எல்லாருக்கும் பிடித்த *மேற்குத் தொடர்ச்சி மலை* படம் விஜய்சேதுபதிக்கே பிடிக்கலையாம்

I am not satisfied with Merku Thodarchi Malai movie says Producer Vijay Sethupathiஇளையராஜா இசையில் நடிகர் விஜய்சேதுபதி தயாரிப்பில் உருவாகி அனைவரது பாராட்டையும் பெற்ற படம் மேற்குத் தொடர்ச்சி மலை.

லெனின்பாரதி இயக்கிய இப்படம் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்திருந்தார்.

இதில் ஆண்டனி, காயத்ரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்ட நடிகர் விஜய்சேதுபதி பேசும்போது…

இன்று உங்கள் அனைவரின் பாராட்டையும் இந்த மேற்குத் தொடர்ச்சி மலை பெற்றுள்ளது.

ஆனால் இந்த படத்தை முதலில் பார்த்த எனக்கு திருப்தி இல்லை. நான் என்னை அறிவாளியாக சினிமாவை முழுவதுமாக தெரிந்துக் கொண்டவனாக நினைத்து கொண்டுவிட்டேன்.

ஆனால் தற்போதுதான் என் முடிவு தவறு என தெரிகிறது. உங்களின் விமர்சனம் என்னுடைய பார்வையை மாற்றியுள்ளது.

இந்த படத்தை தயாரிக்க 2013ஆம் ஆண்டிலேயே என்னிடம் கேட்டார் லெனின் பாரதி. நான் இந்த படத்தில் நடிக்கட்டுமா? என்று கூட அவரிடம் கேட்டேன்.

அந்த சமயத்தில் நான் நடிக்கும் படங்களில் என் சம்பளம் 25லட்சம்தான். எனவே அப்போது முடியாது என்று கூறி வேறு தயாரிப்பாளரை அனுக சொல்லி விட்டேன்.

ஆனால் அவர் இத்தனை வருடங்கள் காத்திருந்தார்.

இந்த பெருமை அனைத்தும் இயக்குநர் லெனின் பாரதியை தான் சேரும். படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை.

இது வியாபார உலகம், யாரையும் நாம் குறை சொல்ல தேவையில்லை. ஒரு பொருளுக்கு டிமாண்ட் இருந்தால் தான் வியாபாரிகள் தேடி வருவார்கள். தற்போது பத்திரிகை விமர்சனங்கள் மூலம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ டிமாண்ட் உள்ள பொருளாக மாறியிருக்கிறது. இனி வியாபாரிகள் தேடி வருவார்கள்” என்று பேசினார் விஜய்சேதுபதி.

I am not satisfied with Merku Thodarchi Malai movie says Producer Vijay Sethupathi

Overall Rating : Not available

Latest Post