டெட் பாடியாக நடிக்க டவுட் கேட்ட நடிகை..; பெரிய ‘இடியட்’ டைரக்டர்தான்.. – சிவா

டெட் பாடியாக நடிக்க டவுட் கேட்ட நடிகை..; பெரிய ‘இடியட்’ டைரக்டர்தான்.. – சிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Screen Scene Media Entertainment PVT. LTD தயாரிப்பில், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள, ஹாரர் காமெடி திரைப்படம் “இடியட்”. ‘தில்லுக்கு துட்டு’ இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, ஹாரர் காமெடி பாணியில், மீண்டும் கலக்கல் கமர்ஷியல் மசாலா திரைப்படமாக, இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ராம்பாலா.

விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு, படம் குறித்தான அனுபவங்களை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்துகொண்டனர்.

நடிகர் ரவி மரியா பேசியதாவது…

ஒரு படத்தை பற்றி வழக்கமாக இந்தப்படம் சூப்பராக வந்திருக்கிறது, நடிக்கும்போதே ஹிட்டாகும் என்று தெரியும் என எப்போதும் சொல்வோம். ஆனால் இப்படத்தை பற்றி உண்மையிலேயே அப்படி சொல்லலாம்.

நான் வில்லன் சேரில் உட்கார்ந்து காமெடி செய்பவன், என்னை கூப்பிட்டு நீங்கள் காமெடி சேரில் அமர்ந்தே, காமெடி பண்ணுங்கள் என்று சொன்னார். ராம்பாலா எனக்கு பிடித்த படங்கள் செய்பவர். அவர் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். படப்பிடிப்பில் காட்சிக்கு காட்சி கடுமையான உழைப்பை தருபவர் ராம்பாலா.

ஷீட்டிங்கில் எல்லாவற்றையும் இறுதி நொடி வரை மாற்றிக்கொண்டே இருப்பார் படம் நன்றாக வரவேண்டும் என்கிற அக்கறை தான் அதற்கு காரணம். நடிகர் மிர்ச்சி சிவாவை இயக்க அவரிடம் கதை சொல்லியிருக்கிறேன். ஆனால் அது நடக்காமல் போனதே நன்று. ஏனெனில் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருப்பேன். மிக இயல்பாக இருக்கும் நல்ல மனிதர்.

நிக்கி கல்ராணி ஷீட்டிங்கில் என்னை பார்த்து தான் திட்டி பயிற்சி எடுப்பார். நல்ல நடிகை. மயில்சாமி நல்ல கதாப்பாத்திரம் செய்திருக்கிறார். ஒரு சின்ன அறைக்குள் அட்டகாசமாக லைட்டிங் செய்து அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜீ, ராம்பாலா சாருக்கு இந்தப்படம் கண்டிப்பாக ஹாட்ரிக் வெற்றியை தரும்.

இப்படம் ஒரே ப்ரிவியூ ஷோவில் அனைத்து ஏரியாவும் விற்றுவிட்டது. சமீபத்தில் இது போல் சாதனை செய்த படம் இது மட்டுமே. இப்படம் அனைவரையும் கவரும் நன்றி.

நடிகர் மயில்சாமி பேசியதாவது…

இந்தப்படத்தை வாழ்த்தும் அனைவருக்கும் என் நன்றி. முன்பெல்லாம் படம் 50 நாள், 100 நாள் விழா வைப்பார்கள். ஆனால் அது இப்போது நடப்பதில்லை ஆனால் சினிமா எந்த காலத்திலும் அழியாது. எல்லாவற்றையும் கடந்து நிற்கும். இந்தப்படத்தில் நடித்திருந்தாலும் எனக்கு கதை தெரியாது.

ராம்பாலா என்னை அழைத்து, ஒரு காட்சியை சொல்லி நடிக்க சொன்னார். நடித்து முடித்தவுடன் நடிகன்யா நீ என என்னை பாராட்டினார்.

ஒரு காலத்தில் சினிமாவை விட்டே போக நினைத்தேன், ஆனால சிவக்குமார் இரு, உனக்கென்று ஒரு கதாப்பாத்திரம் கிடைக்கும் என்றார். அப்படி கிடைத்தது தான் குடிகாரன் கதாப்பாத்திரம். இப்போது எல்லா படங்களிலும் குடிகாரன் அல்லது சாமியார் கதாப்பாத்திரம் தான் வருகிறது. அது தான் என்னை வாழவைக்கிறது.

ராம்பாலா லொள்ளு சபாவில் நிமிடத்திற்கு 10 பஞ்ச் அடித்து கலக்குபவர். லேட்டாக திரைக்கு வந்திருக்கிறார். ஆனால் கண்டிப்பாக தொடர்ந்து ஜெயிப்பார். இந்தப்படம் எல்லோருக்கும் பெயர் வாங்கி தரும் எனக்கும் பெயர் வாங்கி தரும்.

நடிகர் ஆனந்த்ராஜ் பேசியதாவது…

ராம்பாலா மிக நல்ல மனிதர். அவர் ஒரு காமெடி கடல். அவரின் திறமையை யாராலும் திருட முடியாது. அவருடன் தில்லுக்கு துட்டு படத்தில் இணைந்து பணியாற்றினேன். இரண்டில் நடிக்க முடியவில்லை. இப்போது இந்தப்படம் மிக நன்றாக வந்திருக்கிறது.

தயாரிப்பாளர்களுக்கு முதலில் நன்றி சொல்லிக்க்கொள்கிறேன். ஓடிடி யில் படத்தை கொடுத்துவிடும் இக்காலத்தில் தியேட்டரில் இப்படத்தை வெளியிட வேண்டும் என உறுதியாக இருந்ததற்கு நன்றி. தியேட்டர் அனுபவம் என்பது மிகச்சிறப்பான ஒன்று அது ஆலயம் போன்றது. இந்தப்படம் அடுத்தவாரம் திரைக்கு வருகிறது.

