நானே மாஸ்டர் ஹீரோ.; எங்க அப்பா தான் மாஸ்டர்..- விஜய்சேதுபதி

நானே மாஸ்டர் ஹீரோ.; எங்க அப்பா தான் மாஸ்டர்..- விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

i am master movie hero my father is master says Vijay Sethupathiவிஜய்யின் ‘மாஸ்டர்’ பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது…

விஜய் ஒரு மாஸ் ஹீரோ என்பது எல்லாருக்கும் தெரியும். அவருடன் நடிப்பது ஒரு நல்ல அனுபவம்.

பட போஸ்டர்களில் அவர் பேர் பக்கத்துல என் பேரும் இருக்கட்டும் சொல்லியிருக்காரு.

ஒரு முறை நான் விஜய் சார் கிட்ட கேட்டேன். ஏன் சார்? நீங்க அவ்வளவு பேச மாட்டுறீங்க கேட்டேன். நான் பேசுவதை விட மற்றவர்கள் சொல்வதை கேட்க ஆசைப்படுகிறேன் என்றார். இதுபோல அவரிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

மாஸ்டர் பட போட்டோ சூட்டிங்கில்தான் நான் முதன்முறையாக சந்தித்தோம். அப்போவே அவர் எனக்கு ஒரு நல்ல கம்பர்ட்டாக இருக்கும்மாறு நடந்துக் கொண்டார்.

அவருக்கு க்ளோஸ் அப் ஷாட் வைங்க. ரொம்ப அழகா வெட்கப்படுவாருன்னு சொன்னேன்.

இந்த படத்தோட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ என் ரசிகர்களுக்கு என்ட்ரி பாஸ் கிடைக்காம பண்ணிட்டாரு.

அவரே நிறைய எடுத்துக்கிட்டாரு. ஆனா அவரு நல்ல மனுசன். ஆனா சம்பளம்தான் சரியான டைமுக்கு தர மாட்டாரு.

ஆனா 96 படம் ரிலீசுக்கு உதவி செஞ்சாரு.

டைரக்டர் லோகேஷ் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையே மாஸ் ஆக இருக்கும். அதையே ஒரு படமாக எடுக்கலாம்.

அவரு என்னைய டா போட்டு கூப்பிட சொன்னாரு. அதான் அப்படியே கூப்புறேன். நாங்க 2013ல் சந்தித்து கொண்டோம்.

இந்த மாஸ்டர் படத்துல நான்தான் ஹீரோ. எப்படின்னா நான் விஜய்க்கு வில்லன்னா அவருக்கு எனக்கு வில்லன். அப்படின்னா நான்தான் ஹீரோ.

இது டபுள் ஹீரோ சப்ஜெக்ட்.

எனக்கு எங்க அப்பாதான் மாஸ்டர். அவர அடிச்சிக்க ஆளே கிடையாது. நான் சரக்கு அடிச்சிட்டு அவர் போட்டோவ பாத்து திட்டுவேன்.

நான் நல்லா இருக்கும்போது அவரு பாக்கமா போய்ட்டாரு.

விஜய் நல்ல மனுசன். நான் மட்டும் சொல்லல.. எல்லாருமே சொல்றாங்க” என பேசினார் விஜய்சேதுபதி.

i am master movie hero my father is master says Vijay Sethupathi

படைகள் இருந்தாலும் தளபதி வேனும்ல.. ECRல ரெய்டு போகாதீங்க… – தீனா

படைகள் இருந்தாலும் தளபதி வேனும்ல.. ECRல ரெய்டு போகாதீங்க… – தீனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay tv fame Dhina slams IT Raid at Actor Vijays homeவிஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதில் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த இசை விழா நிகழ்ச்சியில் டிவி தொகுப்பாளர், கைதி பட நடிகர் தீனா பேசியதாவது…

ஒருத்தனுக்கு கீழ எவ்வளவுதான் படைகள் இருந்தாலும் அதை வழி நடத்த ஒரு தளபதி வேண்டும். உங்க கிட்ட பைக் இருந்தால் அடிக்கடி ஈசிஆர்.ல ரெய்டு போகாதீங்க என மறைமுகமாக விஜய் வீட்டுக்கு சென்ற வருமான வரித்துறையினரை தாக்கி பேசினார் தீனா.

