நான் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் ரசிகன் – அர்மேனிய இயக்குநர் சரிக் !!!

நான் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் ரசிகன் – அர்மேனிய இயக்குநர் சரிக் !!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mithun chakraborthy and sarikஅர்மேனிய இயக்குநர் சரிக் ஆண்ட்ரியாசின் , இவர் இயக்கிய அமெரிக்கன் எனும் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகத்துக்குள் 2014 நுழைந்தார். தற்போது இவர் ரஷ்ய மொழியில் இயக்கி உள்ள கார்டியன்ஸ் – தி சூப்பர் ஹீரோஸ் திரைப்படம் ஒரே சமயத்தில் உலகமெங்கும் 50 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இயக்குநர் சரிக்குக்கு இந்தியாவின் புகழ் பெற்ற நடிகைகளான ஐஸ்வர்யா ராய் , பிரியங்கா சோப்ரா ஆகியோரை நன்றாக தெரியுமாம். அதுமட்டுமல்ல இயக்குநர் சரிக் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மிகப்பெரிய ரசிகராம் , வாய்ப்பு அமைந்தால் அவருடன் பணியாற்ற ஆசை என்று கூறுகிறார். இந்த வருடம் நடைபெறவுள்ள ஆஸ்கர் விருதுகளின் விருது பட்டியலில் சிறந்த துணை நடிகருக்கான பிரிவில் “ லையன் “ திரைப்படத்துக்காக தேர்வாகி உள்ள தேவ் படேலை இவருக்கு மிகவும் பிடிக்குமாம்.

நான் மிதுன் சக்ரவர்த்தி நடித்த நிறைய படங்களை பார்த்துள்ளேன். அவருடைய தோற்றம் , நடிப்பு மற்றும் சோவியத் யூனியனில் அவருக்கு இருந்த பிரபலம் என அனைத்தும் என்னை கவர்ந்தது. மிதுன் அவர்களின் டிஸ்கோ டான்சரில் இடம் பெற்ற “ ஜிம்மி ஜிம்மி “ என்ற சார்ட் பஸ்டர் பாடல் சோவியத் யூனியனில் மிக பிரபலம்.

ராஜ் கபூர் – நர்கிஸ் நடிப்பில் வெளிவந்து உலக அளவில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்ற “ அவாரா “ திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்ற இயக்குநர் சரிக் , தனக்கு வரும் புதிய வாய்ப்புகளை ஏற்றுகொள்ள தயார் என்றும். இந்தியாவில் படம் இயக்கவும் , இந்தியாவை பற்றிய படத்தை இயக்கவும் தனக்கு ஆசை என்றார்.

32 வயதாகும் இயக்குநர் சரிக் The Pregnant , Moms and That was the Men’s world போன்ற தரமான திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் சுசீந்திரனுக்காக தயாரிப்பாளரான “அறம் செய்து பழகு“ தயாரிப்பாளர் ஆண்டனி !!!

இயக்குநர் சுசீந்திரனுக்காக தயாரிப்பாளரான “அறம் செய்து பழகு“ தயாரிப்பாளர் ஆண்டனி !!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director suseenthiran and producer antonyஇயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “அறம் செய்து பழகு “ இப்படத்தில் கதையின் நாயகர்களாக “ விக்ராந்த் “ “ சந்தீப் கிஷன் “ ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. அன்னை பிலிம் ஃபாக்டரி வழங்கும் இப்படத்தை ஆண்டனி தயாரிக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பிரபலாமான தயாரிப்பு நிறுவனங்களான சி டிவி , ஏ.வி.எம் , ஸ்டுடியோ கிரீன் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களில் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்து முதலில் சி டிவி நிறுவனத்தில் பணியாற்றிய இவர். அதன் பின்னர் 2000 ஆண்டில் இருந்து ஏ.வி.ஏ.எம் நிறுவனத்தில் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்ற துவங்கினார். 2000 ஆண்டில் இருந்து 2008 ஆண்டு வரை ஏ.வி.எம் நிறுவனத்தில் தயாரிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களிலும் இவர் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றினார்.

