வாழ்க்கையை பற்றிய நேர்மறை அணுகுமுறை, உத்வேகம் மற்றும் எமோஷனை பேசும் IGLOO

வாழ்க்கையை பற்றிய நேர்மறை அணுகுமுறை, உத்வேகம் மற்றும் எமோஷனை பேசும் IGLOO

New Projectசினிமா என்பது வெறுமனே கலை மற்றும் பொழுதுபோக்கின் வடிவங்களாக மட்டுமே கருதப்படுவதில்லை, இது வாழ்க்கையில் ஒரு தூண்டுதலாகவும் இருக்கும் அழகான கருத்துக்களையும் வழங்குகிறது. டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பரத் மோகன் இயக்கும் “IGLOO” அந்த வகையான ஒரு படம் தான், அதில் பார்வையாளர்களுக்கு நேர்மறையான விஷயம் ஒன்று உள்ளது.

அறிமுக இயக்குனர் பரத் மோகன் கூறும்போது, “வாழ்க்கை எப்போதும் இனிமையாகவே இருப்பது இல்லை. சில நேரங்களில், அது நம்மை ஆழமான மனச்சோர்வு நிலையில் வைக்கிறது, குறிப்பாக உயிருக்கு ஆபத்தான நோய்களால். அந்த நோய்களை எதிர்த்து சண்டை போட மருத்துவ முன்னேற்றங்கள் வந்து விட்டன. ஆனால் மிகப்பெரிய ஆயுதம் என்பது நம் “நேர்மறை” சிந்தனைகள் தான். எமோஷனல் காதல் கதையான இந்த படமும் அப்படி ஒரு செய்தியை வலியுறுத்துகிறது. ஒரு அழகான ஜோடியின் வாழ்க்கை அபாயகரமான ஒரு வியாதியால் பாதிக்கப்படுகிறது, அவர்கள் அதை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை காட்டும் படம். இதை கேட்டு விட்டு இது ஒரு சோகமான காதல் கதையா எனக் கேட்டால் அதை நீங்கள் திரையில் தான் காண வேண்டும். நல்ல ஒரு கருத்தை இந்த தருணங்கள் மூலம் வெளிப்படுத்த முயற்சித்துள்ளோம். இந்த காரணத்திற்காக ரசிகர்களிடம் படம் நல்ல வரவேற்பை பெறும் என ஒட்டுமொத்த குழுவும் நம்புகிறோம்” என்றார்.

மேலும், பரத் மோகன் கூறும்போது, “நாங்கள் இந்த படத்தை மிக யதார்த்தமாக காட்ட விரும்பினோம். சினிமா மிகைப்படுத்தல்களை தவிர்த்திருக்கிறோம். படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் நம் அன்றாட வாழ்க்கையில் நாம் காணும் சிலவற்றால் ஈர்க்கப்பட்டு உருவானவை தான். அனைத்து கலைஞர்களும் அவர்கள் கதாபாத்திரங்களின் ஆழத்தை புரிந்துகொண்டு திறம்பட நடித்ததால், இது ஒரு சிறப்பான அனுபவம். முன்னணி கதாப்பாத்திரங்களில் அம்ஜத் கான் மற்றும் அஞ்சு குரியன் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். மேத்யூ வர்கீஸ், லிஸ்ஸி மற்றும் பக்ஸ் ஆகியோரும் படத்துக்கு வலு சேர்த்திருக்கிறார்கள். இரட்டையர்கள் அனிகா மற்றும் அரோஹி ஆகியோர் படத்தின் ஆரம்ப 25 நிமிடங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று” என்றார்.

அரோல் கொரேலி தனது இனிமையான இசைப்பதிவுக்காக புகழ்பெற்றவர், இப்படத்தில் மூன்று பாடல்கள் உண்டு. அவரின் இசை இந்த படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குகன் எஸ். பழனி ஒளிப்பதிவை கையாண்டிருக்கிறார். சீனிவாசன் கலை இயக்குனராகவும், பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

யாருய்யா கிளப்பிவிட்டது..? பிக்பாஸ் 3 சீசனில் சாந்தினி இருக்காரா..?

யாருய்யா கிளப்பிவிட்டது..? பிக்பாஸ் 3 சீசனில் சாந்தினி இருக்காரா..?