மேலும் என் அம்மா அப்பா நான் மேடை ஏற வேண்டும் என நினைத்தனர். இதை விட பெரிய மேடை எனக்கு என்ன கிடைத்து விட போகிறது? என பேசினார் தீனா.

Vijay tv fame Dhina slams IT Raid at Actor Vijays home

மாஸ்டர் தான் என் முதல் படம்.. இசை விழாவில் சாந்தனு கொடுத்த ஷாக்

மாஸ்டர் தான் என் முதல் படம்.. இசை விழாவில் சாந்தனு கொடுத்த ஷாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master my debut movie says Actor Shanthanu லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய, விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அருஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாஸ்டர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகியுள்ளது.

இதில் குட்டி கதை மற்றும் வாத்தி ரைடு பாடல்கள் எல்லா தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

வாத்தி கம்மிங் பாடல் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

இதில் விஜய், அவரின் அப்பா எஸ்ஏசி, அம்மா ஷோபா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

இவ்விழாவில் மேடையேறிய சாந்தனு பேசியதாவது…

நான் என்னை அறிமுகப்படுத்தி கொள்கிறேன். மாஸ்டர் தான் என் முதல் படம்.

திரையுலகில் 10 வருடங்களை கடந்து விட்டாலும் வெற்றியை விட நிறைய அவமானங்களையும் தோல்விகளையும் சந்தித்து விட்டேன்.

என உருக்கமாக விஜய் ரசிகராக பேசினார் சாந்தனு.

Master my debut movie says Actor Shanthanu

மாஸ்டர் இசை விழா; விஜய் சாருக்கு நடனம் அமைப்பது ஒரு வெறி… – சதீஷ்

மாஸ்டர் இசை விழா; விஜய் சாருக்கு நடனம் அமைப்பது ஒரு வெறி… – சதீஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay sir ku Choreograph pannanum oru veri says Sathish லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய, விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அருஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாஸ்டர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகியுள்ளது.

மற்ற பாடல்கள் வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

நாயகி மாளவிகா பேசியதாவது…

இந்தியாவின் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டாருடன் ஒர்க் செய்வது போன்ற ஒரு பீல் வரவில்லை. ஏனென்றால் அவ்வளவு எளிமையான மனிதராக விஜய் சார் இருந்தார்.

இதுவரை நான் பணிபுரிந்த நடிகர்களில் விஜய் சார் ஒரு எளிமையான மனிதர். அதுபோல் டைரக்டர் லோகேஷ் ஒரு கூலான ஆள். என்று பேசினார் மாஸ்டர் நாயகி மாளவிகா.

நடன இயக்குனர் சதீஷ் பேசியதாவது…

விக்னேஷ் சிவன் எழுதிய ஒரு பாடலுக்கு நான் நடனம் அமைத்துள்ளேன்.

விஜய் சாருக்கு நடனம் அமைக்கனும் ஒரு வெறி இருந்துச்சி. இப்போ அது நிறைவேறிச்சிடுச்சி” என பேசினார் சதீஷ்.

நடிகர் அர்ஜீன் தாஸ் பேசியதாவது…

எனக்கு இதுநாள் வரை என் பெற்றோர்கள் தான் பண உதவி செய்து வந்தனர். இந்த படம் ஒப்புக் கொண்ட பிறகுதான் நான் அவர்களுக்கு ஒரு கிப்ட் வாங்கி கொடுத்தேன்.

இந்த பட சூட்டிங்குக்கு போனதே என் கனவு நனவாகியதாக கருதுகிறேன்.

விஜய் சாரை நேரில் சந்தித்து வணக்கம் சொல்வது… விஜய்சேதுபதியுடம் முத்தம் வாங்கியது… லோகேஷ் சாரிடம் பேசியது… இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்” என பேசினார் அர்ஜீன் தாஸ்.

