ரஜினியுடன் மீனா நடித்ததை போல, அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஷாலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எங்கேயோ கேட்ட குரல் மற்றும் அன்புள்ள ரஜினிகாந்த் ஆகிய படங்களில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மீனா.

பின்னர் வளர்ந்து குமரியாகி எஜமான், முத்து, வீரா உள்ளிட்ட படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்தார்.

இதே போல காதல் மன்னன் படத்தில் அஜித்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாலு.

இவரது சமீபத்திய பேட்டியில் இவர் கூறியதாவது…

“என் அம்மா சொல்லிதான் எனக்கு தெரியும் நான் அஜித் சாருடன் நடித்தேன் என்பதே.

காதல் மன்னன் சூட்டிங்கில் அஜித் என்னை கொஞ்சிக் கொண்டிருப்பாராம்.

தற்போது நான் வளர்ந்து விட்டேன். இப்போது அவருடன் ஒரு சின்ன கேரக்டரிலாவது நடிக்க வேண்டும் என ஆசை வந்துவிட்டது.

அதுபோல் அவரிடம் இந்த ப்ளாஷ்பேக் சொல்லி, அவருடன் ஷெஃல்பி எடுத்துக் கொள்ளவும் ஆசை” என தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதியுடன் கைகோர்க்கும் த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

த்ரிஷா நடிப்பில் நாயகி படம் அண்மையில் வெளியானது. ஆனால் படம் வந்ததா? என்பதே தெரியாத அளவுக்கு ஓடி ஒளிந்துக் கொண்டது.

இதனையடுத்து, விரைவில் கொடி, மோகினி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளன.

தற்போது அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ‘சதுரங்கவேட்டை -2’ மற்றும் ‘கர்ஜனை’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் முதன்முறையாக விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

விஜய்சேதுபதி நடித்த, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர் பிரேம்குமார்.

இவர் இயக்கவுள்ள ஒரு படத்தில்தான் இந்த ஜோடி இணைகிறது.

ரசிகர்களுக்கு அடுத்தடுத்து ‘சிறப்பு’ விருந்து தரும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாலு படத்திற்கு சிம்பு பல படங்களில் நடிக்க கமிட் ஆனார்.

ஆனால் அதற்கு முன் ஒப்புக் கொண்ட இது நம்ம ஆளு படம் மட்டுமே இந்தாண்டு வெளியானது.

இதனால் இவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் தன் ரசிகர்களுக்கு இரண்டு விருந்துகளை அடுத்தடுத்து கொடுக்கவிருக்கிறாராம்.

கௌதம் மேனன் இயக்கியுள்ள அச்சம் என்பது மடமையடா படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகிறது.

இதனையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் இரண்டாவது டீசரை வெளியிடவிருக்கிறாராம்.

இதனுடன் அஸ்வின் தாத்தாவின் பர்ஸ்ட் லுக் மற்றும் சிறப்பு பாடல் ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார் சிம்பு.

தனுஷ் தயாரிப்பில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஐஸ்வர்யா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை தனுஷ், தன் வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார்.

தற்போது ஷங்கரின் 2.ஓ படத்தில் நடித்துவரும் ரஜினி, அடுத்த வருடம் இப்படத்தில் நடிக்க தொடங்குகிறார்.

இந்நிலையில், எவரும் எதிர்பாராத வகையில் இப்படத்தில் ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யாவும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை ஐஸ்வர்யா இயக்கியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இதுவரை படங்களை மட்டுமே இயக்கிய ஐஸ்வர்யா முதன்முறையாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘விஜய்சேதுபதிக்கே சவால் விடுவார் ஜிவி.பிரகாஷ்…’ பாண்டிராஜ் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் இயக்கியுள்ள படம் புரூஸ் லீ.

கெனன்யா பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ், கீர்த்தி கர்பன்ந்தா, ஆனந்த்ராஜ், ராமதாஸ், பால சரவணன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் நேற்று வெளியானது.

இதற்கான விழாவில் இயக்குனர் பாண்டிராஜ் கலந்துக் கொண்டு தன் உதவியாளரை வாழ்த்தி பேசினார்.

அப்போது… இவ்வருடம் மட்டும் விஜய் சேதுபதி படங்கள் 6 படங்கள் வெளியாகிவிட்டன்.

அடுத்த வருடம் விஜய்சேதுபதிக்கே சவால் விடுவார் ஜி.வி.பிரகாஷ். மாதம் ஒரு படத்தை ரிலீஸ் செய்வார்” என்று பேசினார்.

