நடிகை வெண்பா-வின் ஆசையை கமல்-ரஜினி நிறைவேற்றுவார்களா.?

Venba‘கற்றது தமிழ்’, ‘சிவகாசி’ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் வெண்பா.

மேலும் குழந்தை பருவத்தில் தனியார் டிவி..க்களில் விஜே-ஆக பணிபுரிந்துள்ளார்.

வளர்ந்து குமரியான பிறகு ஹீரோயின் வேடத்தில் மட்டுமே நடிப்பேன் என சவால் விட்டு நாயகியாக நடித்து வருகிறார்.

காதல் கசக்குதய்யா, பள்ளி பருவத்திலே, மாயநதி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

அண்மையில் வெளியான அல்வா என்ற குறும்படத்திலும் நாயகியாகவே நடித்தார்.

விரைவில் வெளியாகவுள்ள ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் ஜிவி. பிரகாஷ் உடன் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இவரை தொடர்பு கொண்டு பேசியபோது…

சிஸ்டர் கேரக்டர்களில் நடிக்க நிறைய சான்ஸ் வருகிறது. ஆனால் நடிக்கமாட்டேன்.

நிறைய டிவி சீரியல்களிலும் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.

சீறு படத்தில் ஜீவாவின் தங்கையாக நடிக்க கேட்டனர். ஆனால் முடியாது என மறுத்துவிட்டேன்.

கமல் ரஜினி போன்ற சீனியர் நடிகர்களுக்கு மட்டும் மகளாக நடிக்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்தார் வெண்பா.

வெண்பாவின் ஆசையை ரஜினி கமல் என யாராவது நிறைவேற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

I wish to act with Rajini and Kamal says Actress Venba

Overall Rating : Not available

Latest Post