பாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின் குரேஷி

பாலிவுட்டிற்கு செல்லும் தென்னிந்திய பெண் அம்ரின் குரேஷி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செகுந்திராபாத்தில் உள்ள சிவன் சிவானி பப்ளிக் பள்ளியில் படித்த ஹைதராபாத் பெண், அம்ரின் குரேஷி இரண்டு பெரிய இந்தி படங்களில் நடித்ததன் மூலம் சினிமாத் துறையில் பரபரப்பாக பேசப்பட்டவர். இந்த இரண்டு இந்தி படங்களும் ‘சுபிஸ்டா மாவா’ மற்றும் ‘ஜூலாயின்’ என்ற பெயரில் தெலுங்கில் மறு உருவாக்கத்தில் வெளியானது. கவர்ச்சி பாத்திரமாக இருந்தாலும் சரி, பாரம்பரிய பாத்திரமாக இருந்தாலும் சரி, அம்ரின் மிகவும் பொருந்தி விடுகிறார். ஆகையால், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். அம்ரின் தனது இந்தி திரைப்படங்கள் நிறைவடைவதற்கு முன்பே கிளவுட் நைன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பெரிய வாய்ப்பை பெற்றுவிட்டார்.

இந்தியில் தன்னை சிறந்த நடிகையாக நிரூபித்து, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெற்றிகரமான கதாநாயகியாக மாறுவதே அம்ரின் குறிக்கோளாக வைத்துள்ளார். ரேகா, ஹேமமலினி, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, வாகீதா ரெஹ்மான், தபு போன்ற கதாநாயகிகள் தென்னிந்திய சினிமா மூலம் திரைப்படங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் பாலிவுட்டில் நுழைந்தனர். அவர்கள் தங்களுக்கென்று சிறந்த இடத்தைப் பெற்றுள்ளனர். அதுமட்டுமில்லாமல், நட்சத்திர நாயகிகள் என்ற அந்தஸ்தோடு பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர். பல பாலிவுட் நட்சத்திரங்கள் தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. தற்போது, இதற்கு மாறாக ஒரு தென்னிந்தியாவை சேர்ந்த பெண் பாலிவுட்டில் நுழைந்துவிட்டார் என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘புஸ்தகாம்லோ கொன்னி பேஜெலு காணவில்லை’ படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் சஜித் குரேஷியின் மகள், ராயல் பிலிம் விநியோகஸ்தர் உரிமையாளர் எம் ஐ குரேஷியின் பேத்தி அம்ரின் குரேஷி இரண்டு பாலிவுட் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்.

தெலுங்கில் மாபெரும் வெற்றிபெற்ற படங்களான ‘சுபிஸ்டா மாவா’ மற்றும் ‘ஜூலாய்’ இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த இரண்டு படங்களிலும் அம்ரின் குரேஷி ஹீரோயினாக நடிக்கிறார். ‘பேட் பாய்’ படத்தை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி ‘சுபிஸ்டா மாவா’வின் மறு உருவாக்கத்தை இயக்குகிறார். சஜித் குரேஷி தனது இன்பாக்ஸ் பிக்சர்ஸ் பேனரில் இப்படத்தை தயாரிக்கிறார். கோடைகால சிறப்பு படமாக இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன், நட்சத்திர இயக்குநர் திரிவிக்ரமின் ‘ஜூலாய்’ டோனி டிசோசாவின் இயக்கத்தில் மறு உருவாக்கம் செய்யப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் ஆரம்பமாகும். கதாநாயகிகள் வடக்கிலிருந்து தெற்கிற்கு வரும் பருவத்தில், தெற்கிலிருந்து செல்லும் அம்ரின் குரேஷி பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள். விரைவில் அவர் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் பரபரப்பாகி விடுவார் என்று நம்புகிறோம். அம்ரின் குரேஷிக்கு வாழ்த்துக்கள்.

Hyderabad Girl Amrin Qureshi Starring In Two Big Bollywood Films

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜுரம்.? ரசிகர்கள் அதிர்ச்சி… பிஆர்ஓ விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜுரம்.? ரசிகர்கள் அதிர்ச்சி… பிஆர்ஓ விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth with pro riazகொரோனா வைரஸ் பரவல் பிரச்சினையால் அண்ணாத்த சூட்டிங்கில் கலந்துக் கொள்ளாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் ரஜினிகாந்த்.