திரையரங்கில் அனைவரும் கொண்டாடுவார்கள். மிர்ச்சி சிவா உடன் முதல்முறையாக நடித்திருக்கிறேன். அவர் படிப்படியாக வளர்ந்து முழு சந்திரமுகியாக மாறியிருக்கிறார். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். நிக்கி கல்ராணி என் தோழி அவரும் நானும் இணைந்து நடித்த அனைத்து படங்களுமே ஹிட். இந்தப்படமும் ஜெயிக்கும்.

இப்படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப குழுவினர், நடிகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். இந்த மேடையில் தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். சிறு படங்களின் தேவைகளை நிவர்த்தி செய்து அவற்றை வாழ வைக்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன்.

நாயகி நிக்கிகல்ராணி பேசியதாவது..

இத்தனை மாதம் கடந்து அனைவரையும் சந்தித்ததில் சந்தோஷம். கொரோனா காலத்தில் ராம்பாலா சார் அழைத்து இந்த வாய்ப்பை பற்றி சொன்னார்.

இந்தப்படத்தின் அனுபவமே சிறப்பாக இருந்தது. போன வருடம் கொரோனா காலத்தில் உலகமே மன அழுத்தத்தில் இருந்தபோது நான் இந்தபடக்குழுவினருடன் மகிழ்ச்சியாக இருந்தேன்.

மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோகர், மிர்ச்சி சிவா அனைவருடனும் நடித்தது, சந்தோஷம். இப்படத்திற்கு ராஜா அட்டகாசமாக ஒளிப்பதிவு செய்துள்ளார். ஓடிடியில் மிக எளிமையாக விற்றுவிடும் வாய்ப்பு இருந்தும், தியேட்டரில் ரசிகர்கள் ரசிக்க வேண்டுமென, இப்போது தியேட்டரில் வெளியிடும் தயாரிப்பாளருக்கு நன்றி. ஏற்கனவே டார்லிங், மரகத நாணயம் படங்களில் பேய் கேரக்டர் செய்துள்ளேன். அந்தப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே போல் “இடியட்” படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். இந்தப்படம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும்.

இயக்குநர் ராம் பாலா பேசியதாவது…

“இடியட்” படத்திலேயே நிறைய கலகலப்பான சம்பவங்கள் நடந்தது. யார் யாரை இடியட் ஆக்கியுள்ளார்கள் என்பதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

ஒளிப்பதிவாளர் ராஜா, எடிட்டிங் முடித்து அவரது ஒளிப்பதைவை பார்த்து விட்டேன் நன்றாக செய்துள்ளார். மிர்ச்சி சிவா மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். நிக்கி கல்ராணி நிறைய கேள்வி கேட்பார், எல்லா லாஜிக்க்கும் அவருக்கு சொல்ல வேண்டும் மிகச்சிறப்பான நடிகை.

நடிகர் ரவி மரியாவை முன்பிருந்தே தெரியும் அவரை வில்லனாகத்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு படத்தில் காமெடியில் கலக்கியிருந்தார். அவரது பாடி லாங்குவேஜ் அட்டகாசமாக இருக்கும்.

ஆனந்தராஜ் எனக்கு சீனியர் முரட்டுத்தனமான ஒரு ஆள் முட்டாள்தனமாக இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்தபோது அதற்கு பொருத்தமாக ஆனந்தராஜ் இருந்தார்.

ஊர்வசி மேடத்துடன் மூன்று படங்கள் செய்திருக்கிறேன் இன்னும் பல படங்கள் செய்வேன். மயில்சாமி மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். அடுத்த படத்தில் அவருக்கு ஃபாரின் மாப்பிள்ளை வேடம் தான். எனது உதவியாளர்கள் தான் இந்தப்படம் சரியாக உருவாக துணையாக இருந்தார்கள்.

சிவா காலையில் ஷூட்டிங்கிற்கு வரும்போதே, சிரித்து கொண்டே வருவார், முடிந்து செல்லும்போதும் அந்தப்புன்னகை அப்படியே இருக்கும். ஜனங்களை குஷிப்படுத்தும் படமாக சிரிக்க வைக்கும் படமாக இப்படம் இருக்கும்.

நடிகர் மிர்ச்சி சிவா பேசியதாவது…

இரண்டு வருடங்கள் கடந்து எல்லோரையும் பார்ப்பதில் மகிழ்ச்சி. இந்த கொரோனா நிறைய கற்றுக்கொடுத்துவிட்டது. கொரோனா உச்சகட்டத்தில் இருந்த நேரத்தில் ராம்பாலா சார் இந்தப்படத்தை பற்றி சொன்னார், ஆனால் அப்படிப்பட்ட நேரத்திலும் அனைவரையும் ஒன்று சேர்த்து படத்தை துவக்கி விட்டார் தயாரிப்பாளர் சுந்தர்.

அவரது வாழ்வை கேட்டால் பிரமிப்பாக இருக்கும். ஒளிப்பதிவாளர் ராஜா எப்போதுமே சிரித்த முகமாக இருப்பார். நிக்கி கல்ராணி போல அர்ப்பணிப்பு கொண்ட நடிகையை, பார்க்க முடியாது ஒரு காட்சியில் அவர் டெட்பாடியாக இருக்க வேண்டும் ஆனால் அதற்கே நிறைய டவுட் கேட்டார். அந்தளவு சீரியஸான நடிகை.

நடிகர் ஆனந்த்ராஜ் உலகத்தில் எதை பற்றி வேண்டுமானாலும் அவரிடம் பேசலாம் ஆனால் நடிப்பில் அசத்திவிடுவார்.