Actress Chandini Tamilarasan is not a part of Bigg Boss Season 3கமல்ஹாசன் படங்களை விட அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தற்போது மவுசு அதிகம்.

விரைவில் அதாவது வருகிற ஜீன் 23 முதல் பிக்பாஸ் சீசன் 3 தொடங்கவுள்ளது. இதற்கான புரோமோ தற்போது அந்த டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

15 பிரபலங்கள் கலந்துக் கொள்ள உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், நடிகை சாந்தினி தமிழரசன் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. (நம் தளத்தில் அப்படியொரு செய்தி வெளியாகவில்லை) ஆனால் இதை சாந்தினி மறுத்துள்ளார்.

“பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில், போட்டியாளராக பங்கேற்க யாரும் என்னை அணுகவில்லை. அப்படியே அழைத்தாலும், அந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்கப்போவதும் இல்லை.

சிலர் தவறாக செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்” என சாடியுள்ளார் சாந்தினி.

Actress Chandini Tamilarasan is not a part of Bigg Boss Season 3

2 மணி நேரம்.. 100 கிலோ குப்பை..; சுத்த சவாலில் சாதித்த சௌந்தரராஜா

2 மணி நேரம்.. 100 கிலோ குப்பை..; சுத்த சவாலில் சாதித்த சௌந்தரராஜா

Thalapathy 63 actor Soundararaja cleaned Beachதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சவுந்தரராஜா. கதை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.

சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் படங்களில் கவனிக்க வைத்த சவுந்தரராஜா அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சவுந்தரராஜா ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல், சமூக சேவையிலும் அதிக ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார்.

மக்களுக்கான போராட்டமான ஜல்லிக்கட்டில் இவர் பெரிதும் பங்காற்றினார்.

தற்போது பீச்சை சுத்தம் செய்யும் சவாலை ஏற்று, நம்ம சென்னை டாக்டர் ராஜலட்சுமி குழுவினரும், நடிகர் சவுந்தரராஜாவின் மண்ணை நேசிப்போம், மக்களை நேசிப்போம் என்ற அறக்கட்டளை குழுவினரும் இணைந்து சென்னை பெசன்ட் நகர் பீச்சை சுத்தம் செய்திருக்கிறார்கள்.

2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சவாலில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், டாக்டர்கள், இன்ஜினியர்கள், சிறுவர்கள் என்று பலரும் கலந்துக் கொண்டனர்.

100 கிலோவிற்கு மேலான குப்பைகளை இவர்கள் அகற்றி மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனியாக பிரித்து சுத்தம் செய்திருக்கிறார்கள்.

நாம் இருக்கும் இடத்தை வேறொருவரை எதிர்பார்க்காமல், நாமாகவே சுத்தம் செய்தால் வீடும், நாடும் வளம் பெறும் என்று நடிகர் சவுந்தரராஜா இதன் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

Thalapathy 63 actor Soundararaja cleaned Beach

இளையராஜா பாடல்களை அவரது அனுமதியுடன் பாட கட்டணம் எவ்வளவு..?

இளையராஜா பாடல்களை அவரது அனுமதியுடன் பாட கட்டணம் எவ்வளவு..?

Ilayaraja has Exclusive Rights Over His Compositions Charge updatesஇளையராஜா பாடல்களை கேட்பதை விட அண்மை காலமாக அவரது பாடல் ராயல்ட்டி மற்றும் அவரது சர்ச்சை பேச்சுகளையே அதிகம் கேட்டு வருகிறோம்.

இதனிடையில் இளையராஜா அனுமதியின்றி, அவர் இசைத்த பாடல்களை வேறு யாரும் பயன்படுத்த கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் இளையராஜா பாடலுக்கு அனுமதி பெறவும், அதற்கான கட்டணங்களை அறியவும், தென்னிந்திய இசைக் கலைஞர்கள் சங்கத்தை அணுகலாம், என, அந்த சங்கத் தலைவர், தீனா கூறியிருந்தார்.