மேலும் தான் தொடங்கவுள்ள அரசியல் கட்சி பணிகளையும் ஒத்தி வைத்துள்ளார்.

அண்மையில் கூட தீபாவளியன்று தன் போயஸ் தோட்ட வீட்டில் இருந்த படியே ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் ரஜினிகாந்த்.

கொரோனா பிரச்னையால் தனது உடல்நலனில் அதிக அக்கறை செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிக்கு தற்போது காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் உலா வந்தன.

இதனால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அவரது மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கூறியதாவது… “யாரோ விஷமிகள் வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர்.

அவர் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

Shocking rumour about Rajinikanth’s health clarified

ஒருவழியாக ‘ஈஸ்வரன்’ பட பாம்பு காட்சியை ஏற்றுக் கொண்ட வனத்துறை

ஒருவழியாக ‘ஈஸ்வரன்’ பட பாம்பு காட்சியை ஏற்றுக் கொண்ட வனத்துறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

eswaran snake shootingசுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் ‘ஈஸ்வரன்’ பட வீடியோ காட்சி ஒன்று லீக் ஆனது.

இதில் பாம்பு ஒன்றை சிலம்பரசன் பிடித்து இருப்பது போன்ற வீடியோ காட்சியை பார்த்து, அதில் ஒர்ஜினல் பாம்பை வைத்தே படமாக்கப்பட்டதாக வனத்துறைக்கு சந்தேகம் எழ, வன இலாகா அதிகாரிகள் படக் குழுவினருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.

இயக்குநர் சுசீந்திரன், வனதுறை அதிகாரி கிளமண்ட் எடிசன் அவர்களிடம் நேரில் சென்று, சிலம்பரசன் நடிக்கும் “ஈஸ்வரன்” படத்தில் ரப்பர் பாம்புவை வைத்து, எவ்வளவு நுணுக்கமாக தத்ரூபமாக படமாக்கினோம் என்பதை, கிராபிக்ஸ் செய்யப்பட்ட வீடியோ காட்சிகளுடன் வன அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார்.

இது தொடர்பாக வன துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் அவர்களிடம் கேட்டபோது…

“பொதுவாக விலங்கினங்களை வைத்து படமாக்குவதற்கு வன துறையினரிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.

‘ஈஸ்வரன்’ படக்குழுவினர், ரப்பர் பாம்பை வைத்து கம்பியூட்டர் கிராபிக்ஸ் துணையுடன் ( CG ) எப்படியெல்லாம் சினிமாடிக் டிரிக் செய்தோம் என்று விளக்கினார்கள்.

அதை பார்த்த பின்பு தான் அந்த காட்சியில் இடம் பெற்றது நிஜ பாம்பு இல்லை என்று புரிந்தது… உறுதியானது.

இந்த காட்சி எடுத்தது குறித்து எங்களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்று கருத்து தெரிவித்தார் அதிகாரி.

இப்படத்தை, மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரிக்கிறார். ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் ‘D’ கம்பெனி சார்பில் K.V.துரை தயாரித்துக் கொடுக்கிறார்.

Animal welfare board accepts Eeswaran team CGI explanations

ஜெயலலிதா தோழி சசிகலா பயோபிக்..; தேர்தலுக்கு முன்பு சர்ச்சையை உருவாக்கும் ராம் கோபால் வர்மா

ஜெயலலிதா தோழி சசிகலா பயோபிக்..; தேர்தலுக்கு முன்பு சர்ச்சையை உருவாக்கும் ராம் கோபால் வர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பம்பாய் நிழலுலகத்தை பற்றிய, தாவூத் இப்ராஹிமைப் பற்றிய படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா.

அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை பேசி வருகிறார்.

வருடத்துக்குக் குறைந்தது இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

கடுமையான மோசமான விமர்சனங்கள் வந்தாலும் அதையே தனக்கு சாதகமாக்கி வருகிறார்.

