தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் ஜூன் 3ல் திரையரங்குகளில் வெளியான படம் ‘விக்ரம்’.
இதில் சூர்யா, விஜய்சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடித்தனர்.
இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.
இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை பத்திரிகையாளர்களுடன் படக்குழுவினர் இன்று சென்னையில் பகிர்ந்து கொண்டனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
நடிகர் கமல்ஹாசன் பேசுகையில்…
“விக்ரம் -2′ படத்திற்கு நாடு தழுவிய பாராட்டு கிடைத்துள்ளது.
மிக்க மகிழ்ச்சி. நன்றி என்பதை தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.
இதற்கு முன்பும் நிறைய வெற்றி கிடைத்துள்ளது. இருப்பினும் இது இந்திய படமொன்று வெற்றி கொள்வதாக தான் பார்க்கிறேன்.
அதற்காக தற்போது கிடைத்துவிட்டது போதும் என்று நாங்கள் நினைக்கவில்லை.
ரஜினியுடன் இணைந்து நடிக்கத் தயார். அது நடக்கலாம்.”
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
