எட்டு மாத குழந்தை நான்; இனி எஞ்சிய நாட்கள் மக்களுக்கே.. : கமல்

எட்டு மாத குழந்தை நான்; இனி எஞ்சிய நாட்கள் மக்களுக்கே.. : கமல்

I will spend Rest of life days for Tamil Peoples only says Kamalhassanகல்வியாளர் ஐசரி கணேஷ் அவர்களின் பிறந்தநாள் விழா இன்று அக்டோபர் 7ஆம் தேதி வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது…

இந்த விழா நட்பு உறவாக மாறும் விழா. தாயார் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் நடக்கிறது. இனி ஐசரி கணேஷ் அவர்கள் என்னை நண்பர் கமல்ஹாசன் என்று அழைக்காமல், அண்ணன் கமல்ஹாசன் என்றே அழைக்கலாம்.

வெற்றியாளர்களின் தாயார் விழாவில் உடன் அமர்ந்து பிள்ளைகளை ரசிப்பதை பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. பரிசு கொடுப்பது, பொன்னாடை போர்த்துவது எங்கள் பாணியில்லை. அவருக்கு நான் அண்ணனாக மாறியது தான் இந்த பிறந்தநாள் பரிசாக அளிக்கிறேன்.

கணேஷின் தந்தையார் ஐசரி வேலன் அவர்கள் அரசியலில் பல பதவிகள் கிடைத்தும் கூட, கலையின் மீது இருந்த தீராத ஆர்வத்தால் வாழ்நாளின் கடைசி வரை நடித்தார்.

இங்கு பறவைகளை பற்றி பேசினார்கள். நான் மக்களுக்காக பறக்கிறேன், உடன் யார் வந்தாலும் சேர்ந்து பறப்பேன். நான் கோழிக்குஞ்சுகளுடன் வளர்ந்த கழுகு.

என் கொடியும் நானும் பறப்பது மக்களுக்காக தான். டெல்லி சென்றபோது, என்னை யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வீர்கள் என்று கேட்டார்கள்.

எங்கள் தமிழ் மரபணுவை மாற்ற முயற்சிக்காதவர்களுடன் தான் நான் கூட்டணி வைப்பேன்.

நான் அரசியலுக்கு முன்பே வந்திருக்கலாமே என்றும் கூட எனக்கு தோன்றியது. வந்திருந்தால் நானும் 25 வருட விழாவை கொண்டாடியிருப்பேன்.

இப்போது வயதாகிவிட்டது. எஞ்சிய நாட்களை இப்படி கழிக்கிக்கிறீர்களே என்கிறார்கள்.

எஞ்சிய நாட்கள் இனி மக்களுக்காக தான். 8 மாத குழந்தை தான், (மக்கள் நீதி மய்யம் கட்சி) ஆனால் நாங்கள் குழந்தை இல்லை என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

இனி அரசியலை மாற்றப்போகும் கூட்டம் இளைஞர் கூட்டம். அவர்களுடன் நான் தொடர்ந்து உரையாடி வருகிறேன், இனியும் தொடர்வேன்” என்றார் சிறப்பு விருந்தினர் உலக நாயகன் கமல்ஹாசன்.

விழாவில் ஐசரி கணேஷ் அவர்களின் தாயார் புஷ்பா ஐசரி வேலன், வேல்ஸ் பல்கலைக்கழக பதிவாளர் வீரமணி, ஆர்த்தி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு முக்கிய பிரபலங்கள், வேல்ஸ் குழும பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

I will spend Rest of life days for Tamil Peoples only says Kamalhassan

family day at vels university

அரசியலில் கமல்-ரஜினி இணைந்து பயணிக்க ஐசரி கணேஷ் வேண்டுகோள்

அரசியலில் கமல்-ரஜினி இணைந்து பயணிக்க ஐசரி கணேஷ் வேண்டுகோள்

Ishari Ganesh expressed his wish that Kamal and Rajini should join in Politicsவேல்ஸ் கல்விக்குழுமத்தின் நிறுவனர், வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் வேல்ஸ் குடும்ப விழாவாக கொண்டாடி வருகிறார்கள்.

