ஜெயலலிதா இருந்த போது அரசியலுக்கு வர பயமா..? ரஜினி பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று நடைபெற்ற ஒரு தனியார் கல்லூரி விழாவில் எம்ஜிஆர் திருவுருவச் சிலையை திறந்து வைத்து பேசினார் ரஜினிகாந்த்.

இதுவரை இல்லாத அளவிற்கு அரசியல்வாதிகள் மற்றும் தன்னை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஜினி பேசினார்.

ஜெயலலிதா இருந்தபோது ஏன் அரசியலுக்கு வரவில்லை என்கிறார்கள். அவர் உயிருடன் இருந்தபோதே அவரை எதிர்த்து நான் தைரியமாக பேசியிருக்கிறேன்.

மீண்டும் மீண்டும் 1996ல் நடந்த அரசியல்களை பற்றி நான் பேச விரும்பவில்லை.

இந்தியாவில் எவரும் செய்யாத அளவிற்கு தன் கட்சியை நன்றாக வழி நடத்தியவர் அவர்.

இன்று அவர் இல்லை. என் அருமை நண்பர் கலைஞரும் அரசியலில் ஆக்டிவ்வாக இல்லை. அந்த வெற்றிடம் உள்ளது. அதான்யா நான் வரசியலுக்கு வருகிறேன்.” என பேசினார் ரஜினிகாந்த்.

I wont get afraid of Jayalalitha says Rajini at MGR Statue opening event

ரசிகர்கள் வைத்த பேனர்களால் மக்களிடம் மன்னிப்பு கேட்ட ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலையை நடிகர் ரஜினிகாந்த் இன்று ஒரு தனியார் கல்லூரியில் திறந்து வைத்தார்.

என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழக மக்களே என தன் வழக்கமான உரையுடன் பேச்சை துவங்கினார் ரஜினிகாந்த்.

அதன்பின் அவர் பேசியதாவது….

இது ஒரு கல்லூரி விழா போல் இல்லை. என் ரசிகர்கள் ஒரு மாநாடு போல் நடத்திவிட்டனர்.

வருகிற வழியெங்கும் கட்அவுட் பேனர்கள் என வைத்துவிட்டனர்.

இதுபோல் மக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க கூடாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதை நாம் மீறிவிட்டதாக நினைக்கிறேன். இனி இவ்வாறு செய்ய வேண்டாம்.

மக்களுக்கு இடைஞ்சல் இருந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என பேசினார்.

Rajini apologies to TN People because of his fans banners on Chennai Road

அமைச்சர்கள்-அதிகாரிகளின் பிள்ளைகள் அரசு பள்ளியில்தான் படிக்கனும்… : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி கமல்ஹாசன் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது நிர்வாகிகள் மத்தியில் கமல் பேசியதாவது…

“என்னை பார்த்து நீங்கள் தலைவா என சொல்ல வேண்டாம், உங்களை பார்த்துதான் தலைவா என நான் கூறவேண்டும்.

நீங்கள் இல்லாமல் என்னால் எதையும் செய்ய முடியாது.

நம் நாட்டில் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். ஏழைகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் கல்வி இருக்க வேண்டும்.

அமைச்சர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்.

நம்மிடம் இருந்தே எல்லா மாற்றங்களையும் கொண்டு வருவோம்.

பட்டதாரிகளும் விவசாயம் செய்ய முன்வர வேண்டும்”

நாட்டில் மதுவிலக்கு வந்தால் கள்ளச்சாரயம் பெருகும். அதில் கொஞ்சம் கொஞ்சமாக இறப்பவர்கள் ஒரேடியாக சாவார்கள்.” என கமல் பேசினார்.

Govt Staffs and Ministers children must study in Govt Schools says Kamal

Breaking: வரலட்சுமிக்கு தளபதி விஜய் தந்த பிறந்தநாள் பரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் ஏற்கெனவே கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் மற்றொரு முக்கியமான கேரக்டரில் நடிகை வரலட்சுமியும் இணைந்துள்ளார்.

வரலட்சுமி இன்று தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வரலட்சுமி கூறும்போது…

“பிறந்தநாளில் அறிவிப்பு வெளியானது உற்சாகமாக உள்ளது” என பதிவிட்டுள்ளார்.

இவர்களுடன் ராதாரவி மற்றும் யோகிபாபுவும் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Varalakshmi teamsup with Keerthy suresh in Vijay 62 movie

Breaking: நீட் தேர்வால் தற்கொலை செய்த அனிதா கேரக்டரில் ஜுலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் அமல் படுத்த வேண்டும் என சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தமிழக மாணவர்கள் பல போராட்டங்களை நடத்தினர்.

+2வில் அதிக மதிப்பெண் எடுத்தும் தன்னால் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியவில்லையே என மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அவரது பெயரில் ஒரு படம் உருவாகவுள்ளது.

படத்திற்கு டாக்டர் எஸ் அனிதா எம்பிபிஎஸ் என பெயரிட்டு அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அனிதா கேரக்டரில் பிக்பாஸ் மற்றும் ஜல்லிக்கட்டு புகழ் ஜுலி நடிக்கவுள்ளார்.

அந்த போஸ்டரில் ஒரு தாமரை பூ மேல் இவர் அமர்ந்துள்ளார்.

இந்த போஸ்டரை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்று அனிதாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

BiggBoss fame Julie acting in NEET exam suicide issue Dr S Anitha MBBS movie

 

Breaking: ரஜினி அரசியலில் விஜய் கூட்டணி…? எஸ்ஏ. சந்திரசேகர் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று மார்ச் 5ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல கல்லுரியில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலையை ரஜினிகாந்த் திறந்து வைக்கவுள்ளார்.

ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பின்னர் அவர் இதுபோன்ற ஒரு விழாவில் கலந்துக் கொள்ளவிருப்பதால் சென்னை கோயம்பேடு முதல் மதுரவாயல், வானகரம் வழிகளில் ரஜினியை வரவேற்பு பல பேனர்களை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

மேலும் பேண்டு வாத்தியங்களை வைத்து ரஜினியை வரவேற்க தயாராக உள்ளனர்.

இதே விழாவில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரும் கலந்துக் கொள்ளவிருக்கிறார்.

அப்போது அவரை சந்தித்துள்ள செய்தியாளர்கள்… ரஜினியின் அரசியல் கட்சியில் இணைவீர்களா? என கேட்டுள்ளனர்.

இது தொடர்பாக விஜய்யிடம்தான் கேட்க வேண்டும் என எஸ்ஏசி பதிலளித்துள்ளார்.

Will Vijay joins with Rajinis political party Here is SAC reaction

More Articles
Follows