Vijay sir ku Choreograph pannanum oru veri says Sathish

‘கன்னி மாடம்’ பட அதிரடி வெற்றியுடன் ‘உறியடி’ விஜயகுமாருடன் இணையும் போஸ் வெங்கட்

‘கன்னி மாடம்’ பட அதிரடி வெற்றியுடன் ‘உறியடி’ விஜயகுமாருடன் இணையும் போஸ் வெங்கட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Bose Venkat team up with Uriyadi Vijayakumar மூவ் ஆன் பிலிம்ஸ்’ சார்பாக எம் பி மகேந்திரன், பி பாலகுமார் தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ புகழ் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில், ‘உறியடி’ விஜயகுமார், பசுபதி நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகிறது.

விமர்சனரீதியாக அனைவரின் வெகுவான பாராட்டுகளையும் வென்ற வெற்றிப்படமான ‘கன்னிமாடம்’ திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் போஸ் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படம், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளைப் புறந்தள்ளி, நீருக்கும் ஊருக்கும் போருக்கும் உள்ள தொடர்புகளை, சமுதாய கண்ணோட்டத்தோடு, நகைச்சுவையும், சுவராஸ்யமும் கலந்து உறவுகளோடும், உணர்வுகளோடும் பிணைந்த ஒரு ஜனரஞ்சகமான கதைகளத்தைக் கொண்டிருக்கிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில், ‘உறியடி’ புகழ் விஜயகுமார், பசுபதி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘வெண்ணிலா கபடி குழு’ ஆகிய படங்களுக்கு கதாசிரியராக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாஸ்கர் சக்தி, இப்படத்திற்கு திரைக்கதை-வசனம் எழுதுகிறார்.

இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவில், ஜியான் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், ஹரி சாய் இசையமைக்க, பாடல்களை விவேகா எழுதுகிறார். கலைக்கு சிவசங்கர் பொறுப்பேற்க, அதிரடிக் காட்சிகளை தினேஷ் சுப்பாராயன் அமைக்கிறார்.

மூவ் ஆன் பிலிம்ஸ்’ தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் கதை எழுதி இயக்கும் இந்த புதிய படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:

‘உறியடி’ விஜயகுமார், பசுபதி மற்றும் பலர்
தயாரிப்பு: மூவ் ஆன் பிலிம்ஸ் சார்பாக எம் பி மகேந்திரன், பி பாலகுமார்
கதை, இயக்கம்: போஸ் வெங்கட்
திரைக்கதை, வசனம்: பாஸ்கர் சக்தி
ஒளிப்பதிவு: இனியன் ஜே.ஹாரிஸ்
படத்தொகுப்பு: ஜியான் ஸ்ரீகாந்த்
கலை: சிவசங்கர்
இசை: ஹரி சாய்
பாடல்கள்: விவேகா
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

Director Bose Venkat team up with Uriyadi Vijayakumar

இனிமே வழக்கிலிருந்து ரெஸ்ட் எடுக்கலாமா..? நடிகர் விஜய்க்கு ஆதரவாக குஷ்பூ

இனிமே வழக்கிலிருந்து ரெஸ்ட் எடுக்கலாமா..? நடிகர் விஜய்க்கு ஆதரவாக குஷ்பூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay khushbuவிஜய் நடித்த பிகில் & மாஸ்டர் பட சம்பளம் தொடர்பாக அந்த பட தயாரிப்பாளர்கள் & விஜய்யிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் விஜய்யின் சம்பளம் & வருமானவரி சோதனை தொடர்பாகவும் நடிகை குஷ்பு, அவரது ட்விட்டர் பக்கத்தில்…

“விசாரணை முடிந்தது; நடிகர் விஜயின் சம்பள விபரங்களை வருமானவரித்துறை வெளியிட்டது.

#பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, #மாஸ்டர் திரைப்படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாகப் பெற்றுள்ளார்.

2 திரைப்பட வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளர். Can we rest the case now ?”

எனப் பதிவிட்டுள்ளார்.

More Articles
Follows