தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதுமுக இயக்குநர் ரத்தீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம் ‘இது வேதாளம் சொல்லும் கதை’.
அஸ்வின், ஐஸ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம், அபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
ஜிப்ரான் இசையமைத்து வரும் இப்படத்தின் 3 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளதாம்.
டிசம்பரில் இப்படத்தை வெளியிட உள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இதன் டீசரை விஜய்சேதுபதி தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த கேரக்டர் போஸ்டர்களை கவுதம்மேனன், முருகதாஸ், வெங்கட்பிரபு உள்ளிட்ட 8 பிரபலங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த போஸ்டர்கள் தற்போது அது இணையங்களில் வைரலாகி வருகிறது.
Idhu Vedhalam Sollum Kathai movie character posters goes viral