகு குட்டி செல்லம்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களில் கென் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Karunas son Ken acting in Dhanushs Asuran

More Articles
Follows