#40YearsOfMeena : I am very disappointed with You.. ‘கண்ணழகி’ மீனாவிடம் ‘அண்ணாத்த’ ரஜினி

#40YearsOfMeena : I am very disappointed with You.. ‘கண்ணழகி’ மீனாவிடம் ‘அண்ணாத்த’ ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவில் கண்ணழகி என்றாலே அது நடிகை மீனா தான்.

இவரது முதல் திரைப்படம் 1981-ம் ஆண்டில் வெளியான நடிகர் சிவாஜி கணேசனின் “நெஞ்சங்கள்” படமாகும்.

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்தார் மீனா.

ரஜினிகாந்த் உடன் “அன்புள்ள ரஜினிகாந்த்” படத்தில் நடித்தார்.

ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பின்னாளில் ரஜினிக்கே ஜோடியாக எஜமான், வீரா, முத்து படங்களில் நடித்தார்.

தற்போது 25 வருடங்களுக்கு பிறகும் ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார்.

45 வயதாகும் மீனா திரைவாழ்க்கையில் 40 ஆண்டுகளை கடந்துள்ளார்.

இது தொடர்பாக சில கருத்துகளை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் மீனா.

“1981 ஆம் ஆண்டில், லெஜண்ட் # சிவாஜி அப்பாவால் ஒரு குழந்தை கலைஞராக அறிமுகப்படுத்தப்பட்டு, இறுதியில் முன்னணி பெண்மணியாக நடித்து, கடந்த 40 ஆண்டுகளாக இந்தத் துறையில் எனது சொந்த அடையாளத்தை உருவாக்கி
உள்ளேன்.

என் வாழ்க்கையில் ஆசீர்வாதத்திற்கு குறைவே இல்லை. என்னை நம்பி, அழகான வாய்ப்புகளை வழங்கிய மக்களுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.

எனது திறமையை அங்கீகரித்து, எனது கடின உழைப்பைப் பாராட்டியதற்கு நன்றி, நன்றி, நன்றி”என்று உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார் இந்த கண்ணழகி.

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒன்றை முன்னணி பத்திரிகை பேட்டியில் தெரிவித்துள்ளார் மீனா.

‘அண்ணாத்த’ சூட்டிங் ஸ்பாட்டில்… I am very disappointed with You Meena என ரஜினி சொன்னாராம்.

என்னாச்சு சார்.? ஏன் இப்படி சொல்றீங்க என மீனா கேட்டாராம்.

எல்லாருமே மாறிட்டாங்க.. ஆனா நீங்க மட்டும் ‘வீரா’ படத்துல பார்த்த மாதிரியே இருக்கீங்க என்றாராம் ரஜினி.

I am very disappointed with You Meena says Rajini at Annaatthe spot

ஷாரூக்கான் நடிக்கும் படத்தை எப்போது இயக்குவார் அட்லி..?

ஷாரூக்கான் நடிக்கும் படத்தை எப்போது இயக்குவார் அட்லி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sharukh khan atleeராஜா ராணி என்ற ஒரே படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய்யின் ஆஸ்தான இயக்குனராகி விட்டார் அட்லி.

விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்தார்.

அதன் பின்னர் விஜய் தன் பட இயக்குனர்களை மாற்றினாலும் அட்லி வேறு எந்த படங்களையும் இயக்கவில்லை.

கடந்த 2019-ம் ஆண்டில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அட்லீ சந்திப்பு நடைபெற்றது.

அப்போதே இவர்கள் புதிய படத்திற்காக இணைவதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் வேறு எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் இவர்கள் இணைவது உறுதி என தகவல்கள் வந்துள்ளன.

தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘பதான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ஷாரூக்கான்.

இந்த படத்தை முடித்துவிட்டு கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இயக்குனர் அட்லீயுடன் இணைவார் ஷாரூக்கான் என கூறப்படுகிறது.

இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் வரை காத்திருப்போம்.

