சுயசரிதை எழுத மாட்டேன்; சுய தம்பட்டம் சரித்திரமாகாது… இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் இளையராஜாவின் 75வது பிறந்த நாள் விழா சென்னை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவிகளிடையே இளையராஜா பேசினார். அவர் பேசியதாவது…

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் தான் எனது ஊர். அங்கு இசை கற்க எந்த வாய்ப்பும் இல்லை. அண்ணன் வரதராஜன் கச்சேரி செய்வார். அவர் ஆர்மோனிய பெட்டியை தொட விடமாட்டார்.

பிறகு நானாகவே மெல்ல கற்றுக் கொண்டேன். சென்னைக்கு வரும்போது வீட்டில் இருந்து ரேடியோவை விற்று அம்மா 400 ரூபாய் கொடுத்தார். அந்த பணத்துடன் சென்னை வந்தேன்.

இப்போது வரை எளிமையாக வாழவே விரும்புகிறேன்.

நான் எத்தனை பாடல்களுக்கு இசை அமைத்துவிட்டேன்.

ஆனால் எம்.எஸ்.விசுவநாதன் இசையமைத்த “மலைப்பொழுதின் மயக்கத்திலே நான்…” பாடல் தான் எனக்கு பிடித்த பாடல்.

பாடலுக்கேற்ற பாடகர்களை தேடுவேன். யாருமே கிடைக்காவிட்டால் நானே பாடி விடுவேன்.

இசை என்பது இயல்பாகவே வர வேண்டும்.

என் இசை தான் என் சுயசரிதை. அதை நாள்தோறும் எழுதிக் கொண்டிருக்கிறேன். எனவே சுயசரிதை எழுதும் எண்ணம் இல்லை.

சுய தம்பட்டம் எப்போதும் சரித்திரம் ஆகாது. உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வாழ வேண்டும். என் வாழ்க்கையில் இருந்து மற்றவர்கள் கற்றக் கொள்ள எதுவுமே இல்லை.”

இவ்வாறு இசைஞானி இளையராஜா பேசினார்.

இயக்குனர் ஷங்கரால் இந்தியாவுக்கு பெருமை.. – ஏஆர். ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட் தொடங்கி பாலிவுட், ஹாலிவுட் படங்கள் என பிஸியாக இருக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான்.

மேலும் அவருடைய கதை தயாரிப்பில் உருவாகும் ‘99 சாங்க்ஸ்’ படத்தின் வெளியீட்டு வேலைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இது தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளில் அவர் கலந்துக் கொண்டபோது 2.0 படம் பற்றியும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில்… “2.0 போன்ற ஒரு படத்தை டைரக்டர் ‌ஷங்கரால் மட்டுமே கொடுக்க முடியும்.

தான் விரும்பும் தரத்தை கொடுக்க அவர் மெனக்கெட்டு வருகிறார்

படத்தில் ஒரு முக்கியமான பாடலைப் பார்த்தேன். அதில் கிராபிக்ஸ் காட்சிகள் இல்லை. ஆனால் அதை அற்புதமாக படமாக்கியிருந்தார்.

கிளைமாக்ஸ் காட்சியும் பார்த்தேன். அந்த காட்சி இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை. ‌

ஷங்கர் போன்ற திறமைசாலியால் நம் இந்தியாவுக்கே பெருமை” என பதிலளித்தார்.

லைகா தயாரித்து வரும் இப்படத்தல் ரஜினிகாந்த், அக்‌‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

Director Shankar is pride of Indian Cinema says AR Rahman

கலைஞர் கவலைக்கிடம்; சூர்யா சூட்டிங் & விஜய் மீட்டிங் கேன்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் கடந்த 12 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுநாள் வரை தீவிர சிகிச்சையில் இருந்து அவர் இன்று கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே அவரது உடல்நிலையை குறித்து வந்த செய்திகளை அடுத்து நடிகர் சூர்யா படமான என்ஜிகே சூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மேலும் பாடலாசிரியர் பா விஜய் நடித்துள்ள ஆருத்ரா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Suriya shooting and Pa Vijay meeting cancel due to Karunanidhi health issue

பவர் ஸ்டார் படம் ரீமேக்கில் தல? தளபதி.? யோசனையில் லைகா..!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான படம் வெளியான அந்தரிண்டிகி தாரேதி.

2016ல் வெளியான இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற, இந்தியில் டப் செய்யப்பட்டது.

கன்னடத்தில் சுதீப் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழ் ரீமேக் உரிமையை லைகா பெற்றுள்ளது என்பதை பார்த்தோம்.

இப்படத்தில் அஜித் நடிக்க வைக்க முயற்சிக்கலாம் என்ற யோசனை இருந்த்தாம்.

ஆனால் விஸ்வாசம் படம் வெளியான தபின்னர் தான் அடுத்த படம் பற்றி முடிவை அஜித் எடுக்கவுள்ளாராம்.

எனவே தல இல்லேன்னா தளபதி நாடலாமா? என யோசித்து வருகிறதாம் லைகா.