இந்த ஆண்டின் வேல்ஸ் குடும்ப விழா சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.

விழாவில் உலக நாயகன் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். சேவியர் பிரிட்டோ கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

இவ்விழாவில் வேல்ஸ் கல்விக்குழுமத்தில் சிறப்பாக பணியாற்றி, அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவின் ஒரு அங்கமாக மரக்கன்றுகள் நடப்பட்டன.

முதலாவதாக வரவேற்று பேசிய வேல்ஸ் பல்கலைக்கழக துணைத்தலைவர் ஜோதிமுருகன்…

“ஐசரி கணேஷ் நினைத்திருந்தால் தன் குடும்ப அளவில் நட்டுமே தன் பிறந்த நாளை கொண்டாடி இருக்கலாம்.

ஆனால், எதையுமே வித்தியாசமாக, பிரமாண்டமாக செய்ய வேண்டும் என்ற முனைப்பு கொண்டவர். எந்த தொழிலை வேண்டுமானால் அவர் நடத்தியிருக்கலாம், ஆனால் பாரதியாரின் வார்த்தைகளின் படி, கல்விச்சேவை செய்ய வந்துள்ளார்.

25 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி தற்போது 25000 மாணவர்கள், 5000 ஆசிரியர்களாக உயர்ந்துள்ள தன் பல்கலைக்கழக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உடன் கொண்டாட வேண்டும் என்று விரும்பியதன் விளைவு தான் இந்த வேல்ஸ் குடும்ப விழா.

நான் 1973ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியின் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ஏஎஸ் பிரகாசம் அவர்கள் எம்ஜிஆர், சிவாஜி போல கமல்ஹாசன் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்று அப்போதே சொன்னார். அதை மெய்ப்பிக்கும் விதமாக 45 ஆண்டுகளாக உச்சத்தில் இருந்து வருகிறார் கமல்ஹாசன்.

திரையுலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்து வரும் கமல், சமூகத்தில் முடிசூடிய மன்னராக வர வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.

ஐசரி கணேஷ் அண்ணன் அவர்களை எப்போதுமே நான் பிரமாண்ட நாயகன் என்று தான் அழைப்பேன். அவரை பற்றி எல்லோருக்கும் தெரியும்.

ஒரு நண்பனாக எனக்கு தெரிவது, திருக்குறளில் வரும் “அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் என்ற குறளுக்கு ஏற்றார்போல வாழ்ந்து வருபவர் அண்ணன் டாக்டர் கணேஷ்.

இந்த 25 வருடங்களில் அவரின் அசுர வளர்ச்சி வியக்க வைக்கிறது. அவர் வாழ்ந்து, கடந்து வந்த பாதையை இன்றும் மனதில் வைத்திருக்கிறார். கமல் சாருடன் பிஸினஸ் கிளாஸ் விமானத்தில் இரண்டு முறை பயணிக்கும் வாய்ப்பும், நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.

அப்போது நீங்கள் அவ்வளவாக படிக்கவில்லையே, எப்படி இந்த அளவுக்கு அறிவாற்றலோடு இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு தினமும் புத்தகம் படிப்பேன் என்று சொன்னார்.

அதன் பிறகு தான் தெரிந்தது அவர் தீவிர வாசிப்பாளர் என்று. நிர்வாகம் சரியாக செயல்பட்டால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். நம் நாட்டில் எல்லாமே இருக்கிறது, இந்தியாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன். இந்தியாவில் இருப்பது தான் எனக்கு பெருமை.

கமல், ஐசரி கணேஷ் இருவருமே தனித்துவமாக சிந்திப்பவர்கள், தன்னம்பிக்கையோடு பருந்தை போல பறக்கக் கூடியவர்கள். அவர்களை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் என்றார் கௌரவ விருந்தினர் சேவியர் பிரிட்டோ.

வேல்ஸ் குடும்ப விழா ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வளாகத்தில் நடந்து வருகிறது. 4 நாட்களுக்கு முன்பு நானும், என் மனைவியும் பேசிக்கொண்டிருந்த போது…. கமல் சாரை அழைக்கலாம் என நினைத்தோம்.

