பிக்பாஸில் ஓவியா அளவுக்கு காயத்ரியை பிடிக்கும்… சீனுராமசாமி

seenu ramasamyகமல்ஹாசன் தொகுத்து வழங்கியதாலோ என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தின் ஹாட் டாப்பிக் ஆனது.

இதை பார்க்காதவர்களோ அல்லது பேசாதவர்களோ இல்லை என சொல்லி விடலாம்.

இந்நிகழ்ச்சி பற்றி ரசிகர்களை போல திரையுலக பிரபலங்களும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிகழ்ச்சி முடியும் தருவாளை எட்டியுள்ள நிலையில் இதுகுறித்து இயக்குனர் சீனுராமசாமி தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது…

`இன்றைய தமிழ் சினிமாவில் சிவாஜி ஸ்தானத்தில் இருப்பவர் கமல்.

ஒரு நல்ல கலைஞனிடம் எந்த வேலையைச் சொன்னாலும் அதில் அவரின் கலைத்திறமை மின்னும் என்பதற்கு சாட்சி கமல்தான்.

அவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது அருமை.

இதில் பங்கேற்றவர்களில் எனக்குப் பிடித்த போட்டியாளர்கள் ஓவியா, வையாபுரி, காயத்ரி ஆகியோரை கூறுவேன்.

ஓவியா அளவுக்கு காயத்ரியையும் பிடித்திருந்தது.

காயத்ரி, மனதில் உள்ளதை மறைக்காமல், பொட்டில் அடித்ததுபோல பேசினார்.

ஓவியா கவித்துவமான காவியம். அவர்களைப் பார்ப்பது அபூர்வம்.

இருவரைப் போல உள்ள பெண்கள் இந்தச் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதை இவர்கள் உணர செய்தார்கள்.

சினேகன் அல்லது கணேஷ் வெங்கட்ராம் ஆகியோரில் ஒருவர் பிக்பாஸ் வின்னர் ஆகுவார் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Overall Rating : Not available

Latest Post