மயில்சாமி பிரமிப்பு தரும் மனிதர் தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களுக்கு, அவர் செய்யும் கொடைகள் பெரிது. அவரிடம் பெரிய மரியாதை உள்ளது. டீம் கேப்டன் நன்றாக இருந்தால் தான் எல்லோரும் நன்றாக இருக்க முடியும் எங்கள் டீமிலேயே பெரிய ‘இடியட்’ ராம்பாலா சார் தான்.

உண்மையிலேயே அவரின் உழைப்பு அவர் அமைக்கும் காட்சிகள் எல்லாமே அட்டகாசமாக இருக்கும். இன்னும் நிறைய படங்கள் அவர் செய்ய வேண்டும். தியேட்டரில் தான் இந்தப்படத்தை வெளியிட வேண்டும் என்றார் தயாரிப்பாளர், அவரின் நம்பிக்கைக்கு நன்றி.

ஒரு பேய் எப்போதும் இருட்டில், மியூசிக்கில் பயமுறுத்தும் ஆனால் அது இந்தப்படத்தில் இருக்காது. அதனால் தான் இந்தப்படத்தை ஒப்புக்கொண்டேன். படத்தின் ரகசியத்தை சொல்லிவிட்டேன் ஆனாலும், இந்தப்படம் உங்கள் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் நன்றி.

Idiot directed by Rambhala and starring Siva and Nikki Galrani

விஜய் என்றாலே வெற்றி..; விஜய்யின் ஜாதியை கேட்டால் போராட்டம் தான் – எஸ்.ஏ.சி ஆவேசம்

விஜய் என்றாலே வெற்றி..; விஜய்யின் ஜாதியை கேட்டால் போராட்டம் தான் – எஸ்.ஏ.சி ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ்’ தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. விஜய் விஷ்வா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் சைனி கதாநாயகியாக நடித்துள்ளார். பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் மற்றும் பலர் நடித்துள்ளனர். சலீம் மற்றும் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு நாக உதயன் இசையமைத்துள்ளார். முத்து முனுசாமி படத்தொகுப்பை கவனித்துள்ளார். யுகபாரதி, விவேகா, அந்தோனிதாசன், பொன் சீமான் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்

படிக்கும் மாணவர்கள் மீது சாதி சாயம் பூசுவதால் அவன் வாழ்க்கையே எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், சாய்ரமணி, ஜாக்குவார் தங்கம், நடிகர் போஸ் வெங்கட், பி ஆர் ஓ யூனியன் தலைவர் டைமண்ட் பாபு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி..எஸ்.ஆர் சுபாஷ், நடிகைகள் கீர்த்தனா, கோமல் சர்மா, ஷாஸ்வி பாலா, பாடலாசிரியர்கள் கம்பம் குணாஜி, சொற்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

இயக்குனர் எஸ்/ஏ.சந்திர சேகர் பேசும்போது, “மாணவர்களிடம் சாதி சாயம் பூசக்கூடது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சமூகத்திற்கு பயன்தரும் விதமான படங்களை எடுப்பவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நமது வாழ்க்கையில் பிராக்டிகலாக என்ன செய்திருக்கிறோம்..? என் மகன் விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்பத்தில் மதம், சாதி என்கிற இடத்தில் தமிழன் என்று குறிப்பிட்டேன்.. முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்..

பள்ளியையே மூடும் அளவுக்கு போராட்டம் நடத்துவேன் என கூறியதும், பின் அமைதியாக ஒப்புக்கொண்டனர். அப்போதிருந்து விஜய்யின் சான்றிதழில் சாதி என்கிற இடத்தில் தமிழன் என்றுதான் தொடர்ந்து வருகிறது..

சாதிக்கு நாம் தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.. நாம் நினைத்தால், இதுபோல பள்ளியில் சேர்க்கும்போதே சாதியை குறிப்பிடாமல் தவிர்த்தால் இன்னும் இருபது வருடங்களில் சாதி என்கிற ஒன்றே இல்லாமல் போய்விடும்.

எனது படத்தில் நடித்த அபிசரவணன் தற்போது விஜய் விஷ்வா என பெயரை மாற்றிக்கொண்டுள்ளார்..

விஜய் என்று சொன்னாலே ஒரு அதிர்வு ஏற்படும்.. பாலிவுட் கதாசிரியர் தான் சலீம் ஜாவேத் தனது கதையின் ஹீரோக்களுக்கு குறிப்பாக அமிதாப்பின் படங்களில் எப்போதுமே விஜய் என்றுதான் ஹீரோவுக்கு பெயர் வைப்பார்.. அதேபோல நானும் எனது படங்களின் நாயகர்களுக்கு விஜய் என்றுதான் பெயர் வைப்பேன். அதனால் தான் எனது மகனுக்கும் விஜய் என பெயர் வைத்தேன்.

விஜய் என்றாலே வெற்றி என்றுதான் அர்த்தம் அந்த வெற்றி இவரோடு ஒட்டிக்கொள்ள வேண்டும்.. என பேசினார்.

நாயகன் விஜய் விஷ்வா பேசும்போது, “அட்டகத்தி, குட்டிப்புலி படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த பின்னர் மீண்டும் அவர்களை தேடி வாய்ப்பு கேட்க போனபோது அங்கே சாதி பார்க்கப்படுவது போல உணர்ந்தேன்.. அதனால் சாதி பார்க்காத ஆட்களுடன் சேர்ந்து பணிபுரியவேண்டும் என முடிவெடுத்தேன்.

இன்று இந்த விழாவுக்கு நிறைய சிறப்பு விருந்தினர்களை அழைத்திருந்தோம்.. ஆனால் இன்று ஒரு குறிப்பிட்ட சாதி தலைவரின் பிறந்தநாள் என்பதால் அதை வைத்து தாங்களாகவே தொடர்புபடுத்திக்கொண்டு இந்தவிழாவுக்கு வர மறுத்துவிட்டார்கள்.. நிறைய படங்கள் சாதியை பற்றி வருகிறது.. ஆனால் இந்தப்படத்தில். சாதியை பற்றியே பேசவேண்டாம் என்றுதான் சொல்லியிருக்கிறோம்.