அவரை கேட்டபோது உடனடியாக வருகிறேன் என ஒப்புக் கொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அக்டோபர் 7ஆம் தேதி ரெட் அலர்ட் இருக்கிறது, விழா எப்படி நடக்கும் என்று சிலர் கேட்டார்கள்.

மழை வந்தாலும் வேல்ஸ் குடும்ப விழா சீரும் சிறப்புமாக நடக்கும் என்று சொன்னோம்.

அதற்கு வழிவிட்ட வருண பகவானுக்கு நன்றி. கமல்ஹாசன் சாருக்கும் எனக்கும் ஒரு நல்ல உறவு நீடித்து வருகிறது. என் மீது அதிக அக்கறை கொண்டவர்.

என் தந்தை ஐசரி வேலன் குடும்ப விழாவுக்கு, சிங்கார வேலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சினிமாவையும் தாண்டி, நல்ல பல சமூக சேவைகளையும் செய்து வருகிறது.

அடுத்த கட்டத்தை நோக்கியும் அது போய்க் கொண்டிருக்கிறது.

தற்போது இரண்டு வண்ண பறவைகள் (கமல் மற்றும் ரஜினி) வேறு வேறு திசையில் பயணித்து வருகின்றன. அவை இணைந்து பயணித்தால் அது நிச்சயம் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக மாறும் என்று ஏற்புரை வழங்கினார் விழா நாயகன் ஐசரி கணேஷ்.

Ishari Ganesh expressed his wish that Kamal and Rajini should join in Politics

kamal at vels family day

 

Surf Excel & Ariel-யால் போக்க முடியாத அழுக்கு இருக்கு… : விஜய்சேதுபதி

Surf Excel & Ariel-யால் போக்க முடியாத அழுக்கு இருக்கு… : விஜய்சேதுபதி

Even Surf Excel Ariel wont remove Caste Stain in Society says Vijay Sethupathiபிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த படம் 96.

ஓரிரு தினங்களுக்கு முன் வெளியான இந்த அழகான காதல் காவியத்தை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வருகின்றனர்.

எனவே பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசுகையில்…

‘தமிழ் சினிமா மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. பரியேறும் பெருமாளின் வெற்றி கொண்டாடப்படுகிறது. சர்ப் எக்சல், ஏரியல் எது போட்டாலும் போகாத சாதி கறை உள்ளது.

சாதியின் தீவிரத்தையும், அதன் தீவிரவாதத்தையும் அழகியலுடன் சொல்லப்பட்ட படம் அது. அதை மக்களிடம் ஊடகம் நல்ல முறையில் கொண்டு சென்றது.

பிரேம்குமார் என்ற ஒரு படைப்பாளிக்கு சொந்தமான படைப்பு தான் 96. ஆனால் அதனை பார்க்கும் அனைவரும் தங்களுக்கு சொந்தமான படமாக நினைக்க வைத்திருக்கிறது.

விமர்சனம், திரைப்படம், மக்கள் ரசனை, பணியாற்றியவர்கள் என அனைவரும் ஒரு புள்ளியில் இணைந்த படம்.

நான் இந்த மேடையில் பேசியவர்களை கவனித்தபோது, பெரிய மனிதர்கள் சின்னப்புள்ளதனமாகவும், சிறியவர்கள் பெரிய மனிதர்கள் போன்றும் பேசினார்கள்.

சிறிய வயதிலேயே இவர்களுக்கு பக்குவம் இருக்கிறது. நான் என்னுடைய அனுபவத்தின் மூலமாக தான் இந்த உலகத்தினை பார்க்கிறேன். அதை அளவுக்கோலாக வைத்து தான் இதனை பேசுகிறேன்.

இங்கு திரையுலகில் ஏராளமான பிரச்சனைகள் இருக்கிறது. அதற்காக யாரும் யார்மீது குறைச் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. யாரோ ஒருவர் யாரோ ஒருவரைக் குறி வைத்து செய்யும் தவறு. இது உருவாக்கப்பட்டது.