தனுஷின் நிஜ தம்பி கண்ணனுக்கு உதவும் ஆர்கே. சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்றைய சினிமாசூழலில் எல்லா திரையரங்குகளையும் பெரிய படங்கள் ஆக்கிரமித்துக் கொள்வதால் சின்ன படங்கள் மட்டுமல்ல சிலநேரம் சிறப்பான, தரமான படங்கள் கூட வெளியிட முடியாமல் சிக்கலுக்குள்ளாகித் தவிக்கின்றன.

குறைந்த அளவிலேயே திரையரங்குகள் கிடைத்து அடையாளம் பெற முடியாமல் போய் விடுகின்றன.

‘கதிரவனின் கோடைமழை’ அப்படி ஒரு படம்தான். கிராமத்துக் கதையான அந்தப்படம், மார்ச் 2016-ல் வந்த படம். அப்போது ஊடகங்களில் குறைகள் பெரிதாகப் பேசப்படாமல் வரவேற்கப்பட்ட படம்.

ஆனால் திரையரங்குகள் கிடைக்காத பிரச்சினையால்அந்தப்படம் பாதிக்கப்பட்டது. அதனால் படம் வந்ததே யாருக்கும் தெரியவில்லை.

இருந்தாலும் இப்போது அப்படத்துக்கு மறு ஜென்மம் கிடைத்து இருக்கிறது.

கதிரவன் இயக்கத்தில் கண்ணன், (ஸ்ரீபிரியங்கா இப்போது ஸ்ரீஜா) இமான் அண்ணாச்சி நடித்த படம் தான்’கதிரவனின் கோடைமழை’.

யாழ் தமிழ்த்திரை சார்பில் கு.சுரேஷ்குமார். த.அலெக்ஸாண்டர் தயாரித்திருந்தனர்.

எங்கிருந்தோ வரும் ஒருவரால்தான் எல்லாவற்றிற்கும் விடிவு பிறக்கும்.

ராமனால் அகலிகை சாப விமோசனம் பெற்றது புராணக்கதை. அப்படி வந்தவர் தயாரிப்பாளர் ‘ஸ்டுடியோ 9’ சுரேஷ்.

அவர் இப்படத்துக்கு நேர்ந்த கதியை அறிந்தவர், படத்தைப் பார்க்கலாம் என்றிருக்கிறார்.

படத்தைப் பார்த்தவர் படம் இந்தளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

இதை எல்லாரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.நல்லபடியாக இந்தப்படத்தைக் கொண்டு சேர்த்தால் ஓடும். நானே வெளியிடுகிறேன். ”என்றிருக்கிறார்.

படம் வருகிற வெள்ளிக்கிழமை (நாளை அக். 21 தேதி) மீண்டும் வெளியாகிறது.

படம் பற்றி இயக்குநர் கதிரவன் பேசும்போது ‘பேரன்பு என்பது பெருங்கோபத்தைவிட ஆபத்தானது’ என்பதைச் சொல்கிற கதை.

படத்தில் வில்லன் என்று யாருமே கிடையாது. சூழல்தான் எல்லாரையும் மாற்றுகிறது.

அதிக அன்பு கொண்ட அண்ணனும் தங்கையும் படத்தின் பிரதானம் என்றாலும் கதையில் காதலும் உள்ளது.

இதில் நாயகனாக நடித்துள்ள கண்ணன் நடிகர் தனுஷின் சித்தப்பா மகன். அதாவது கஸ்தூரிராஜாவின் தம்பி சேதுரா மனின் மகன். எனவே தனுஷுக்கு தம்பி முறை ஆவார்.

நாயகியாக வரும் ஸ்ரீபிரியங்காதான் தங்கை. அண்ணனாக இயக்குநர் மு.களஞ்சியம் நடித்திருக்கிறார். ” என்கிறார் படத்தை எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள கதிரவன். இவர் பிரபுதேவா உள்ளிட்ட பலரிடம் உதவியாளராக இருந்து சினிமா கற்றவர் .

முழுப்படமும் சங்கரன் கோவிலில் எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாதிப்படம் கோடைக் காலத்திலும் மறுபாதிப்படம் மழைக்காலத்திலும் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் கவிஞர் வைரமுத்து மெட்டுக்கு மட்டுமல்ல எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்தும் பாடல்கள் எழுதியுள்ளது புதிய முயற்சி. படத்திலுள்ள நான்கு பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். இசை சாம்பசிவம். பின்னணிஇசை பவன்.

இப்படம் பல பகுதிகளில் வெளியாகவே இல்லை. சில ஊர்களில் சனி. ஞாயிறு காலைக் காட்சி என்று சுருங்கிப் போனது. மறுபிறவி எடுத்துள்ள இப்படம் இப்போது சில திருத்தங்களு டன் புது அவதாரம் எடுத்து வெளிவருகிறது.

More Articles
Follows