தமிழகத்தை ஆள ரஜினியை அனுமதிக்க முடியாது.; பாரதிராஜா பாய்ச்சல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தமிழர் இல்லை. அவர் தமிழகத்தை ஆள அனுமதிக்க முடியாது என மீண்டும் தன் பேச்சை ஆரம்பித்துள்ளார் பாரதிராஜா.

இவரின் சமீபத்திய பேட்டியில்…

கேரளாவை மலையாளி ஆள்கிறார். அசாமை ஒரு அசாமியர் ஆள்கிறார். கர்நாடகாவை கர்நாடகக்காரர் ஆள்வது போல் தமிழகத்தை ஒரு தமிழர்தான் ஆள வேண்டும்.

ரஜினி பேர சொல்ல ஏன் பயம்?; சாகுற காலத்துல நடிக்கிறார்.. மன்சூர் அலிகான்

நம் நாட்டை ஒரு வெள்ளைக்காரன் ஆள்வதை எப்படி ஏற்கமுடியாதோ அது போல் தமிழகத்தை ரஜினி ஆள்வதை ஏற்க முடியாது.

தான் தமிழன் தான் என ரஜினிகாந்த் சொன்னாலும். அவர் வாழ வந்தவர். அவர் தமிழகத்தி பிறக்கவில்லை. என கூறினார்.

மேலும் ரஜினியை போன்ற ஒரு எளிமையான மனிதரை பார்க்க முடியாது. அவர் மிகவும் நல்லவர் என்றும் கூறினார்.

I Wont allow Rajini to rule Tamilnadu says Bharathiraja

BREAKING சிவகார்த்திகேயன்-14 தலைப்பை அறிவித்த ஏஆர். ரஹ்மான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சிவகார்த்திகேயன் 14 படம் சில பைனான்ஸ் பிரச்சினைகளால் கைவிடப்பட்டது.

ஆரம்பத்தில் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.

அந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்ததால் தற்போது ‘டாக்டர்’ படத்தை அடுத்து 2-வது முறையாக கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சிவகார்த்திகேயனுடன் கரம் கோர்த்துள்ளது.

இந்த படத்தை ரவிக்குமார் இயக்க ஏஆர். ரஹ்மான் இசையமைப்பார் என பரபரப்பாக பேசப்பட்டது.

விஸ்வாசம் போல ‘ஹீரோ’ன்னு சொன்னாரே KJR..; கடுப்பில் SK ரசிகர்கள்

இது சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகும் என கூறப்பட்டது.

இதில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்க கருணாகரன், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு அயலான் என்று டைட்டில் வைத்துள்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் அறிவித்துள்ளார்.

“ஓ மை கடவுளே” படத்தில் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காதல் கதைகள் என்றும் அழியா தன்மை கொண்டது. உலகில் எந்த மூலையிலும் வசிக்கும் எவரும் காதல் கதைகளை தன்னுடன் எளிதில் தொடர்பு படுத்தி கொள்வார்கள். எத்தனை காலம் கடந்தாலும் காதல் கதைகள் ஜெயித்து கொண்டே இருக்கும். மனிதன் உள்ளவரை காதலும் அழியாது. திரையில் சரியான விதத்தில் சொல்லப்படும் காதல் கதைக்கு மவுசு எப்போதும் அதிகம். அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் “ஓ மை கடவுளே” இன்றைய நவ நாகரீக உலக இளைஞர்களின் காதலை புதிய வடிவில் சொல்கிறது. இப்படத்தின் டீஸர், புரமோ பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. ஏற்கனவே விஜய்சேதுபதி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் என்கிற நிலையில், இப்போது அடுத்த ஆச்சர்யமாக, இயக்குநர் கௌதம் மேனன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் எனும் செய்தி, ரசிகர்களை உற்சாகம் கொள்ளச்செய்துள்ளது.

Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு இது பற்றி கூறியாதாவது…

இப்படத்தில் சில காட்சித்தொடர்கள் படப்பிடிப்பு தளத்தில் நடப்பது போன்று அமைந்துள்ளது. அந்தக்காட்சிகளில் உண்மையான இயக்குநர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருக்க வேண்டும் காதல் படங்கள் இயக்குபவராக இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. யாரை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சின் போது அனைவரது தேர்வாகவும் கௌதம் மேனன் இருந்தார். ஆனால் அவர் ஒப்புக்கொள்வாரா ? எனும் தயக்கம் எங்களிடம் இருந்தது. ஆனால் இயக்குநர் அவரை அணுகி கதையையும், அவரது பாத்திரம் குறித்தும் கூறிய போது அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார். மேலும் வெகு எளிமையாக எங்களுடன் படப்பிடிப்பில் இருந்து நடித்து தந்தார். அவரது காட்சிகளை இப்போது காணும்போது வெகு மகிழ்ச்சியாக இருந்தது. எங்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களும் பெரு விருந்து காத்திருக்கிறது. இப்படம் இளைஞர்களை கவரும் அட்டகாசமான காதல் படமாக இருக்கும்