இது எல்லாம் ஒரு வட்டத்தைப் போன்றது. வட்டத்தில் எது தொடக்கம்? எது இறுதி? என்று கண்டுபிடிப்பது கஷ்டமோ, அதேப்போல் இது போன்ற பிரச்சினைகளின் தொடக்கம் எது என்று கண்டுபிடிப்பதும் கஷ்டம்.

அதற்காக இவ்விசயம் தொடர்பாக யார் மீது பழிசுமத்தவிரும்பவில்லை. யாரும் இதற்கு பொறுப்பும் அல்ல. இதனை காப்பாற்ற முயற்சி செய்த லலித்குமார் முக்கியமான ஆள். தயாரிப்பாளர் நந்தகோபால் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்தேன். வலித்தது. ஆனால் சில சமயத்தில் வேறு வழியில்லை. ஏனெனில் இதெல்லாம் ஒரு குடும்பம்.

வாழ்க்கையில் இது போன்ற பிரச்சினைகள் வரும் போது நான் அடுத்தக்கட்டத்திற்கு போகப்போகிறேன். யார் மீது யார் எவ்வளவு பாரம் வைக்கப்போகிறார்களோ, யார் எவ்வளவு பாரம் தாங்குவார்களோ அவர்கள் தான் இன்னும் மேலே உயரமுடியும்.

என்னுடைய வாழ்க்கையில் பலமுறை இப்படி பல சம்பவங்களை கடந்து வந்திருக்கிறேன். இது என்னமோ என்னுடைய படக்குழுவினருக்கு மட்டும் நடந்த விசயமில்லை. காலங்காலமாக நடைபெற்று வந்துக்கொண்டிருக்கிறது.’ என்றார்.

Even Surf Excel Ariel wont remove Caste Stain in Society says Vijay Sethupathi

96 thanks giving meet photo

கலைஞர் இருந்திருந்தால் பரியேறும் பெருமாளை கொண்டாடியிருப்பார்.. : முக. ஸ்டாலின்

கலைஞர் இருந்திருந்தால் பரியேறும் பெருமாளை கொண்டாடியிருப்பார்.. : முக. ஸ்டாலின்

If Karunanidhi is alive he might have celebrated Pariyerum Perumal says MK Stalinசமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கண்டுகளித்தார்.

உடன் துர்காஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோரும் திரைப்படத்தை கண்டு களித்தனர்.

படம் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், மாரிசெல்வராஜையும் வெகுவாக பாராட்டினார்.

மேலும் அவர் கூறியதாவது…

“தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாக பாராட்டியிருப்பார். நிறைய வருடங்களுக்குப்பிறகு நான் பார்த்த சிறந்தபடம்.

திரைப்படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வாழ்த்தினார்.

If Karunanidhi is alive he might have celebrated Pariyerum Perumal says MK Stalin

dmk family with ranjith

*சர்கார்* விஜய்யுடன் மோதும் *திமிரு புடிச்சவன்* விஜய் ஆண்டனி

*சர்கார்* விஜய்யுடன் மோதும் *திமிரு புடிச்சவன்* விஜய் ஆண்டனி

Thimiru Pudichavan will be Clash with Sarkar on 2018 Diwaliஇந்தாண்டு தீபாவளி நவம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

அந்த தினத்தில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் ரிலீசாகிறது.

இதே தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சில படங்கள் தள்ளிப்போனது.

இந்நிலையில் கணேஷா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிரு புடிச்சவன் படம் வெளியீட்டை தீபாவளிக்கு உறுதி செய்துள்ளனர்.

இதில் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க, பாத்திமா விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.

Thimiru Pudichavan will be Clash with Sarkar on 2018 Diwali

5 ஸ்டார் ஹோட்டலுக்கான தேசிய சுற்றுலா விருதை வென்ற சென்னை ட்ரைடெண்ட்

5 ஸ்டார் ஹோட்டலுக்கான தேசிய சுற்றுலா விருதை வென்ற சென்னை ட்ரைடெண்ட்

Trident Hotel Chennai wins National Tourism Award for the Best 5-Star Category Hotel in Indiaஉலக சுற்றுலா தினத்தை நினைவுகூரும் சுற்றுலாத்துறை அமைச்சகம் , 2018 செப்டம்பர் 27 அன்று புது தில்லி விஜய பவனில் தேசிய சுற்றுலா விருதுகளை வழங்கியது சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜெ. அல்ஃபோன்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கினார்.