ஆனால் சர்கார் படத்தை முடித்துவிட்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

சர்கார் விஜய்யின் அறிமுக பாடலுக்கு நடனம் அமைக்கும் பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ‘சர்கார்’.

இந்தியாவில் சில பகுதிகளில் இதன் சூட்டிங்கை முடித்த கையோடு சில காட்சிகளையும், பாடலையும் படம் பிடிக்க ‘சர்கார்’ படக்குழுவினர் அமெரிக்காவிலுள்ள லாஸ்வேகாஸ் பயணமாகியுள்ளனர்.

இதில் கலந்துக் கொள்வதற்காக வரலட்சுமியும் அமெரிக்கா பயணமாகியுள்ளார்.

அமெரிக்காவில் ‘சர்கார்’ படத்தின் அறிமுக பாடலை படம் பிடிக்க, இந்த பாடலுக்கு ஷோபி மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.

விஜய் நடித்த ‘கத்தி’ படத்தில் இடம் பெற்ற ‘பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா…’ என்று துவங்கும் பாடலுக்கு ஷோபி மாஸ்டர் தான் நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் நடித்துக் கொண்டே *திரைப்பட்டறை* நடத்தும் ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மிகச்சிறந்த கலைஞர் பாரதிமணியின் “சென்னை அரங்கம்” நாடகக் குழுவில் பயிற்சி பெற்றவர் ராம்.

சென்னையில் மிக குறுகிய வயதில் “திரைப்பட்டறை” நடத்தும் யங் இளைஞர்.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கான தனித்துவமான நடிப்பை வெளிக்கொணர்வதில் திரைப்பட்டறையின் பங்கு மிக முக்கியமானது.

நடிப்பு மட்டுமின்றி பறையிசை, சிலம்பம், தேவராட்டம், கரகாட்டம், நாட்டுப்புற கலைகள், மரபு விளையாட்டுக்கள், பொம்மலாட்டம், திறன் வளர்ப்பு வகுப்புகள், பாவனை நாடகங்கள், ஸ்டோரி டெவலப்பிங், என அனைத்தையும் ஒரே இடத்தில் கற்றுக்கொடுப்பது திரைப்பட்டரையின் கூடுதல் சிறப்பு.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதிருந்து எப்போதும் நாடகத்தின் மீது எனக்கு பெரும் காதல்.

படிப்பு முடிந்தவுடன் பாரதிமணி சாரின் “சென்னை அரங்கம்” குழுவில் இணைந்து கொண்டேன்.

விழிப்புணர்வு வீதி நாடகங்கள், மேடை நாடகங்கள் என சுமார் நாற்பது நாடகங்களை அரங்கேற்றம் செய்துள்ளேன்.

ஒரு முறை எம்.ஜி.ஆர் ஜானகி ஸ்கூலில் நடைபெற்ற நாடகத்தை பார்க்க சமுத்திரகனி வந்தார். என் நடிப்பை ரொம்ப ரசித்தவர் “போராளி” படத்தில் அறிமுகப்படுத்தினார்.

சமுத்திரகனி மூலம் சசிகுமார் நல்ல பழக்கம் ஏற்பட்டது அவர் சுந்தரபாண்டியன் படத்தில் ஒரு நல்ல கேரக்டர் கொடுத்தார்.
அதனை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் அட்டக்கத்தி படத்தில் தினேஷ் நண்பனாக படம் முழுக்க என் கேரக்டர் பேசும் படியாக அமைந்தது.

தற்போது பா.விஜய் நடிக்கும் “தகடு தகடு” படத்தில் படம் முழுக்க வர்ற மாதிரி ஒரு கேரக்டர். அந்த கேரக்டர் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான ஜீனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 1, சீசன் 2 மொத்தம் 40 எபிஷோட்கள் வெளியானது.

இதற்கு முழு ட்ரைனெப் நானும், என் திரைப்பட்டறை குழுக்களும். ஜீனியர், சீனியர் குழந்தைகள் ஷோவுக்கும் ட்ரைனிங் பண்ணினேன்.

இதுவரை இங்கே பயிற்சி எடுத்த 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் டிவி ஷோக்களில் தங்களின் திறமையை வெளிக்காட்டியிருக்கிறார்கள். இதுவே திரைப்பட்டரையின் தனித்த அடையாளம்.

தூரல் நின்னு போச்சு, அந்த ஏழு நாட்கள் படங்களை காமெடி வடிவில் சின்ன பசங்களை வைத்து கலாய்க்கும் ஷோவை பார்த்த பாக்யராஜ் சார் நேரில் கூப்பிட்டு பாராட்டினார்.

ஒரு நடிகனுக்கு உடம்பும், மனதும் ரொம்ப ரொம்ப முக்கியம் அதைவிட முக்கியம் பாவனைகள் அதை ஒழுங்கு பட செய்தாலே சினிமாவில் பெரிய உயரங்களை அடையாளம் என கூறுகிறார் திரைப்பட்டறை ராம்.

இங்கே பயிற்சி எடுக்கும் புதியவர்களுக்கு இவரே திரைப்படங்களில் நடிக்கவும் சொல்லி அனுப்புகிறார்.

Thiraipattarai Ram acting in movies also having Training class for acting

 

More Articles
Follows