சமீபத்தில் ‘க்ளைமேக்ஸ்’, ‘நேக்கட்’, ‘த்ரில்லர்’ என தொடர்ந்து ஆபாசம் நிறைந்த படங்களை இயக்கினார்.

இதற்காக ஒரு ஓடிடி தளத்தையும் உருவாக்கினார்.

தற்போது ‘சசிகலா’ என்கிற பெயரில் திரைபப்டம் எடுக்கபோவதாக அறிவித்துள்ளார்.

தன் ட்விட்டர் பக்கத்தில்…

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

“சசிகலா என்கிற திரைப்படத்தை இயக்கவுள்ளேன். எஸ் என்கிற பெண்ணும், ஈ என்கிற ஆணும் ஒரு தலைவரை என்ன செய்தார்கள் என்பது பற்றிய கதை இது.

தமிழக தேர்தலுக்கு முன் திரைப்படம் வெளியாகும். அந்தத் தலைவியின் பயோபிக் வெளியாகும் அதே நாளில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

லக்‌ஷ்மியின் என் டி ஆர் திரைப்படத்தைத் தயாரித்த ராகேஷ் ரெட்டி தான் சசிகலாவை தயாரிக்கிறார்.

இந்தத் திரைப்படம் ஜே, எஸ் மற்றும் ஈ பி எஸ் ஆகியோருக்கு இடையே இருந்த உறவைப் பற்றியக் கதை” என்று குறிப்பிட்டுள்ளார்.

Ram Gopal Varma announces biopic on Sasikala

sasikala biopic

தனது அடுத்த படத்திற்கும் விவகாரமான தலைப்பு வைத்து ஹீரோவாகும் ‘இரண்டாம் குத்து’ டைரக்டர்

தனது அடுத்த படத்திற்கும் விவகாரமான தலைப்பு வைத்து ஹீரோவாகும் ‘இரண்டாம் குத்து’ டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹர ஹர மஹாதேவகி பட மூலம் தமிழ் இயக்குநராக அறிமுகமானவர் சந்தோஷ்.பி ஜெயக்குமார்.

கடந்த 2018-ம் ஆண்டில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தை இயக்கி பலான பட இயக்குனர் என பெயர் பெற்றார்.

இந்த படத்தில் ஆபாச காட்சி வசனங்கள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன.

ஆனால் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இதனால் அப படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்திருந்தார் இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார்.

‘இரண்டாம் குத்து’ என்று பெயரிடப்பட்ட இந்த படம் தீபாவளியை முன்னிட்டு தியேட்டரில் வெளியானது.

இந்த படமும் பல சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது.

இந்த நிலையில் தனது அடுத்த பட தலைப்பை அறிவித்துள்ளார்.

Mr VIRGIN என்று பெயரிட்டுள்ளார்.

இதிலும் ஹீரோவாக நடித்து இயக்கவுள்ளார்.

அடுத்து என்ன கொடுமையோ..??

Irandam Kuthu director’s next film is titled Mr Virgin

‘பிக்பாஸ்’ பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும்..; ஒரு கோடி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!

‘பிக்பாஸ்’ பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும்..; ஒரு கோடி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bigg Boss Balajiவிஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4.

இதில் பங்கேற்ற போட்டியாளர்களில் மிகவும் பிரபலமான நடிகரும் & மாடலுமான பாலாஜி முருகதாஸ் என்பவர் மீது (M/s. Razzmatazz Group & Miss Tamil Nadu and Miss South India) ஜோ மைக்கேல் பிரவின் என்பவர் மானநஷ்ட ஈடு கேட்டு வழக்கறிஞர் அறிவிப்பு.

பிக்பாஸ் வீட்டில் வைத்து பாலாஜி அவரையும் அவர் கம்பெனியையும் அதில் கலந்துகொண்ட பெண்களையும் தவறாக சித்தரித்ததாக புகார்.

பாலாஜி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் ஒரு கோடி கேட்டு பாலாஜி மீது வழக்கு தாக்கல் செய்ய போவதாக அறிவிப்பு.

Bigg Boss fame Balaji Murugadoss in trouble as pageant owner demands apology

More Articles
Follows