2020 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள இப்படம் சென்சார் ஃபோர்டில் U/A சர்டிஃபிகேட் பெற்றுள்ளது. இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தை Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G. டில்லிபாபு Happy High Pictures அபிநயா செல்வமுடன் இணைந்து தயாரித்துள்ளார். Sakthi Film Factory இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

வாணி போஜன், M S பாஸ்கர், ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

எழுத்து , இயக்கம் – அஷ்வத் மாரிமுத்து

இசை – லியான் ஜேம்ஸ்

ஒளிப்பதிவு – விது அயன்னா

படத்தொகுப்பு – பூபதி செல்வராஜ்

கலை இயக்கம் – இராமலிங்கம்

உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்

உடைகள் – முகம்மது சுபையர்

சண்டைப் பயிற்சி – ராம்குமார்

பாடல்கள் – கோ சேஷா

புகைப்படம் – ராஜா

தயாரிப்பு மேற்பார்வை – சேதுராமலிங்கம், பூர்னேஷ்

நிர்வாக தயாரிப்பு – நோவா.

விமல் நடிக்கும் “சோழநாட்டான்” திரைப்படம் சத்தியமங்கலம் காடுகளில் படப்பிடிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விமல் நடிக்கும் சோழநாட்டான் பட பூஜை போட்டு பிரமாண்ட தளம் அமைத்து கிராபிக்ஸ் படபிடிப்பு நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சத்தியமங்கலம் காட்டில் உள்ள மலைப்பகுதியில் தமிழ் சினிமா இதுவரை காணாத காடுகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமி ட்டுள்ளனர். தஞ்சாவூர், ஹைதராபாத், வைசாக், போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. வரலாற்றை அடிப்படையாக கொண்ட கதையில் விமல் நடிக்கும் முதல் படம் ‘சோழ நாட்டான்’. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும்.

பொதுவாக ஒரு படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு தான் அப்படத்தின் இசையை வெளியிடுவார்கள். ஆனால், தற்போது தஞ்சாவூரில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த படம் சோழநாட்டை மையப்படுத்தி உருவாவதால், படப்பிடிப்பு பணிகளின் இடையே குடமுழுக்கை முன்னிட்டு சோழநாட்டை பெருமைப்படுத்தும் விதமாக பிப்ரவரி மாதத்திலேயே முதல் பாடலை வெளியிட உள்ளார்கள். இப்படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரக்த்தில் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருக்கின்றார்.
மேலும் விமலுடன் காருண்ய கேதரின்
, தென்னவன், நாகி நாயுடு,சீதா, பரணி, டேனியல் பாலாஜி, சென்ட்ராயன், ராமர், தங்கதுரை, போஸ் வெங்கட்,சௌந்தரபாண்டியன் எம்.எஸ்.குமார், இன்னும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்க நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
நவீன் ஷங்கர்
இசையமைக்க கலைக்குமார் மற்றும் சபரீஷ் பாடல்கள் எழுதுகிறார்கள். பாரிவள்ளல் தயாரிக்க அவருக்கு இணை தயாரிப்பாளராக கை கொடுக்கிறார் ஐ.மனோகரன்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் இணையும் தனுஷ் & ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடித்த பட்டாஸ் படம் 2020 பொங்கலுக்கு வெளியானது.

தற்போது மீண்டும் தனுஷுடன் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறது சத்யஜோதி ஃபிலிம்ஸ்.

இந்த படத்தை துருவங்கள் கார்த்திக் நரேன் இயக்குகிறார்.

இவர் துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசூரன் போன்ற படங்களை இயக்கியவர். இதில் முதல் படம் மட்டுமே வெளியாகியுள்ளது.

தற்போது உருவாகவுள்ள படம் தனுஷின் 43 வது படமாகும்.

‘அர்த்தங்கி ரே’ படத்தில் ஏஆர்.ரஹ்மான்-அக்சய்குமார்-தனுஷ்

பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன மற்றும் அசுரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து இதன் மூலம் ஜி.வி. பிரகாஷ் 5 முறையாக தனுஷுடன் கைகோர்க்கிறார்.

மற்ற கலைஞர்களை இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும்.வரும் அக்டோபர் மாதம் படத்தை திரையிட உள்ளனர்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாபியா விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush and GV Prakash Joins with Karthick Naren

நடிகர் மகத்-பிராச்சி மிஸ்ரா திருமணம்; சிம்பு நேரில் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் மங்காத்தா, விஜய்யின ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மகத்.

இவரும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

அதன்பின்னர் நடிகர் மகத் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடிகை யாஷிகா மீது காதல் வயப்பட்டார்.

இதனால், மகத்துக்கும், பிராச்சிக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.

சிம்புவின் மாநாட்டில் பங்கேற்கும் பிரபலங்கள்

இதன் பின்னர் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த மகத், பிராச்சியை சந்தித்து மீண்டும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் திருமணம் சென்னையருகே உள்ள மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

நடிகர் சிம்பு திருமணத்திற்கு நேரில் சென்று மகத் மற்றும் பிராச்சி மிஸ்ராவை வாழ்த்தினார்.

Simbu attends Mahat and Prachis wedding

More Articles
Follows