அதன் பின் 2008ஆம் ஆண்டில் இருந்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்ற துவங்கினார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “ நான் மகான் அல்ல “ திரைப்படத்தில் பணியாற்றிய போது இயக்குநர் சுசீந்திரன் உடன் இவருக்கு நல்ல நட்பு ஏற்ப்பட்டது. அதை தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரனுடன் நிறைய படங்களில் பணியாற்றிய பின்னர். இயக்குநர் சுசீந்திரன் விரும்பியதால் தயாரிப்பு மேற்பார்வையாளர் ஆண்டனி இப்போது “அறம் செய்து பழகு “ திரைப்படத்தின் தயாரிப்பாளராகியுள்ளார்.

முதல் படமே தயாரிப்பாளரான உங்களுக்கு இயக்குநர் சுசீந்திரன் போன்ற மிக சிறந்த இயக்குநருடன் அமைந்துள்ளது அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மற்றும் “அறம் செய்து பழகு “ திரைப்படம் என்ன மாதிரியான ஒரு படமாக இருக்கும் ?? என்று நாம் கேட்டபோது “ ஆம் , இது இயக்குநர் சுசீந்திரன் எனக்கு கொடுத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு என்று தான் நான் சொல்வேன் , என்னென்றால் என்னை இந்த “அறம் செய்து பழகு “ திரைப்படத்தை தயாரிக்க சொன்னதே இயக்குநர் சுசீந்திரன் தான். என்னை தயாரிப்பாளராக்கிய இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி.

“ அறம் செய்து பழகு “ திரைப்படம் இயக்குநர் சுசீந்திரனின் மாபெரும் வெற்றி படங்களான “ நான் மகான் அல்ல “ , “ பாண்டிய நாடு “ போன்ற ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்றார் தயாரிப்பாளர் ஆண்டனி.

பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்

பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Snehaஎன்னுடைய துறையில் பணியாற்றும் என் சக கலைஞர்களான பாவனா மற்றும் வரலக்ஷ்மி ஆகியோருக்கு நடந்த சம்பவங்கள், எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்து இருக்கின்றது. இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாய் இருப்பேன் என்பதைனை உறுதிப்படுத்தி கொள்ள விரும்புகின்றேன். எந்தவித பயமுமின்றி அவர்களுக்கு நடந்ததை வெளிப்படையாக தெரிவித்த அவர்களின் தைரியத்தை பாராட்டுகின்றேன்.

இத்தகைய பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், நம் சமூதாயத்தில் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. பாலியல் துஷ்பிரயோகம், பலாத்காரம் என நாட்டின் ஒவ்வொரு மூலைகளிலும் நடக்கும் கொடுமைகளை அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் பெரும்பாலான பாதிக்கப்பட்ட பெண்கள் அதனை வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். அதற்கு முக்கிய காரணம், எங்கே இந்த சமுதாயம் இத்தகைய செயல்களுக்கு பாதிக்கப்பட்ட பெண்களையே காரணம் காட்டி விடுமோ என்று பயந்து தான். ‘தார்மீக போதனையாளர்கள்’ என்று கூறி கொண்டு வலம் வரும் ஒரு சிலர், பெண்கள் இவ்வாறு தான் உடை அணிய வேண்டும், இந்த இடங்களுக்கு மட்டும் தான் செல்ல வேண்டும் என கோட்பாடுகள் விதித்து, அதன் அடிப்படையில் தான் பெண்களின் குணங்களை யூகிக்கின்றனர். தங்களுக்கு என்ன நடக்கின்றது என்பதை கூட தெரிந்து கொள்ள இயலாத இந்த பச்சிளம் குழந்தைகளிடம், இத்தகைய தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடுபவர்களை அவர்கள் என்ன செய்ய போகிறார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இப்படி 3 வயது, 7 வயது குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு, குப்பை தொட்டியில் தூக்கி வீச படுவதை நாம் வேடிக்கை பார்த்து கொண்டே இருக்க போகிறோம்? ஒன்னும் தெரியாத இந்த பச்சிளம் குழந்தைகளின் இத்தகைய புகைப்படங்களை பார்க்கும் பொழுது, எனது நெஞ்சம் சுக்கு நூறாக உடைந்துவிட்டது. ஒரு தாயாக அந்த குழந்தைகளின் பெற்றோர்களின் வலி என்ன என்பதனை என்னால் உணர முடிகின்றது.

