‘ரஜினி தொட்டதால் என் லேப்டாப்பை விற்கமாட்டேன்.’- அருண் வைத்யநாதன் நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரசன்னா-ஸ்நேகா நடித்த அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கி தயாரித்தவர் அருண் வைத்யநாதன்.

அதன்பின்னர் பிரசன்னா நடித்த கல்யாண சமையல் சாதம் படத்தை தயாரித்தார்.

பின்னர் மோகன்லால் நடித்த பெருச்சாளி படத்தை மலையாளத்தில் இயக்கியிருந்தார்.

தற்போது அர்ஜீனின் 150வது படமாக நிபுணன் படத்தை இயக்கி தயாரித்துள்ளார்.

இதிலும் இவரின் ஆஸ்தான நாயகன் பிரசன்னா நடித்துள்ளார். மேலும் நாயகியாக வரலட்சுமி சரத்குமார்.

இந்நிலையில் இதன் டீசரை 150 பிரபலங்கள் இன்று வெளியிட்டனர்.

ஓரிரு தினங்களுக்கு முன், இந்த டீசரை ரஜினியிடம் போட்டுக் காண்பித்தனர் என்பதை பார்த்தோம்.

அப்போது அருண்வைத்யநாதன் அவர்களின் லேப்டாப் ரஜினி தொட்டு பயன்படுத்தியுள்ளார்.

எனவே சூப்பர் ஸ்டார் தொட்ட என் லேப்டாப்பை நான் விற்கமாட்டேன். என்னுடன் வைத்துக் கொள்வேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Arun Vaidyanathan‏ @Arunvaid
What is SUPERSTAR watching 😉 P.S:- That’s my laptop, headphones & its not for sale anymore #NIBUNAN #VISMAYA #ARJUN150

I wont sale my laptop since Rajini touched it says Arun Vaidyanathan

ரஜினியுடன் போட்டோ எடுங்க, உறுதிமொழியும் எடுங்க.. – எஸ்பி முத்துராமன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு இன்றுமுதல் சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதற்கான தொடக்க விழாவில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது…

“ரஜினிகாந்த் நடிகராக மட்டும் அல்ல, நல்ல நண்பராக உள்ளார்.

எங்களுக்குள் ஒரு சகோதர நட்பு என்றும் உள்ளது.

புவனா ஒரு கேள்விக்குறி என்ற படத்தில் பார்த்தபோது ரஜினி எப்படி பழகினாரோ இன்றும் அப்படியிருக்கிறார்.

சினிமாவில் நுழைவதற்கு முன்பு பிலிம் இன்ஸ்ட்யூட்டில் படிக்கும்போது ஒரு குடிசையில்தான் இருந்தார்.

இன்றும் அவர் வீட்டில் மேல் அதுபோன்ற ஒரு குடிசை இருக்கிறது. எதற்கு ரஜினி என்று கேட்டால், குடிசையில்தானே என் வாழ்க்கை ஆரம்பமானது.

அதை என்றும் மறக்க கூடாது என்றார். அவர் பழசை என்றும் மறக்காதவர்.

இன்று புகழின் உச்சத்தை எட்டிவிட்டாலும் அந்த புகழை தலையில் ஏற்றிக்கொள்ளாத மனிதன் அவர்.

அவர் எப்போதும் பல உதவிகளை செய்துவருகிறார். அது யாருக்கும் தெரியாது. அவர் கொடுத்து பழக்கப்பட்டவர்.

நீங்கள் ரஜினியின் புகைப்படம் எடுக்கும்போது அவருடன் கைகொடுக்க வேண்டாம். அவரது காலில் விழக்கூடாது.

ரஜினியின் போட்டோ எடுப்பது முக்கியமில்லை. எடுத்துவிட்டோம் என்று மற்றவர்களிடம் காண்பிப்பது முக்கியமல்ல.

உங்கள் வீட்டில் அவரது போட்டோ இருக்கும்போது, அதை பார்க்கும்போது அவரைப் போல ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

அவரை நீங்கள் ரோல் மாடலாக நினைத்துக் கொண்டு முன்னேற வேண்டும். இதை உறுதிமொழியாக எடுத்துக கொள்ளுங்கள்” என்றார்.

Fans must learn discipline from Thalaivar Rajini says SP Muthuraman

‘ரஜினி-கமலும்… தமிழக அரசியலும்…’ அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ரசிகர்களிடையே ரஜினி பேசிய பேச்சு அரசியல் உலகிலும் சினிமா உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் பேச்சு குறித்து பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து மதுரையில் உள்ள பா.ம.க. மாநில துணைத் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறும்போது…

தமிழ்நாட்டை சினிமாகாரர்கள் ஆட்சி செய்தது போதும்.

