தந்தையால் உயர்ந்தவர்கள் விஜய்-சூர்யா; அஜித் அப்படியில்லை… பிரபல நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் என்றால் ரஜினி-கமலுக்கு அடுத்து விஜய், அஜித், சூர்யா, விக்ரமை சொல்லலாம்.

இதில் விஜய் மற்றும் சூர்யா இருவரும் சினிமா பின்னணி கொண்டர்வர்கள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் பிரபல நடிகை கஸ்தூரியிடம் ஒரு ரசிகர் உங்களுக்கு விஜய், சூர்யா, அஜித் இதில் யாரை பிடிக்கும்? என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவர் அளித்துள்ள பதிலில் கூறியதாவது… இந்த மூவரில் அஜித் தான் பிடிக்கும். மற்ற இருவரும் தங்களது அப்பா மூலம் பிரபலம் ஆனவர்கள். அஜித்தான் உண்மையான சர்வைவா என பதிலளித்துள்ளார்.

#askKasthuri out of these 3, #Ajith. Others had fathers to promote them. Ajith is pure “SURVIVA”.

— kasturi shankar (@KasthuriShankar) August 28, 2017

ஆன்லைன் சினிமாவுக்கு ஆப்பு; அமெரிக்கா அதிபருக்கு விஷால் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருட்டு விசிடி மற்றும் ஆன்லைனில் வெளியாகும் புதிய படங்களால் தமிழ் சினிமாவின் லாபம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.

இதன்படி ‘பைரஸி’ பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாரிப்பாளர் சங்கம் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது.

ஆன்லைனின் படங்கள் வெளியாக அமெரிக்க சர்வர்களே முக்கிய காரணமாக உள்ளதால் அதனை தடுக்க அமெரிக்க அதிபரிடம் கோரிக்கை வைக்க இருக்கிறார்களாம்.

எனவே 1 லட்சம் கையெழுத்துகளை பெற்று, சட்டப்பூர்வமற்ற முறையில் இயங்கும் சர்வர்களை முடக்க கோரிக்கை வைக்க உள்ளனர்.

அதன்படி செப்டம்பர் இறுதிக்குள் 1 லட்சம் கையெழுத்துகளைப் பெற முடிவு செய்துள்ளனர்.

தானா சேர்ந்த கூட்டம் பட பாடல் லீக்கானது; விக்னேஷ்சிவன் அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் ஒரு பாடல் சமூக வலைதளங்களில் லீக்கானது.

இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ் சிவன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது-..

தானா சேர்ந்த கூட்டம் படத்தை திரையரங்கில் ஜாலியாக பார்க்கலாம், இதுபோன்ற விஷயங்களை ஆதரிக்காதீர்கள்.

இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அதனை முடித்துவிட்டு அனைத்தையும் ரிலீஸ் தேதியை அறிவிப்போம்” என பதிவிட்டுள்ளார்.

Vignesh ShivN‏Verified account @VigneshShivN
Guys ! Let’s see and enjoy every bit of #TSK in theatres ! Please Don’t share & entertain these clips that r circulating ! #AnbanaFans

And about the #TSKUpdate .. We have a little bit of shootin left ! Once that’s done .. We’ll fix on the dates for everythin! Till then

வெங்கட்பிரபுக்கு போட்டியாக அருண்ராஜா காமராஜின் மேட்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரிக்கெட் ரசிகர்களையும் சினிமா ரசிகர்களையும் ஒன்றிணைத்து வெற்றி கண்டவர் இயக்குனர் வெங்கட்பிரபு.

கிரிக்கெட்டை மையப்படுத்தி இவர் இயக்கிய சென்னை 28 படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றி பெற்றது.

ஆனால் இவரின் படத்தில் ஆண்கள் மட்டுமே கிரிக்கெட் ஆடினர்.

இந்நிலையில், பாடல் ஆசிரியரும் பாடகரும் நடிகருமான அருண் ராஜா காமராஜ் ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

இப்படத்தில் பெண்கள் ஆடும் கிரிக்கெட்டை மையப்படுத்தி கதைக்களத்தை அமைத்து இருக்கிறாராம்.

இது வெங்கட்பிரபுவின் சென்னை 28 படத்தின் 3ஆம் பாகத்திற்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இன்று இணையத்தையே அதிரவைத்த மெர்சல்-வேலைக்காரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மெர்சல். அதுபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேலைக்காரன்.

இதில் வேலைக்காரன் செப்டம்பர் இறுதியிலும், மெர்சல் படம் அக்டோபரிலும் ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்நிலையில் ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘நீதானே…’ மற்றும் ‘மெர்சல் அரசன்…’ ஆகிய இரண்டு பாடல்களின் வரிகள் அடங்கிய வீடியோவை இன்று வெளியானது.

சற்று நேரத்தில் ‘வேலைக்காரன்’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘கருத்தவனெல்லாம் கலீஜாம்…’ என்ற பாடல் வரிகள் வீடியோவும் வெளியானது.

இந்த மூன்றும் மாலைமுதல் இரவு வரை இணையத்தை அதிர வைத்து வருகிறது.

இரு தரப்பு ரசிகர்களும் அதிகளவில் பகிர்ந்து டிரெண்டாக்கி வருகின்றனர்.

Mersal and Velaikkaran songs goes viral on same day

நெகட்டிவ் விமர்சனங்களை உடைத்து 120 கோடியை தாண்டியது விவேகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் நடிப்பில் உருவான விவேகம் உலகம் முழுக்க கிட்டத்தட்ட 3250 திரையரங்குகளில் வெளியானது.

சென்னையில் மட்டும் முதல்நாளில் இதற்கு முந்தைய கபாலி சாதனையை முறியடித்துள்ளது.

சென்னை பாக்ஸ் ஆபீஸில் வேகமாக ரூ. 6 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

5 நாட்களில் ரூ. 6.31 கோடியை சென்னையில் மட்டும் வசூலித்துள்ளது.

படம் வெளியாகி 5 நாட்களை கடந்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 60 கோடியை நெருங்கியுள்ளது.

உலகளவில் ரூ. 125 கோடியை கடந்து வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

விவேகம் ஓடும் தியேட்டர்களில் இன்னும் கூட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vivegam movie collected nearly Rs 125C world wide

More Articles
Follows