தன் பாடலுக்கான, ராயல்டி என்ற காப்புரிமை தொகையை, தென்னிந்திய திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்திற்கு, இளையராஜா வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் தீனா அளித்த பேட்டியில்…: எங்கள் சங்கத்தை அணுகினால், அனுமதி மற்றும் கட்டண நடைமுறைகளை பின்பற்ற வழிகாட்டுவோம்.

முதல் நிலையில் உள்ளவர்களுக்கு, இளையராஜா பாடலை பாட, உலக அளவில், ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய் கட்டணமாக இருந்தது. அது, மிகவும் அதிகம் என, பலரும் கூறியதால், கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சங்கத்தை அணுகினால், உரிய விளக்கம் தரப்படும்.” என தெரிவித்துள்ளார்.

Ilayaraja has Exclusive Rights Over His Compositions Charge updates

கொலைகாரனை மேடையில் ஆட வைத்து அழகு பார்த்த ஆஷிமா

கொலைகாரனை மேடையில் ஆட வைத்து அழகு பார்த்த ஆஷிமா

Vijay Antonys Kolaigaran telugu version Killer Press Meet updatesஆண்ட்ரூ லுயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜீன் நடித்துள்ள படம் கொலைகாரன்.

தியா பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நாயகியாக ஆஷிமா நர்வல் நடித்துள்ளார்.

இப்படத்தை வருகிற ஜீன் 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறார் பாப்டா நிறுவனர் தனஞ்ஜெயன்.

இந்நிலையில் ‪ கொலைகாரன் பட தெலுங்கு பதிப்பு கில்லர் என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

இதன் பத்திரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

அப்போது நாயகி ஆஷிமா நர்வல் மேடையேறி பேசும்போது நாயகன் விஜய் ஆண்டனியை மேடையேறி தன்னோடு நடனமாடுமாறு அழைத்தார்.

முதலில் தன்னுடைய கூச்ச சுபாவத்தால் மறுத்தாலும் பின்னர் மேடையேறி எல்லோரும் ரசிக்கும் வண்ணம் சிறப்பாக நடனமாடினார் விஜய் ஆண்டனி.

நாயகி ஆஷிமா சில நடன அசைவுகளை அவரிடம் செய்து காண்பித்த பின்னர் இருவரும் “ கொலைகாரன் “ படத்தில் இடம்பெறும் மெலடி பாடலுக்கு ஏற்றார் போல் நடனமாடினர்.

கில்லர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அஷிமாவுடன் நடிகர் விஜய் ஆண்டனி ஆடிய வீடியோ தெலுங்கு மீடியாவில் மிகவும் பிரபலமாகி ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‬

Vijay Antonys Kolaigaran telugu version Killer Press Meet updates

தளபதி 63 – நான்தான் பர்ஸ்ட்; விஜய் ரசிகர்களை மிஞ்சிய ஏஆர்.ரஹ்மான்

தளபதி 63 – நான்தான் பர்ஸ்ட்; விஜய் ரசிகர்களை மிஞ்சிய ஏஆர்.ரஹ்மான்

AR Rahman talks about Thalapathy 63 song editingஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் தளபதி 63 படத்தில் மீண்டும் விஜய், அட்லி, ரஹ்மான் கூட்டணி அமைந்துள்ளது.

இப்படத்திற்காக ரஹ்மான் சில பாடல்களை முன்பே பதிவு செய்து விட்டார்.

தற்போது இரண்டு பாடல்களுக்கான படப்பிடிப்பை முடித்து, எடிட் செய்து அதை ரஹ்மானிடம் காட்டியிருக்கிறாராம் இயக்குனர் அட்லீ.

அவற்றைப் பார்த்த ரஹ்மான்..

அதில், “இங்க யார் இருக்கிறார் பாருங்கள், எடிட் ஆன இரண்டு பாடல்களை நான்தான் முதலில் பார்த்தேன்” என போட்டுள்ளார்.

அந்த பதிவில் தளபதி 63 முதல் பாடல் எடிட் என இருக்கிறது.

விஜய்யின் ரசிகர்கள் தான் ஆர்வமுடன் இது போல் பகிர்வார்கள். தற்போது ரஹ்மானே நான் தான் பர்ஸ்ட் என பகிர்ந்துள்ளது தளபதி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

AR Rahman talks about Thalapathy 63 song editing

More Articles
Follows