தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் ஆர்யாவுக்கு சினிமாவுலகில் ஜிம்பாய் மற்றும் ப்ளேபாய் என்ற செல்லப் பெயர்கள் உண்டு.
ஆனால் இவர் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் பேச்சுலராக வாழ்ந்து வருகிறார்.
அண்மையில் ஒரு வீடியோவில் லவ் எதுவும் செட் ஆகல. நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன். என தன் நண்பருடன் ஜிம்மில் பேசியிருந்தார்.
அந்த வீடியோ லீக்காகி இணையத்தில் வைரலானது.
தற்போது அதற்கு விளக்கம் அளித்து மற்றொரு வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியிருப்பதாவது…
ஜிம்மில் பேசிய அந்த வீடியோ லீக்கானது. ஆனாலும் அதில் நான் பேசியது அனைத்தும் உண்மைதான்.
என் திருமணத்திற்கு பெண் தேடுகிறேன். எந்த நிபந்தனையும் இல்லை. விருப்பம் உள்ளவர்கள் 73301-73301 என்ற எண்ணுக்கு போன் செய்யலாம் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
நாங்க போன் பண்ணி பார்த்தவரை கிடைத்த தகவல் இதோ கீழே…
அந்த நம்பருக்கு போன் செய்தபோது ஆர்யாவின் குரல் கேட்டது. ஆனால் அவர் பேசல. அவரின் ரெக்கார்டு வாய்ஸ் அது.
என்னை தொடர்பு கொண்டதற்கு நன்றி. உங்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். வந்திருக்கும்.
அதில் உள்ள இணைப்பை க்ளிக் செய்து உங்களின் விபரங்களை பூர்த்தி செய்து அனுப்புங்கள். நாம் விரைவில் மீட் செய்வோம் என்று ஆர்யாவின் குரல் ஒலித்தது.
எஸ்.எம்.எஸ்.ஸில் வந்த லிங்கை க்ளிக் செய்தால் அதில் நம் பெயர், வயது, முகவரி, பாஸ்போர்ட் எண், பாஸ்போர்ட் முடியும் தேதி, தாய் மொழி உள்ளிட்ட தகவல்களை கேட்கிறார்கள்.
இவையில்லாமல் உங்களை பற்றிய அறிய 1 நிமிட வீடியோவையும் அப்லோடு செய்ய கேட்கிறார்கள்.
எவ்வளவோ பண்ணிட்டோம். ஆர்யாவுக்காக இதை செய்ய மாட்டோமா? என்கிறீர்களா? அப்போ போன போடுங்க. என்ஜாய்.
If you wish to marry Actor Arya then call this number