‘மதர் இந்தியா’ என்று பெண்மையை போற்றும் நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெண்களின் பெயர்களை கொண்ட நதிகள் ஓடும் நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆண் தெய்வங்களுக்கு சமமாக பெண் தெய்வங்களை வணங்க கூடிய நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தன்னுடைய உயிரில் சரி பாதியை தன்னுடைய துணைவிக்கு கடவுள் கொடுத்த வரலாற்று சம்பவங்களை நாம் கேள்வி பட்டிருக்கின்றோம். தன் கணவருக்கு வழங்கப்பட்ட தவறான தீர்ப்பை எதிர்த்து ஒரு ஊரையே எரித்த பெண்மணியின் வாழ்க்கையை பற்றி நாம் புராண கதைகளில் படித்து இருக்கின்றோம். அப்படி பெண்மையை போற்றிய நாட்டில், இப்போது ஏதோ சரி இல்லாமல் ஆகி விட்டது. பெண்கள் மதிப்புடனும், மரியாதையுடனும் வாழ்ந்த காலங்கள் யாவும் அழிந்து விட்டது. இது நம் நாட்டிற்கு ஏற்பட்ட மிக பெரிய அவமானம்.

தற்போது அந்த நிலைமையை மாற்ற வேண்டிய நேரமும், கடமையும் நமக்கு இருக்கின்றது. இத்தகைய மிருகத்தனமான செய்லகளுக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும் – பெண்களுக்கு தங்களின் மரியாதயை திரும்ப பெற்று தர நாம் குரல் கொடுக்க வேண்டும் – முன்பை போல பெண்கள் பாதுகாப்பாக இருக்க நாம் குரல் கொடுக்க வேண்டும் – இவை அனைத்துக்கும் மேலாக, இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை சட்டம் வழங்க வேண்டும் என்பதற்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். இனி பெண் குழந்தைகளை தவறான எண்ணத்தோடு நெருங்கும் ஒவ்வொரு ஆணுக்கும், இந்த தண்டைனை அவர்களின் மனதில் பயத்தை விதைக்க வேண்டும். நிர்பயா, நந்தினி, ரித்திகா, ஹாசினி போன்றவர்களுக்கு ஏற்பட்ட கோர சம்பவங்கள் இனியும் நடக்க கூடாது. எங்களுக்கு நீதி வேண்டும். எங்களுக்கு மரியாதை வேண்டும்.

இந்த தருணத்தில் நான் ஒரு சிறிய முயற்சியை எடுக்கின்றேன். ஒரு அம்மாவாக, என்னுடைய மகனுக்கு பெண்களை மதிக்கவும், அவர்களை மரியாதையுடன் நடத்தவும் அவனுக்கு சொல்லி தருவேன் என உறுதி மொழி எடுக்கின்றேன்.

கனத்த இதயத்துடன்

சினேகா (ஒரு பெண்)

‘எமன்’ திரைப்படம் மூலம் மேலும் உயரத்தை எட்டுவார் விஜய் ஆண்டனி” என்கிறார் நடிகர் தியாகராஜன்

‘எமன்’ திரைப்படம் மூலம் மேலும் உயரத்தை எட்டுவார் விஜய் ஆண்டனி” என்கிறார் நடிகர் தியாகராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay antony‘நான்’, ‘சலீம்’, ‘இந்தியா – பாகிஸ்தான்’, தமிழ் – தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அமோக வெற்றி பெற்ற ‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’ என தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை மட்டுமே கொடுத்து வரும் விஜய் ஆண்டனியின் நடிப்பில், அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் ‘எமன்’. நடிகர் தியாகராஜன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த ‘எமன்’ திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று வெளியாகின்றது.

விஜய் ஆண்டனி – மியா ஜார்ஜ் நடிப்பில், ஜீவா சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘எமன்’ திரைப்படத்தை ‘லைக்கா புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ராஜு மகாலிங்கம் மற்றும் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்’ சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

“சில வருட கால இடைவேளைக்கு பிறகு நடிக்க முடிவு செய்த நான், என்னுடைய கதாபாத்திரங்களை மிக கவனமாக தேர்வு செய்து வருகிறேன். ஒரு சில கதைகளை கேட்ட அடுத்த கணமே, நாம் அதில் நடித்தாக வேண்டும் என்று நமக்கு தோன்றும். அப்படி எனக்கு கேட்ட மாத்திரத்திலேயே அவ்வாறு என் மனதில் தோன்றிய திரைப்படம் தான் ‘எமன்’. எதிர்பாராத திருப்புமுனைகளை உள்ளடக்கி, முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘எமன்’ திரைப்படத்தில் நான் ஒரு முக்கியமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். நல்ல வலுவான கதையம்சமத்தோடு ஜீவா சங்கர் உருவாக்கி இருக்கும் இந்த ‘எமன்’ திரைப்படம் மூலம், நிச்சயமாக விஜய் ஆண்டனி மேலும் உயரத்தை எட்டுவார்” என்று தனக்குரிய அந்த தனித்துவமான புன்னகையோடு கூறி விடை பெறுகிறார் நடிகர் தியாகராஜன்.