Shah Rukh Khan and Atlee project to kick start soon?

எங்க வீட்டிலேயே 70 கிலோ போதை மருந்து வச்சிருக்கேன்.; யுவன் மனைவி ஸஃப்ரூன் நிஸார் ஓபன் டாக்

எங்க வீட்டிலேயே 70 கிலோ போதை மருந்து வச்சிருக்கேன்.; யுவன் மனைவி ஸஃப்ரூன் நிஸார் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yuvan shankar raja wife zafroon nisaதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா.

இவரின் திருமண வாழ்க்கை விவகாரத்தில் முடியவே இஸ்லாம் மதத்திற்கு மாறி சில ஆண்டுகளுக்கு முன்பு ஸஃப்ரூன் நிஸார் என்பவரை மணந்தார்

இவர்களுக்கு ஸியா என்ற பெண் குழந்தையும் இருக்கிறாள்.

இந்த நிலையில் முதன் முறையாக யுவனின் யு1 ரெக்கார்ட்ஸுக்கு இண்டர்வியூ கொடுத்துள்ளார் ஸஃப்ரூன் நிஸார்.

அப்போது போதைப்பொருள் வைத்திருப்பதற்கு கட்டணம் செலுத்துகிறீர்களா? என அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார் ஸஃப்ரூன்.

அந்த பதிலில்.. “யுவனை தானே நீங்க DRUGன்னு சொல்றீங்க..

ஆமா எங்க வீட்டிலேயே 70 கிலோ போதை மருந்து வச்சிருக்கேன்.

வெளியே எங்க போனாலும், என்னோட ட்ரக், விட்டமின்ஸ், நியூட்ரியண்ட்ஸ் எல்லாத்தையும் கூடவே எடுத்துட்டு போறேன்” என பதிலளித்துள்ளார் ஸஃப்ரூன் நிஸார்.

Yuvan Shankar Raja’s wife Zafroon Nizar’s bold answers in first ever interview

‘மிஷன் இம்பாஸிபிள் 7’ படத்தில் டாம் குரூஸ் உடன் இணையும் பிரபாஸ்.?

‘மிஷன் இம்பாஸிபிள் 7’ படத்தில் டாம் குரூஸ் உடன் இணையும் பிரபாஸ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabhas Tom Cruise‘ஆதிபுருஷ்’ மற்றும் ‘சலார்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார் நடிகர் பிரபாஸ்.

கொரோனா ஊரடங்கால் ‘சலார்’ படத்தில் இன்னும் ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாம்.

இந்த நிலையில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடிப்பில், வெளியாகியுள்ள ‘மிஷன் இம்பாஸிபிள்’ படத்தில் 6 பாகங்கள் உலக அளவில் சூப்பர்ஹிட்டானது.

தற்போது இந்த ‘மிஷன் இம்பாஸிபிள்’ 7ஆம் பாகம் தயாராகி வருகிறது.

இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல், சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. (நாம் அப்படி ஒரு தவறான பொய் செய்தி போடவில்லை)

இந்த ‘மிஷன் இம்பாஸிபிள்’ குறித்து நெட்டிசன் ஒருவர் படத்தின் இயக்குனரிடம் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளிக்கையில்…

பிரபாஸ் திறமையான நடிகர்.. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் தொடர்பாக அவரை நான் சந்தித்ததே இல்லை’ என பட இயக்குனர் கிறிஸ்டோபர் மெக்கோரி கூறியுள்ளார்.

Actor Prabhas to join Mission Impossible 7 ?

ஆசிரமம் தொடங்கினார் லிங்குசாமி..; உதயநிதி & கீர்த்தி சுரேஷ் நேரில் வாழ்த்து

ஆசிரமம் தொடங்கினார் லிங்குசாமி..; உதயநிதி & கீர்த்தி சுரேஷ் நேரில் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. பல உயிர்கள் தினம் இறப்பதை கண்கூடாக பார்த்து வருகிறோம்.

கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றன.

அரசுக்கு உதவிடும் வகையில் தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் தமிழக அரசுக்கு கொரோனா நிவாரண நிதியை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தயாரிப்பாளரும் பிரபல இயக்குனருமான லிங்குசாமி, கொரோனா நோயாளிகளுக்காக ஓர் ஆசிரமத்தைத் தொடங்கி உள்ளார்.

மணப்பாக்கத்தில் தொடங்கப்பட்ட இந்த ஆசிரமத்தின் தொடக்க விழாவில், உதயநிதி ஸ்டாலின், தா.மோ. அன்பரசன் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவரை பாராட்டினர்.

CIPACA_Official உடன் இணைந்து ஹார்ட்ஃபுல்_நெஸ் ஏற்பாடு செய்த அம்கம்லேஷ்தாஜியின் ஆசிர்வாதத்துடன் இந்த ஆசிரமம் தொடங்கப்பட்டுள்ளது என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்தார்.

Director Lingusamy opens Ashram for covid patients

lingusamy

கொரோனா தேவி என்னை போல இருப்பது எனக்கு கிடைச்ச ஆசி.. அது மூடநம்பிக்கை இல்லை.; வனிதா ஓபன் டாக்

கொரோனா தேவி என்னை போல இருப்பது எனக்கு கிடைச்ச ஆசி.. அது மூடநம்பிக்கை இல்லை.; வனிதா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசுக்கு ஒரு உருவம் கொடுத்து கோவை மாவட்டத்தில் கொரோனா தேவி கோயிலை உருவாக்கியுள்ளனர்.

அதை வணங்கி வழிப்பட்டால் கொரோனா நோய் நம்மை தாக்காது எனவும் புதிய முறையை அங்குள்ளவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து ஒருபக்கம் கொரோனா தேவி சிலையையும் மற்றொரு பக்கம் வனிதா விஜயகுமாரின் படத்தையும் இணைத்து மீம்ஸ்கள் பரவ ஆரம்பித்தன.

இந்த சிலை வனிதா முகச்சாயலில் இருப்பதால் இப்படியான மீம்ஸ்கள் உருவானது.

இதுகுறித்து முன்னணி ஊடகத்திற்கு நடிகை வனிதா விஜயகுமார் பேட்டியளித்துள்ளார்.

அவரின் பேட்டியில்…

“கொரோனா தேவியோடு என் முகத்தை பொருத்தி வந்த மீம்ஸ்களைப் பார்த்தவுடன் நானும் என் குழந்தைகளும் சிரித்தே விட்டோம்.

நான் மூக்குத்தி போடுவேன். கொரோனா தேவி அம்மனுக்கும் மூக்குத்தி போட்டதால் என்னைபோல் தெரிகிறது என நினைக்கிறேன்.

கொரோனா தேவி அம்மனை பார்க்கும்போது பலருக்கும் என்னை பார்க்கிற மாதிரி தோன்றியிருப்பது ஆச்சரியமான விஷயம் தான்.

இது எனக்கு கிடைத்த ஆசி. இந்த கருத்தை பாசிட்டிவாக எடுத்துக்கொள்கிறேன்.

நமக்கு அம்மை வந்தால் நம் ஐதீகத்தின்படி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று நம்பிக்கையோடு கூழ் ஊற்றுவார்கள்.

இப்போதுவரை மக்கள் அதை செய்து வருகின்றனர்.

இதனை மூட நம்பிக்கை என்று சொல்ல முடியாது. அதே போலத்தான் இதுவும்..

கொரோனா சூழலில் மக்கள் நம்பிக்கையோடு கொரோனா தேவி சிலையை அமைத்துள்ளனர்.”

இவ்வாறு வனிதா பேசியுள்ளார்.

Vanitha Vijayakumar responds netizens comparison with corona devi with her

corona devi

More Articles
Follows