அந்த விழாவில் சென்னை ட்ரையண்ட், 5-ஸ்டார் பிரிவில் சிறந்த ஹோட்டலுக்கான தேசிய சுற்றுலா விருது “வென்றது.

“சிறந்தவற்றுள் சிறந்ததாக நங்கள் அடையாளம் காணப்பட்டதில் பெருமைப்படுகிறோம் . இந்த விருதை மதிப்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜெ. அல்பான்ஸில் கைகளில் இருந்து பெறுவதே பெரும் பாக்கியம் மற்றும் கௌரவம் எங்களுக்கு. “- திரு. மேனேஜர் ட்ரைடெண்ட் சென்னை.

ட்ரையன்ட், சென்னையில் இந்திய கலாச்சாரத்தின் அழகு மற்றும் சிறந்த விருந்தினருக்கு உறுதியான உறுதிப்பாடு – நமது விருந்தினர் அனுபவத்தின் ஒவ்வொரு விபரத்திலும்.

சென்னையிலுள்ள பொது மேலாளர் அமித் சைன்ச்சர்,கூறுகையில் “இந்த மதிப்புமிக்க விருதை நாங்கள் வென்றுள்ளோம் என்பதை எங்களால் விவரிக்க முடியாது, நாங்கள் இப்பொழுது முன்னணி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் எங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளோம், மேலும் நாங்கள் எங்களின் விருந்தினர்களுக்கு இனிமேலும் இதைவிடவும் சிறந்த உபசரிப்புகளையும் விருந்தினர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்வோம் என இந்த தருணத்தில் சொல்வதில் பெருமை கொள்கிறோம்.

ஸ்டைலான விருந்தினர் அறைகள் மற்றும் சாட், கேஸ்ட்ரோனமிகல் சிறப்பம்சம், ஒரு நேர்த்தியான ஸ்பா மற்றும் உடற்பயிற்சி மையம் மற்றும் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள உள்ள அற்புதமான நிகழ்வுகள் அறை ஆகியவற்றுக்கான வசதிகளை கொண்டது ஹோட்டல், ட்ரையண்ட், சென்னை.

சைன்ச்சர் மேலும் கூறியது , “இந்த அங்கீகாரம் எங்களுக்கும் எங்களது குழுவினருக்கும் மிகவும் பெருமையளிக்கிறது.

இதன் மூலம் இனிமேல் எமது விருந்தினர்கள் விடுமுறைக்கு அல்லது வியாபாரத்திற்காக வருகிறவர்கள் மறக்கமுடியாத மற்றும் மகிழ்ச்சியடையும் வகையில் எங்களது உபசரிப்பு இருக்கும் என உறுதிப்படுத்துகிறோம்.

இந்தியாவின் சுற்றுலா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகத்தால் ,தேசிய சுற்றுலா விருதுகள், இந்தியாவின் சுற்றுலா மற்றும் சுற்றுலாத் துறையின் மிகச்சிறந்த விருதுகள் மற்றும் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.

இந்த விருதுகளால் ஹோட்டல் மற்றும் சுற்றுலா நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் பங்களிப்பு அதிகப்பதால் இந்தியாவை ஒரு சுற்றுலா தலமாக மாறுவதில் பெரும் பங்களிக்கிறது

சென்னை ட்ரைடன்ட் பின்வரும் விருதுகளை பெற்றுள்ளது:

1. தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் சிறந்த ஐந்து ஸ்டார் ஹோட்டல்
2. MakemyTrip வாடிக்கையாளர் சாய்ஸ் விருது
3. ஸ்வாக் சர்வே விருது
4. BW ஹோட்டல் விருது

Trident Chennai wins National Tourism Award for the Best 5-Star Category Hotel in India

Trident Chennai wins National Tourism Award for the Best 5-Star Category Hotel in India

More Articles
Follows