கமல் ஒரு தைரியமான நபர். அவர் அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பதில் ஒரே நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார்.

ஆனால் அதே நேரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக கூறி வரும் ரஜினி, அரசியலுக்கு வருவது பற்றி உறுதியான கருத்துக்களை தெரிவிக்காமல் இருக்கிறார்” என ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை பற்றியும் தன் கருத்தை தெரிவித்தார்.

Anbumani Ramadoss opinion about Rajini Kamals political stands

அரசியல் உலகில் மீண்டும் ரஜினி வாய்ஸ்; தமிழிசை என்ன சொல்கிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசினாலும் பேசாவிட்டாலும் அவரைப் பற்றிய பேச்சு எப்போதும் மீடியா உலகில் இருந்துக் கொண்டே இருக்கும்.

அதுவும் இன்று ரசிகர்கள் மத்தியில் அவர் பேசிய பேச்சு அரசியல் உலகில் சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இன்று நடிகனாக இருக்கும் நான். நாளை கடவுளால் வேறு ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதில் உண்மையாக இருப்பேன். நேர்மையாக செயல்படுவேன் என்றார்.

மேலும், தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்றும், தற்போது அதுபற்றி பேச விரும்பவில்லை என தெரிவித்தார்.

இறுதியாக நான் அரசியலுக்கு வந்தால், ரசிகர்கள் என்றாலும் அவர்களுக்கு பணத்தாசை பிடித்திருந்தால் அவர்களை நெருங்க விட மாட்டேன் என மறைமுகமாக தன் அரசியல் பிரவேசம் குறித்து குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து, பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது…

ஊழலை எதிர்ப்பதாக ரஜினி குறிப்பிட்டு இருந்தார். அவரின் நிலைப்பாடும் பாஜகவின் கருத்தும் ஒன்றுதான்.

அவரது பேச்சின்மூலம் அவர் அரசியலுக்கு வருவார் என்றே புரிந்து கொள்ள முடிவதாக தெரிவித்தார்.

நல்ல மனிதர்களுடன் வந்தால் அரசியலில் வெற்றி பெறுவார் என்பதே என் கருத்து எனவும் தமிழிசை தெரிவித்தார்.

ரஜினியின் இந்த வாய்ஸ் அரசியல் உலகில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

Tamilisai Soundararajan opinion about Rajinikanth entry into Politics

விஜய் பிறந்தநாளை தவிர்த்து மற்ற வியாழனில் ‘விவேகம்’ இசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.

இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை விஜய் பிறந்தநாளில் (ஜீன் 22, வியாழக்கிழமை) வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் அனிருத் இசையமைத்துள்ள விவேகம் படத்தின் பாடல்களை ஜீன் மாதத்தில் வெளியிடவிருக்கிறார்களாம்.

அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமெண்டை பார்க்கும் பட்சத்தில் ஜீன் மாதம் ஐந்து வியாழக்கிழமைகள் (1, 8, 15, 22, 29 தேதிகள்) வருகிறது.

அதில் விஜய் பிறந்தநாளை தவிர்த்து மற்ற வியாழக்கிழமைகளில் ஏதேனும் ஒரு தினத்தை தேர்ந்தெடுத்து அன்று வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

Vijay 61 first look and Vivegam audio launch release date updates

தனுஷ் தயாரிப்பது ரஜினியின் 161வது படமல்ல… எஸ்பி. முத்துராமன் தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த நாட்களில் ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் டப்பிங் பணிகளில் ரஜினி கலந்து கொண்டார்.

இதனையடுத்து விரைவில் பா. ரஞ்சித் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை தன் வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தனுஷ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இப்படத்தின் தொடர்பாக தகவல்களை பகிரும்போது இது ரஜினியின் 161வது படம் என பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் இன்று ரஜினி ரசிகர்கள் போட்டோ எடுக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் கலந்துக் கொண்ட இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் பேசும்போது…

அடுத்து ரஜினி நடிப்பில் உருவாகவுள்ள படம் தலைவர் 164. அதில் 161வது படமல்ல.

அவர் மென்மேலும் படங்களில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றார்.

ரஜினி நடித்த 25 படங்களை இயக்கியவர் எஸ்பி முத்துராமன் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini Dhanush Ranjith combo is not Thalaivar 161 movie says SP Muthuraman

More Articles
Follows