இயக்குனர் ஆர்வி உதயகுமார் பேசும்போது, “சாதி வேண்டாம் என்றுதான் நானும் பல நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறேன். பள்ளி விண்ணப்பங்களில் சாதி பற்றியே கேட்க கூடது என ஒரு மசோதாவை தாக்கல் செய்துவிட்டால் போதுமே.. ஆனால் அதை செய்ய முடியாமல் சிலர் தடுக்கிறார்கள். நானும் சின்னக்கவுண்டர் போல சாதி பெயரில் படம் எடுத்தவன் தான்.. ஆனால் எந்த சாதியையும் தூக்கி பிடிக்கவில்லை.. யாரையும் தாழ்த்தியும் பேசவில்லை..

இதுபோன்ற சமூக நோக்கில் எடுக்கப்படும் சிறு படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை. இங்கே பேசிய இயக்குனர் சாய்ரமணி சொன்னதுபோல, கடந்த ஆட்சியில் அம்மா திரையரங்கம் என ஒரு திட்டம் பேசப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்த ஆட்சியில் அதை கலைஞர் திரையரங்கம் என்கிற பெயரிலாவது செயல்படுத்தி ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சிக்கு சிறிய அளவிலான தியேட்டர்களை கட்டித்தர வேண்டும், சிறு பட தயாரிப்பாளர்களை காப்பாற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்” என்று பேசினார்.

இயக்குனர் அந்தோணிசாமி பேசும்போது,

“எஸ்.ஏ.சி சார் சொன்னதுபோல சினிமாவில் தான் ஜாதி பார்ப்பது இல்லை என்கிற நிலை முன்பு இருந்தது.. ஆனால் இப்போது சினிமாவில் சாதி பற்று கொஞ்சமா கொஞ்சமாக ஊடுருவ தொடங்கியுள்ளது.. திரௌபதி படத்தின் இயக்குனரே படத்தின் போஸ்டரில் தன் சாதிக்கொடியை பயன்படுத்தியுள்ளதாக சுட்டி காட்டி விழாவிற்கு வர மறுத்து விட்டார்.

இப்போது என்னால் நிறைய பேச முடியவில்லை.. அடுத்தடுத்த மேடைகளில் நிறைய விஷயங்களை சொல்லப்போகிறேன்” என்று கூறினார்.

Director SAC speech at Saayam audio launch

குரங்கிலிருந்து வந்த மனிதனை அலசும் வாஸ்கோடகாமா..; நகுலுக்கு ஆதரவளித்த 100 விஐபிகள்

குரங்கிலிருந்து வந்த மனிதனை அலசும் வாஸ்கோடகாமா..; நகுலுக்கு ஆதரவளித்த 100 விஐபிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்த்திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத பெருரை நிகழ்வாக 100 விஐபிகள் ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். அந்தப் படம் ‘வாஸ்கோடகாமா’ ‘

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை விநாயகர் சதுர்த்தியான நேற்று 100 பேர் வெளியிட்டிருக்கிறார்கள்.

நடிகர்கள் சிவகார்த்திகேயன், பார்த்திபன்,,ஆரியா, வெங்கட்பிரபு,பிக்பாஸ் வின்னர் ஆரி, கணேஷ் வெங்கட்ராமன் , நடிகைகள் அதுல்யா ரவி, பிரியா பிரகாஷ் வாரியர், இயக்குநர்கள் கே. எஸ். ரவிக்குமார், இசையமைப்பாளர் டி இமான், தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன், ஊடகப் பிரபலம் ரங்கராஜ் பாண்டே, நடிகர், நடிகைகள் அரசியல் பிரபலங்கள் போன்ற நூறு பேர் இன்று 10 ஆம் தேதி காலை 10 மணி 10 நிமிடத்திற்கு வெளியிட்டுள்ளார்கள்.

இது இதுவரை திரையுலகம் காணாத புதுமையான நிகழ்வாகும்.

5656 புரொடக்ஷன் சார்பில் உருவாகும் ‘வாஸ்கோடகாமா’ படத்தை மலேசியாவில் பல பெரிய நிறுவனங்கள் நடத்தும் டத்தோ பி .சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

கதை திரைக்கதை எழுதி இந்தப் படத்தை ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்குகிறார்.

இந்தத் தயாரிப்பாளர் இயக்குநர் கூட்டணியில் ஏற்கெனவே ‘தேவதாஸ் பார்வதி ‘ படத்தின் பாடலை திரை உலகமே பாராட்டியது.

எஸ். பி. பாலசுப்பிரமணியம் கடைசியாகப் பாடிய பாடல் ‘என்னோட பாஷா’ பாடல் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றது

படத்தைப் பற்றி இயக்குநர் ஆர்.ஜி.கிருஷ்ணன் பேசும்போது,

“படத்தின் கதாநாயகனின் பாத்திரப் பொருத்தம் கருதியே படத்துக்கு ‘வாஸ்கோடகாமா’ என்கிற இந்தப் பெயர் வைக்கப்பட்டது.

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பதுதான் சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை.

குரங்கிலிருந்து வந்த மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்தான். இன்னும் எதிர்காலத்தில் என்னவாக ஆவான்? அவனது மனநிலையும் குணாம்சமும் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குப்பின் எப்படி மாறும் என்பதைக் கற்பனையாக ஜாலியான காட்சிகளோடு சொல்லும் படம்தான் ‘வாஸ்கோடகாமா’.

இப்படத்தின் கதாநாயகனாக நகுல் நடிக்கிறார். கதை பிடித்துப்போய் விட்டது. உடனே சம்மதம் கூறி அடுத்த நாளே ஒப்பந்தம் செய்யும் அளவிற்கு இந்தக் கதை அவரைக் கவர்ந்து விட்டது.

இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் முனிஸ்காந்த் போன்ற பரிச்சயமான நட்சத்திரங்களும் படத்தில் உள்ளனர். படத்தின் கதாநாயகி ,வில்லன் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்.

இது வணிக ரீதியிலான அனைத்து அம்சங்களையும் கொண்ட சுவாரஸ்யமான படமாக உருவாக இருக்கிறது” என்கிறார் இயக்குநர்.

படத்திற்கு ஒளிப்பதிவு வாஞ்சிநாதன், இவர் ‘நான் சிரித்தால் ‘போன்று சில படங்களில் ஒளிப்பதிவு செய்துள்ளவர்.

இசை என்.வி. அருண். இவர் எஸ்பிபி கடைசியில் பாடிய பாடலான பாடல் இடம்பெற்ற ‘என்னோட பாட்ஷா’ என்கிற ஆல்பத்திற்கு இசையமைத்திருக்கிறார் .

மேலும் பல சுதந்திரமான இசை ஆல்பங்களை உருவாக்கியவர்.

சண்டைக்காட்சிகள்- விக்கி .இவர் ‘உறியடி’ , ‘சூரரைப்போற்று’ படங்களுக்கு சண்டைக்காட்சிகள் அமைத்தவர்.கலை இயக்கம்- ஏழுமலை. இவர் ‘உறியடி 1’, ‘உறியடி2 ‘படங்களில் பணியாற்றியவர். எடிட்டிங் தமிழ்க்குமரன் .

இவர் ஏராளமான குறும்படங்களுக்குப் படத்தொகுப்பு செய்தவர்.

படத்தில் 4 பாடல்கள் உள்ளன. நடனக்காட்சிகளை பிக்பாஸ் புகழ் நடன இயக்குநர் சாண்டி அமைக்கிறார்.

படப்பிடிப்பு சென்னையிலும் சென்னையின் சுற்றுப் பகுதிகளிலும் நடைபெற உள்ளது.

100 celebrities unveil the first look of ACTOR NAKUL’S VASCODAGAMA

மக்களுக்கு வி(ம)ருந்தளிக்க அக்டோபரில் வருகிறார் ‘டாக்டர்’ சிவகார்த்திகேயன்

மக்களுக்கு வி(ம)ருந்தளிக்க அக்டோபரில் வருகிறார் ‘டாக்டர்’ சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடித்த “டாக்டர்” திரைப்படம், ரசிகர்களிடையேயும் வர்த்தக வட்டாரங்களிடையேயும் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்.

இப்படத்தின் வெளியீடு குறித்து பல தகவல்கள் பரவிய நிலையில், KJR Studios மற்றும் SK Productions ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில், படம் வெளியீடு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

“டாக்டர்” படம் வரும் அக்டோபர் 2021 இல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

KJR Studios சார்பில் கோட்டபாடி J ராஜேஷ் கூறியதாவது…

“டாக்டர்” படம் உருவாக ஆரம்பித்த முதல் நாள் முதலே, இந்த திரைப்படம் திரையரங்கில் தான் வெளியாக வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கோவிட் 19 எங்கள் வெளியீட்டு திட்டமிடல்களை மாற்றியது.

“டாக்டர்” திரைப்படம் முழுமையாக முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்ததால், அந்த காலகட்டத்தில் பல்வேறு OTT தளங்கள் எங்களிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தியது.

அப்போதும் “டாக்டர்” திரைப்படத்தை பெரிய திரைக்கு கொண்டு வருவதே எனது முதல் தேர்வாக இருந்தது.

எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் ரசிகர்கள் மற்றும் தொழில் துறையினரின் அழுத்தங்களுக்கு மத்தியில் வெளியீட்டுக்காக காத்திருப்பது கடினமான முடிவாக இருந்தது.

இப்போது மீண்டும் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் உங்கள் ஆவலை நிறைவேற்றும் வகையில் ‘டாக்டர்’ திரைப்படத்தை தியேட்டர்களில் கொண்டு வருகிறோம்.

தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் அனைத்து முக்கிய பங்குதாரர்களும் தங்கள் வியாபாரத்தை புதுப்பித்து, மறுமலர்ச்சி தரவும் “டாக்டர்” திரைப்படம் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

SK Productions இணை தயாரிப்பாளர் கலை அரசு கூறியதாவது…

எங்களின் “டாக்டர்” படம் தியேட்டரில் வெளியாவது, குழுவில் உள்ள அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியை தந்துள்ளது. KJR Studios தயாரிப்பில் கோட்டபாடி J ராஜேஷின் துல்லியமான திட்டமிடல் மற்றும் தியேட்டர் வெளியீட்டில் உறுதியாக அவர் இருந்ததற்கு நன்றி.

சிவகார்த்திகேயன்- நெல்சன் திலீப்குமார்-அனிருத் ஆகிய மூவரின் கூட்டணி ரசிகர்களுக்கு 100% சிறப்பான பொழுதுபோக்கு சினிமா அனுபவத்தை தந்து, அரங்குகளை கவர்ந்திழுக்கும் என்பது உறுதி. SK Productions “டாக்டர்” வெளியீட்டின் நன்நாளுக்காக காத்திருக்கிறது.

தியேட்டர்களில் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் ‘டாக்டர்’ பார்க்கும் மகிழ்ச்சியான அனுபவத்தை அனுபவிக்க, நாங்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றார்.

நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கியுள்ள “டாக்டர்” திரைப்படத்தை , சிவகார்த்திகேயனின் Sivakarthikeyan Productions உடன் இணைந்து, KJR Studios சார்பில் கோட்டபாடி J ராஜேஷ் தயாரிக்கிறார்.

சிவகார்த்திகேயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடிக்கின்றனர்.

அனிருத் ரவிச்சந்தரின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் மத்தியில் பம்பர் ஹிட்டாகியுள்ளது.

ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் செய்துள்ளார். R. நிர்மல் எடிட்டிங் செய்துள்ளார்.

Sivakarthikeyan’s doctor will release in october

விஜயகாந்த் வழியில் பயணிக்கும் விஜய் ஆண்டனி..; கோடியில் ஒருவனுக்கு பிரபலங்கள் வாழ்த்து

விஜயகாந்த் வழியில் பயணிக்கும் விஜய் ஆண்டனி..; கோடியில் ஒருவனுக்கு பிரபலங்கள் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி , ஆத்மிகா நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பட குழுவினர்களும் ,சிறப்பு அழைப்பாளர்களாக தயாரிப்பாளர் T சிவா ,விஜய் மில்டன் மற்றும் பலர் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.

இந்த விழாவில் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் பேசியவை,…

இந்த திரைப்படத்தின் கதையை பற்றி நான் ராஜா சார் அவர்களிடம் விளக்கினேன் .அதற்காக சில கோரிக்கைகளை முன்வைத்தேன் .இப்படத்திற்காக மிகப்பெரிய மக்கள் கூட்டமும் , கண்ணகி நகரில் பல லைவ் லொகேஷன்களில் படத்தை எடுக்கப் போவதாகவும் தெரிவித்தேன்.

எனக்கு விஜய் ஆண்டனி சாரின் கடின உழைப்பு ,தயாரிப்பு நிறுவனத்தின் ஒத்துழைப்பும் இத்திரைப்படத்தை விரைவில் உருவாக்க ,சிறப்பாக உருவாக காரணமாக இருந்தது. விதவிதமான வகைகளில் பாடல்களை மிகவும் அழகாக கொடுத்துள்ளார் நிவாஸ் கே பிரசன்னா.

விஜய் ஆண்டனி கூறியவை…

நீண்ட நாட்களுக்கு பிறகு பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்தப் இந்த படத்திற்கு பத்திரிகையாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் .இந்த படத்தின் பைனல் வெர்சனை பார்த்தேன். கண்டிப்பாக இந்த படம் மக்களுக்கு பிடிக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்

.நான் இளையராஜா சாரை என்னுடைய முன்னோடியாக கொண்டு இசையமைக்க துவங்கினேன் .இந்த படத்திற்கு சிறந்த பாடல்களை கொடுத்த நிவாஸ் கே பிரசன்னா அவர்களை நான் பாராட்டுகிறேன் .அவர் இன்னும் பல உயரங்களை அடைவார்.

இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இன்னும் சில காலத்தில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக வலம் வருவார். ஆத்மிகா எனக்கு மிகவும் பிடித்த நடிகை . அவர் இந்த படத்தில் சிறந்த நடிப்பையும் , திறமையையும் காட்டியுள்ளார் .

இயக்குனர் & ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் கூறியவை,

பல தடைகளை கடந்தது இந்த கொரோன காலத்தில் திரைப்படங்கள் திரைக்கு வருகிறது. ஊடக நண்பர்கள் இப்படத்திற்கு கண்டிப்பாக உறுதுணையாக இருக்க வேண்டும். நிவாஸ் கே பிரசன்னாவின் பாடல்களை திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன். விஜயகாந்த் சாரின் பிரதி தான் விஜய் ஆண்டனி . படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் .

தயாரிப்பாளர் T சிவா கூறியவை,..

ராஜா ,தனஞ்ஜெயன் ஆகியோர் எப்பொழுதுமே தனித்துவம் வாய்ந்தவர்களாகவும் திரைப்பட தொழில்நுட்ப குழுவிற்கு நம்பிக்கையானவர்களாகவும் இருக்கிறார்கள். விஜய் ஆண்டனி தொடர்ந்து திரைப்பட குழுவிற்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்து வருகிறார் .

குறிப்பாக இயக்குனருக்கு அளித்து வருகிறார். நிவாஸ் கே பிரசன்னா மெலோடி பாடல்களில் கில்லாடி .சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளார். நடிகை சமந்தா போல ஆத்மிகாவும் தமிழ் சினிமாவில் வலம் வருவார். விஜய் ஆண்டனி ஒரு மனிதநேயமிக்க மனிதர் .குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் விஜயகாந்தை போல விஜய் ஆண்டனி. விஜயகாந்த் 52 புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்தினார் .

அதே வழியில்தான் விஜய் ஆண்டனியும் புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.

தயாரிப்பாளர் TD ராஜா கூறியவை,

அனந்த கிருஷ்ணன் என்னிடம் ஸ்கிரிப்டை சொன்னபோது அதில் ஏதோ ஒரு தனித்துவம் இருப்பதாக உணர்ந்தேன். இந்த மாதிரியான கதை கிட்டத்தட்ட 100லிருந்து 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்த தேவைப்படும். ஆனால் இயக்குனர் 75 நாட்களில் படப்பிடிப்பு முடித்து என்னை ஆச்சரியத்தில் தள்ளினார் .இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஒரு திறமையான இசையமைப்பாளர்.

இப்படத்திற்காக அவர் ஒரு அற்புதமான படைப்பை வழங்கியுள்ளார். விஜய் ஆண்டனி நிஜவாழ்க்கையிலும் ஹீரோ தான் .இந்த கொரோன காலத்தில் தயாரிப்பாளர்களின் கஷ்டங்களை புரிந்துகொண்டு சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன்வந்த முதல் நடிகர் .

மேலும் அவர் பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் . அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நான் இதுவரை பணியாற்றிய நடிகைகளில் சிறந்த நடிகை ஆத்மிகா .இந்த படத்தில் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
.

நடிகை ஆத்மிகா கூறியவை,

மிக நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த மாதிரியான விழாவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இது எங்கள் படக்குழுவுக்கு முக்கியமான தருணம். கோடியில் ஒருவன் திரைப்படம் திரையரங்குகளுக்கு மக்களை வரவைத்து கொண்டாடக்கூடிய படமாக இருக்கும்.

இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா கூறியவை,

இந்த படத்தில் இசையமைக்க எனக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த விஜய் ஆண்டனி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது இந்த திரைப்படம்.

கலை இயக்குனர் பாப்பாநாடு C .உதயகுமார் கூறியவை,

தயாரிப்பாளர் இப்படத்தின் ஸ்கிரிப்ட் என்னிடம் சொன்னபோது இந்தபடத்திற்கு அதிக பட்ஜெட் தேவைப்படும் என நினைத்தேன். நானும் என் குழுவும் சேர்ந்து எவ்வளவு குறைவான பட்ஜெட்டில் முடிக்க முடியுமோ அதற்கான பணிகளை செய்தோம்.

ஒளிப்பதிவாளர் என் எஸ் உதயகுமார் கூறுகையில்,

படத்தின் படப்பிடிப்பிற்காக இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் கண்ணகி நகரில் லைவ் லொகேஷன்களில் படத்தை எடுக்க வேண்டும் என நினைத்தார். அதற்காக அவர் மிகவும் சிரமப்பட்டார். மக்கள் அனைவரும் இப்படத்தின் தரத்தை ஆராய்ந்து குறிப்பிட்டு பாராட்டுவார்கள் என நம்புகிறோம்.

தயாரிப்பாளர் G தனஞ்ஜெயன் கூடியவை,

கோடியில் ஒருவன் படத்தை முதன் முதலில் எனக்கு விஜய் ஆண்டனி கூறியது இன்னும் நினைவிருக்கிறது. ஒரு தனித்துவம் வாய்ந்த படமாக இது இருக்கும். தன்னை ஒரு எடிட்டராக இப்படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் விஜய் ஆண்டனி .

அவர் ஒரு படத்தை உருவாக்குவதில் முழு தகுதியையும் பெற்றுள்ளார் .தயாரிப்பாளர்களை நட்பாகவும் ,அன்பாகவும் வைத்திருப்பதில் சிறந்தவர் அனந்தகிருஷ்ணன். மற்றும் திரைப்படத்தை சிறப்பாக எடுத்து முடிக்கும் திட்டத்தை வகுப்பதில் திறமைசாலி.

ஆத்மிகா ஒரு சிறந்த நடிகை மட்டுமல்லாது நல்ல மனிதநேயம் உடையவர். படத்தின் புரோமோஷன் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் இந்த திரைப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

Actor Vijay antony follows Vijayakanth way

ரஜினி – விஜய் ஸ்டைலில் குட்டி ஸ்டோரி சொன்ன வடிவேலு..; விரைவில் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி

ரஜினி – விஜய் ஸ்டைலில் குட்டி ஸ்டோரி சொன்ன வடிவேலு..; விரைவில் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா நிறுவனம் சார்பில் ‘புரொடக்சன் 23’ என்ற பெயரில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் ‘வைகைப்புயல்’ வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார்.

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் இயக்குனர் சுராஜ் பேசுகையில்,’…

‘ கொரோனா காலகட்டத்தில் அனைவரும் சோகமயமாக இருந்தபோது நானும், வடிவேலுவும் சிரித்து பேசி உருவாக்கிய கதை இது. வடிவேலு இதற்கு முன் இத்தகைய கேரக்டரில் நடித்ததில்லை. அவருடைய ரீ என்ட்ரி முழுநீள நகைச்சுவை படமாக இருக்க வேண்டும் என விரும்பினார்.

அதற்காக இரண்டு ஆண்டுகள் செலவழித்து சிரித்து சிரித்து உருவாக்கிய கதைதான் இது. இதனை தொடங்க நினைத்தபோது ஏராளமான தடங்கல்கள் ஏற்பட்டது. இறுதியில் ஜி கே எம் தமிழ் குமரன் மூலம் சுபாஷ்கரனிடம் பேசினோம். அவர் வடிவேலுவின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறினார்.

இதற்காகவே லண்டனிலிருந்து இந்தியாவிற்கு வந்தார். அவர் வாக்குறுதி அளித்தபடி வடிவேலுவின் பிரச்சனைகளை சுமுகமான பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு கண்டார். வடிவேலுக்கான கதவையும் திறந்திருக்கிறார். இதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தை பிரம்மாண்டமாக உருவாக்குங்கள். முன்னணி நடிகைகளையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் பயன்படுத்திக்கொள்ள கொள்ளுங்கள்.’ என தயாரிப்பாளர் சுபாஷ்கரன் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார்.

இதற்கு முன் நான் சில தோல்வி படங்களை கொடுத்திருக்கலாம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வடிவேலுவுடன் கூட்டணி வைத்து படம் இயக்குகிறேன். தமிழ் திரையுலகில் வடிவேலுக்கான இடம் இப்போதும் காலியாகத்தான் இருக்கிறது. அது அவருக்கான இடம். அவர் மீண்டும் திரையுலகில் தொடர்ந்து நடிக்க வேண்டும்.’ என்றார்.

நடிகர் வடிவேலு பேசுகையில்,’ …

என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் என் மனதில் பட்டதை பேசுகிறேன். நான் அனுபவித்த துன்பத்தை போல் வேறு யாரும் அனுபவித்து இருக்க முடியாது.

என்னை அனைவரும் ‘வைகைப்புயல்… வைகைப்புயல்..’ என்று சொல்வார்கள். ஆனால் என்னுடைய வாழ்க்கையில் பெரிய சூறாவளி புயலையே சந்தித்துவிட்டேன்.

நோயாளி ஒருவர் டாக்டரை சந்தித்து, ‘எனக்கு மனசு சரியில்லை. தூக்கம் வரவில்லை. ஏதாவது மருத்துவம் பாருங்க..?’ என கேட்டார். அதற்கு மருத்துவர்,’ இன்று சனிக்கிழமை.. நாளை ஞாயிற்றுக்கிழமை.. நாளை மறுநாள் திங்கட்கிழமை வாருங்கள். உனக்கு வைத்தியம் பார்க்கிறேன்’ என்று பதிலளித்தார்.

