தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் கமல்ஹாசன் தன் அரசியல் பிரவேசத்தை உறுதிசெய்துவிட்டார். விரைவில் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.
அதுபோல் ரஜினிகாந்த்தும் ரசிகர்கள் சந்திப்புக்கு பின்னர் தன் அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பூ அவர்கள் இதுகுறித்து கூறியதாவது…
காங்கிரஸ் கட்சியின் கொள்கை எனக்கு பிடித்திருந்தது. எனவேதான் அந்த கட்சியில் இணைந்தேன்.
நான் அரசியலில் இருக்கும்வரை காங்கிரஸ் கட்சியில்தான் இருப்பேன்.
கமல் என் 30 வருட நண்பர்தான். ஆனால் அவர் கட்சி ஆரம்பித்தால் நிச்சயம் அதில் இணையமாட்டேன்.
அதுபோல் ரஜினி கட்சியில் இணைய அழைத்தாலும் இணையமாட்டேன்” என தெரிவித்துள்ளார் குஷ்பு.
I wont join in Rajini Kamals Political party says Kushboo