தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இப்பட புரமோஷன் பணிகளில் ஒரு பகுதியாக ஆர்.ஜே.பாலாஜி ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஆர்ஜே பாலாஜி அளித்துள்ள பதிலில்… ‘நான் சூப்பர் ஸ்டாரோட ரொம்ப ரொம்ப பெரிய ரசிகன். சின்ன வயதில் நான் பள்ளியில் படிக்கும் போது என் தாத்தா ‘ரஜினி ஒரு நல்ல மனிதர்’ என்று சொன்னார்.
அது அப்படியே என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
ரஜினி ஒரு அற்புதமான மனிதர். ஒரு சூப்பர்மேன். ‘தளபதி’ முதல் ‘தர்பார்’ வரை அவரை பற்றி நிறைய மெமரிஸ் இருக்கு.
சில வருடங்களுக்கு முன்னர் அவர் அரசியலுக்கு வருவது குறித்து பேட்டி கொடுத்திருந்தேன். அந்த பேட்டியை நான் பின்னர் பார்க்கும்போது கஷ்டமாக இருந்தது.
நான் அப்போது அப்படி பேசியிருக்க கூடாது.
அவர் நன்றாக வாழ வேண்டும். அவர் நினைக்கும் எல்லா காரியமும் கைகூட வேண்டுமென நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்’ என ஆர்ஜே பாலாஜி கேள்விக்கு பதிலளித்து வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
I should not spoken like that about Super Star Rajinikanth
