தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‛இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மற்றும் ‛ஜீரோ உள்ளிட்ட படங்களில் நடித்த அஸ்வின் அடுத்து நடிக்கும் படம் ‛இது வேதாளம் சொல்லும் கதை’.
இதில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
இவருடன் ‛ஜோக்கர்’ படப்புகழ் குரு சோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.
அறிமுக இயக்குனர் ரத்தீந்திரன் பிரசாத் இப்படத்தை இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு ‛ஹாரிபாட்டர்’ படத்தில் பணியாற்றிய ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் ‛கிரேக் ப்யூரிட்ஜ் சண்டை பயிற்சி அளித்துள்ளார்.
மேலும் இவர் ஒரு முக்கிய வேடம் ஒன்றிலும் நடித்துள்ளார். இவர் பிரபல ஹாலிவுட் திரைப்படமான உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி உள்ளார்.
றெக்க படத்தை தயாரித்த காமன்மேன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.
விரைவில் இதன் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Idhu Vedhalam Sollum Kathai Press meet news updates