ரசிகர்களை சந்திக்கப் போகிறேன்.. ரஜினியே சொல்லிடாரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏப்ரல் 2ஆம் தேதி ரசிகர்களை ரஜினி சந்திக்க போகிறார் என்ற செய்தி வெளியானது.

ஆனால் இதற்கு ரஜினி தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இச்சந்திப்பு நிச்சயம் நடைபெறும் என நம் தளத்தில் நாங்கள் பதிவிட்ட செய்தியை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.

இந்நிலையில் இச்சந்திப்பை சற்றுமுன் சூப்பர் ஸ்டார் ரஜினியே உறுதி செய்துவிட்டார்.

மலேசிய பிரதமர் நஜிப் ரசாக்கை சந்தித்துவிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசிய ரஜினி இதை தெரிவித்தார்.

ரசிகர்களை சந்தித்து நீண்ட நாட்களாக விட்டது. எனவே ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் அவர்களை சந்தித்து போட்டோ எடுக்கவிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மலேசியா பிரதமரிடம் தூதர் பொறுப்பை ஏற்க மறுப்பு தெரிவித்தாரா ரஜினி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியா சுற்றுப்பயணம் வந்துள்ள மலேசிய பிரதமர் நஜிம் ரசாக், இங்குள்ள பிரபலங்களை சந்தித்து வருகிறார்.

நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஆளுநரை சந்தித்தார்.

இந்நிலையில் இன்று சற்றுமுன் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு கபாலி சந்திப்பின் போது ஏற்பட்ட நட்பு ரீதியான சந்திப்பு என கூறப்பட்டது.

ஆனால் இச்சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்துள்ளதால் மற்ற விவரங்களும் ஆலோசிப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதில் மலேசியா சுற்றுலா துறை சார்பாக மலாக்க நகரின் தூதராக ரஜினியை பதவியேற்க பிரதமர் கேட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தூதர் பதவியை ரஜினிகாந்த் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

‘எவராலும் தடுக்க முடியாது. ஏறி மிதிப்போம்..’ விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சென்னை தி.நகரில் உள்ள புதிய நடிகர் சங்க கட்டிடத்துக்கான பூமிபூஜை சற்று முன் தொடங்கியது

இந்த கட்டிடம் ரூ.26 கோடி செலவில் 4 மாடிகளுடன் கட்டப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கட்டிடத்தில் நடிப்புக்கான பயிற்சிக் கூடம், ஜிம், தியேட்டர் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது

இந்த விழாவில் பங்கேற்று வரும் விஷால் கூறியதாவது…

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிற்பகலில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் வருகிறார்கள்:

இந்த புதிய கட்டடத்தால் நலிந்த கலைஞர்கள் பயன்பெறுவார்கள். இந்த கட்டிடம் அடுத்த வருடம் 2018 செப்டம்பர் மாதம் திறக்கப்பட உள்ளது.

இந்த கட்டிடம் கட்ட நிறைய நிதி தேவைப்படுகிறது. அதற்கு நானும் (விஷால்) கார்த்தியும் இணைந்து ரூ.10 கோடி நிதி அளிக்கிறோம்.சிலர் பிரச்சினைகள் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

யாராலும் எங்களை தடுக்க முடியாது. அப்படி வந்தால் ஏறி மிதித்து கொண்டு போய்க்கிட்டே இருப்பேன்..’ என்றார் விஷால்.

விஷால் பேச்சை மட்டும் கேட்க நாங்க செக்குமாடுகள் அல்ல.. பொன்வண்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அடிக்கல் நாட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் சங்கத் தலைவர் நாசர், விஷால், பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இந்த விழாவில் பொன்வண்ணன் பேசியதாவது…

இது நாள் வரை நடிகர் சங்கம் கட்டிடம். வெறும் கட்டிடமாகவே இருந்து வந்தது.
ஆனால் இனி வருமானம் ஈட்டும் கட்டிடமாக இது மாற்றப்படும்.

18 மாதங்களில் இந்த புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்படும். அதாவது 2018ல் செப்டம்பர் மாதம் இதன் திறப்பு விழா நடைபெறும்.

விஷால் மட்டுமே நடிகர் சங்கம் அல்ல. இங்கு உள்ள அனைத்து விஷயங்களிலும் எல்லா நிர்வாகிகளும் கலந்து ஆலோசிக்கப்படும்.

விஷால் மட்டுமே சொல்வதை கேட்க நாங்கள் செக்குமாடுகள் அல்ல என்று தெரிவித்தார் பொன்வண்ணன்.

மோடியை சந்திக்கும் முன் ரஜினியை சந்தித்தார் மலேசிய பிரதமர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இந்தியா வந்துள்ளார் மலேசியா பிரதமர் நஜிப் ரசாக்.

நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பழனிச்சாமி மற்றும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோரை சந்தித்துள்ளார்.

இந்நிலையில் சற்றுமுன் நடிகர் ரஜினிகாந்த், அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார்.

கபாலி படத்தின் சூட்டிங் மலேசியாவில் நடைபெற்ற போது, உண்டான நட்பின் அடிப்படையில் இந்த சந்திப்பு நிகந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவிருக்கிறார் மலேசியா பிரதமர்.

Malaysian Prime Minister Najib Razak met Rajinikanth is his Poes Garden

தல-தளபதியே வந்தாலும் அசராத ரஜினி-மோகன்லால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா உலகில் வெற்றிகரமாக 200வது நாள், 100வது நாள், வெற்றி விழா என்று செய்திகளை பார்ப்பது மிக அரிதாக விட்டது.

ஒரு படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஓடினால் பெரிய விஷயம் என்றாகிவிட்டது.

இதனையும் கடந்து, தல தளபதி உள்ளிட்ட நடிகர்களின் படங்கள் 50 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

இவர்களுக்கு தமிழகத்தில் பெரிய ரசிகர் வட்டம் உள்ளது நாம் அறிந்ததே.

இருந்தபோதிலும், இவர்களுக்கு சவால் விடும் வகையில் கிட்டதட்ட 40 ஆண்டுகளாக சினிமாவில் கோலோச்சி கொண்டிருக்கிறார்கள் சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த் மற்றும் மோகன்லால்.

ரஜினியின் கபாலி திரைப்படம் மதுரையில் உள்ள மணி இம்பாலா தியேட்டரில் அண்மையில் 250 நாட்களை கடந்துள்ளது.

அதுபோல் மோகன்லால் நடித்து மலையாள சினிமாவில் வசூல் வேட்டை செய்த புலிமுருகன் படம் 200 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

கபாலி படத்தின் ரிலீஸ் கேரள உரிமையை பெற்ற மோகன்லால், அதற்காக தன் புலிமுருகன் படத்தை ஒத்தி வைத்தது இங்கே கவனிக்கத்தக்கது.

Kabali and Pulimurugan movies making records in Box Office

More Articles
Follows