கணக்கு காட்ட தயார்.. விஷால் ஆபிஸ் அக்கௌண்டன்ட் சவால்..; அடுத்த ட்விஸ்ட் இது.!

actor vishalநடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சென்னை, சாலிகிராமம் காவேரி ரங்கன் நகரில் உள்ளது.

இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் தொகையை, வருமான வரித்துறைக்கு விஷால் முறையாக செலுத்தவில்லை என்ற புகார் சில மாதங்களுக்கு முன்பு எழுந்தது.

இதனையடுத்து இந்த வழக்கில் விஷால் தரப்பில் 80 சதவீதம் வருமான வரித்துறைக்கு பணத்தைக் கட்டினர்.

இந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றதில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், இந்த நிறுவன மேலாளர் ஹரி கிருஷ்ணன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அந்த புகாரில் தங்களது நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா என்பவர் 45 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டார் என கூறியிருந்தார்.

இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் பணம் மோசடியில் ஈடுபட்டதாக விஷால் தரப்பு கூறியுள்ள குற்றச்சாட்டு பொய் என கணக்காளர் ரம்யா விளக்கம் அளித்துள்ளார்.

போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தனர்.

தான் பணியாற்றிய காலத்தில் உள்ள மொத்த கணக்கு வழக்குகளையும் சமர்ப்பிக்கத் தயார் எனவும் ரம்யா கூறியுள்ளார்.

இந்த வழக்கில் இது புதிய ட்விஸ்ட் ஆக பார்க்கப்படுகிறது.

எனவே யார் கூறுவது உண்மை? என்ற குழப்பம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

Overall Rating : Not available

Latest Post