சினிமாவில் இருந்தால் ஜெயலலிதா உடன் நடிச்சிருப்பேன்…- துரைமுருகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிராமிய கலைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை கோரிய
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்
துரைமுருகன் கிராமிய பாடல்களையும் பாடிக் காட்டினார்.

அப்போது அழகாக பாடும் நீங்கள் நாடகங்களில் நடித்து உண்டா என்ற சபாநாயகரின் கேள்விக்கு சிறு வயதில் நாடகங்களில் நடித்துள்ளதாக துரைமுருகன் தெரிவித்தார்.

ஷேக்ஸ்பியர் குறிப்பிட்டது போல் உலகமே நாடகமேடை என்றும் இங்கு அனைவரும் நடித்துக் கொண்டு இருக்கிறோம் என்றும் கூறிய துரைமுருகன், சபாநாயகரான நீங்களும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் என்று கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,அவையில் துரைமுருகன் நவரசங்கள் வெளிப்படும் விதமாக பேசுவதாக ஜெயலலிதா பாராட்டியதைக் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த துரைமுருகன் சினிமா துறைக்கு போயிருந்தால் ஜெயலலிதாவோடு நடிக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றார்.

இதை கேட்ட தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மேஜையை தட்டிசிரித்தனர்.

அதர்வா-நயன்தாரா கலந்துக் கொள்ளாத *இமைக்கா நொடிகள்* இசை விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டிமாண்டி காலனி’ படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘இமைக்கா நொடிகள்’.

‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா என முக்கிய நட்சத்திரங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இந்த படத்தில் நயன்தாரா சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார்.

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யாப் குரூரமாக தொடர் கொலைகளை செய்யும் ‘ருத்ரா’ என்ற சைக்கோவாக நடிக்கிறார்.

அதர்வா மருத்துவ கல்லூரி மாணவராக நடிக்கிறார்.

இந்த படத்தின் கதையில் ட்விஸ்டை ஏற்படுத்தும் ஒரு கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதியும், நயன்தாராவும் கணவன், மனைவியாக நடித்துள்ளனர்.

இந்த படத்தில் விஜய்சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் 15 நிமிடங்கள் இடம்பெறுகிறது!

மீண்டும் லைகாவுடன் இணையும் ரஜினிகாந்த் -முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி சுப்பராஜ் படத்தை தொடர்ந்து உடனடியாக அடுத்தப்படத்திலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம் ரஜினிகாந்த்.

ரஜினியின் ஆர்வத்தை புரிந்துக் கொண்ட லைகா இப்படத்தை தயாரிக்க முன் வந்துள்ளதாம்.

இப்படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்குவார் என கூறப்படுகிறது.

ஏற்கெனவே ரஜினியின் 2.0 படத்தை லைகா தயாரித்து வருகிறது.

மேலும் விஜய்-முருகதாஸ் இணைந்த கத்தி படத்தையும் லைகா தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

13வது முறையாக அஜித்துடன் இணையும் விவேக்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கும் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

மேலும், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.

‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் விவேக்கும் இணைந்துள்ளார்.

“அன்பு நண்பர் அஜித்துடன் மீண்டும் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வாழ்த்திய ரசிகப் பெருமக்களுக்கு என் நன்றிகள். எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விவேக்.

கவுதம் மேனன் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ படம்தாம், அஜித்துடன் சேர்ந்து விவேக் கடைசியாக நடித்த படம்.

இதுவரை 12 படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஆர். ரஹ்மான்-சுந்தர் சி. இணையும் சங்கமித்ரா சூட்டிங் அப்டேட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுந்தர் சி இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சுமார் 400 கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ள படம் சங்கமித்ரா.

நாயகனாக ஜெயம் ரவியும், நாயகியாக திஷா பதானியும் நடிக்கவுள்ளனர்.

8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த அழகியான ‘சங்கமித்ரா’ தனது ராஜ்ஜியத்தை காப்பாற்றுவதற்காக எதிர்கொள்ளும் துயரங்களும், சோதனைகளுமே இப்படத்தின் மையக்கருவாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகவிருக்கும் இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

பீட்டர் ஹையின் சண்டைப் பயிற்சி அளிக்க இருக்கிறார்.

ஏற்கெனவே, படத்தின் முன்னணி பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், வருகிற ஆகஸ்ட் மாதம் சூட்டிங்கை துவங்கத் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு கேன்ஸ் பிலிம் பெஸ்டிவலில் சங்கமித்ரா படத்தின் அறிமுக விழா நடைபெற்றது.

இதில் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்துக் கொண்டார். அதன்பின்னரே இப்படத்திலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இம்சை அரசன் 24ம் புலிகேசியாக நடிக்க வடிவேலு சம்மதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்த படம் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’. இப்படத்தை சிம்புதேவன் இயக்கியிருந்தார்.

மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் 2ம் பாகத்தை ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ என்ற பெயரில் எடுக்கத் தொடங்கினர்.

சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் திடீரென்று தயாரிப்பு நிறுவனத்துக்கும் வடிவேலுக்கும் பிரச்னை எழுந்தது.

எனவே படப்பிடிப்பில் பங்கேற்க மறுத்துவிட்டார் வடிவேலு.

இதுபற்றி தயாரிப்பு நிறுவனம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தது. வடிவேலு முறைப்படி படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தராததால் சுமார் ரூ. 7 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

அதனை அவரிடமிருந்து சங்கம் திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டது. இதன் மீது இருதரப்பிலும் கருத்து கேட்டு பிரச்னைக்கு முடிவு காண முயன்றனர்.

இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தலையிட்டும் சமரசம் ஏற்படவில்லை.

தற்போது வடிவேலு நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே விரைவில் இப்பட சூட்டிங் நடைபெறும் என சொல்லப்படுகிறது.

More Articles
Follows