‘பண்டிகை’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது

‘பண்டிகை’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pandigai movie stillsநிழல் உலக தாதாக்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பண்டிகை’. ‘டி டைம் டாக்கீஸ்’ சார்பில் விஜயலக்ஷ்மி தயாரித்து, பெரோஸ் இயக்கி இருக்கும் இந்த ‘பண்டிகை’ படத்தில், கிருஷ்ணா – ஆனந்தி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘பண்டிகை’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று, சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில், காலை 9 மணிக்கு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் ஆர் எச் விக்ரம், ஒளிப்பதிவாளர் அரவிந்த், படத்தொகுப்பாளர் பிரபாகர் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை ‘பண்டிகை’ திரைப்படம் உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு. இந்த படத்தின் ‘நெகட்டிவ் உரிமையை’ வாங்கி இருக்கும் ‘ஆரா சினிமாஸ்’ மகேஷ் கோவிந்தராஜ், ‘பண்டிகை’ படத்தை வருகின்ற மார்ச் 9 ஆம் தேதி அன்று உலகமெங்கும் வெளியிடுகிறார்.

“எங்கள் பண்டிகையில் கலந்து கொள்ள, மதிப்பிற்குரிய இயக்குநர்கள், நடிகர் – நடிகைகள், தயாரிப்பாளர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரை அன்போடு அழைக்கின்றேன். இவர்கள் முன்னிலையில் எங்கள் ‘பண்டிகை’ படத்தின் பாடல்களை வெளியிடுவதில் நான் பெரும் மகிழ்ச்சி கொள்கின்றேன்” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் பெரோஸ்.⁠⁠⁠⁠

மாநகரம் திரைப்படத்தை பற்றி பிரபல படத்தொகுப்பாளர் பிரவீன் K.L !

மாநகரம் திரைப்படத்தை பற்றி பிரபல படத்தொகுப்பாளர் பிரவீன் K.L !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maanagaram movie stillsநேற்று எனக்கு மாநகரம் திரைப்படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இளம் குழு ஒன்று மிக தெளிவான , தரமான ஒரு படத்தை உருவாக்கி உள்ளது. படம் ஆரம்பமாகும் முதல் பிரேமில் இருந்து இறுதி வரை படம் நம்மை கட்டி போடுகின்றது என்பது தான் உண்மை. இப்படத்தை பொறுத்தவரை கதையும் – படத்தை உருவாக்கியுள்ள விதமும் நம்மை வியக்கவைக்கிறது.ஒரு எமோஷனலான காட்சியை பேப்பரில் எழுதிவிட்டு அதை படமாக எடுப்பது மிகவும் கடினமான ஒன்று. அதை இயக்குநர் லோகேஷ் அவருடைய பாணியில் சரியாக செய்துள்ளார்.

படத்திருக்கு ஒளிப்பதிவு , பின்னணி இசை மற்றும் படத்தொகுப்பு மிகப்பெரிய அளவில் பலம் சேர்க்கிறது. நிச்சயம் இவை அனைத்தும் காலம் கடந்து பேசப்படும். இப்படத்தில் சார்லி சார் , சந்தீப் , ஸ்ரீ , ரெஜினா , முனிஸ்காந்த் ஆகியோர் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு , எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோரை இப்படத்தை தயாரிக்க முடிவெடுத்ததற்காகவே நாம் பாராட்டியாக வேண்டும்.

மாயா , ஜோக்கர் , காஷ்மோரா , இப்போது மாநகரம். பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை தென்னகத்தின் UTV Spot Boy என்று நம்மை பாராட்ட வைக்கிறது. இப்படத்தின் மொத்த குழுவையும் நான் இந்த மிகச்சிறந்த முயற்சிக்காக நான் பாராட்டுகிறேன். சினமாவை நேசிக்கும் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் மாநகரம். இந்த படத்தை நிச்சயம் பார்த்து ரசியுங்கள். மாநகரம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். வருகிற மார்ச் 10 – ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது

More Articles
Follows