அதற்கு அந்த நோயாளி,’ முடியவே முடியாது. எனக்கு இப்போதே மருத்துவம் பாருங்கள். என்னை காப்பாற்றுங்கள்.’ என கேட்டுக்கொண்டார். அதற்கு மருத்துவர்,’ நிச்சயம் நீங்கள் திங்கட்கிழமை வாருங்கள். உங்களுக்கு வைத்தியம் பார்க்கிறேன்.’ என பதிலளித்தார்.

மறுபடியும் நோயாளி, ‘தனக்கு தூக்கம் வரவில்லை.’ என சொல்ல, மருத்துவர், ‘பேசாமல் ஒன்று செய்யுங்கள். பக்கத்தில் ஒரு சர்க்கஸ் நடக்கிறது. அந்த சர்க்கஸில் உள்ள பபூன் பிரமாதமாக காமெடி செய்வார். அதை பார்ப்பதற்காக எனக்கும் என் மனைவிக்கும் என இரண்டு டிக்கெட்களை எடுத்திருக்கிறேன்.

என்னுடைய மனைவிக்கான டிக்கெட்டை நான் உங்களிடம் தருகிறேன். நீங்களும், நானும் அந்த சர்க்கஸிற்கு சென்று பபூன் செய்யும் காமெடியை பார்ப்போம். அந்தக் காமெடியை பார்த்தால் உனக்கு உன்னுடைய துன்பம் எல்லாம் பறந்துவிடும். தூக்கமும் வரும்.’ என்றார். அதற்கு அந்த நோயாளி டாக்டரிடம்,’ அந்தப் பபூனே நான் தாங்க’ என சொன்னார்.

கிட்டத்தட்ட நானும் அந்த பபூன் அளவில் தான் தற்போது இருக்கிறேன். கடந்த நான்காண்டுகளாக நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது மீண்டும் நடிக்க வந்ததற்கு கடவுளின் ஆசி தான் காரணம்.

கடந்த இரண்டு வருடத்தில் கொரோனா அனைவரின் வாழ்க்கையை சீரழித்து விட்டது. மகன் -தாயை பார்க்க முடியவில்லை. மகள் -தந்தையை பார்க்க முடியவில்லை. கணவன் -மனைவியை பார்க்க முடியவில்லை. மகனோ, மகளோ வெளிநாட்டில் இருந்தாலும் கூட, அவர்களுக்கு விசா கூட கிடைக்காது.

அடுத்த தெருவில் மட்டுமல்ல.. தன்னுடைய வீட்டில் கணவன் இறந்தாலும் கூட, மனைவி மாடியில் நின்று கொண்டு, ‘அவரை சீக்கிரம் எடுத்துக் கொண்டு செல்லுங்கள். என் பிள்ளைகளுக்கும் அந்த கொரோனா வந்துவிடும்’ என என கவலையுடன் தெரிவித்த காலகட்டம் அது.

கொரோனா வந்து என்னுடைய பிரச்சனையை சாதாரண பிரச்சினையாக்கி, மற்றவர்களின் பிரச்சனையை பெரிசாகி விட்டது. கொரோனா எல்லோரையும் அச்சுறுத்தி, மிரள வைத்து விட்டது. ஒட்டு மொத்த உலகத்திற்கும் தூக்கமே இல்லாமல் செய்துவிட்டது. இதுபோன்ற நேரத்தில் என்னுடைய காமெடி மக்களுக்கு மருந்தாக பயன்பட்டதை நினைத்து, என்னை நானே ஆறுதல் படுத்திக் கொண்டேன்.

இந்த தருணத்தில் என்னை மீண்டும் நடிக்க வைப்பதற்காக முயற்சி எடுத்த சுபாஷ்கரன் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். அவர் மக்கள் மத்தியில் சபாஷ்கரன் ஆகிவிட்டார்.

இனி என்னுடைய பயணம் நகைச்சுவை பயணமாக இருக்கும். அனைவரையும் சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்த வேண்டும். சாகும்வரை நகைச்சுவை நடிகனாகவே நடிப்பைத் தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.

நான் மட்டும்தான் பாதிப்படைந்தேன் என எண்ணியிருந்தேன். திரையுலகமும் பாதிக்கப்பட்டிருந்தது.

திரையுலகம் மட்டுமல்ல உலகமே பாதிக்கப்பட்டிருந்தது. இந்த தருணத்தில் எனக்கு ஊக்கமளித்து நடிக்க வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி சொல்கிறேன். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதுகிறேன்.

தமிழக முதல்வருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்றைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயாவை சந்தித்தேனோ… அன்றிலிருந்து என்னுடைய வாழ்க்கை பிரைட் ஆகிவிட்டது. இனி எல்லாமே நல்லதாகவே நடக்கும் என நம்புகிறேன்.’ என்றார்.

(சிவகார்த்திகேயன் & லாரன்ஸ் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.)

லைகா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஜி கே எம் தமிழ்குமரன் பேசுகையில்…

,’ வடிவேலு விவகாரத்தில் சுமுகமான பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக உதவி செய்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி, செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மன்னன் ஆகியோருக்கு லைகா நிறுவனம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.’ என்றார்.

இதைத்தொடர்ந்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு வடிவேலு பதிலளித்தார். அரசியல் சார்ந்த கேள்விகளை தவிர்த்தார். பாட்டு பாடினார். அவர்களின் விருப்பப்படி ‘பஞ்ச் டயலாக்’ பேசி அனைவரையும் கலகலப்பாக சிரிக்க வைத்தார்.

My ambition is to make people happy for as long as I live: Vadivelu

More Articles
Follows