82 வயதிலும் செம ஃபிட்..; யூடியூப் சேனல் தொடங்கி சீக்ரெட் சொல்லும் விஷால் டாடி

82 வயதிலும் செம ஃபிட்..; யூடியூப் சேனல் தொடங்கி சீக்ரெட் சொல்லும் விஷால் டாடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal fatherகொரோனா காலத்தில் உடலை ஆற்றலோடு வைத்துக் கொள்வது எப்படி? – விளக்குகிறார் நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி

நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி எப்போதும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருபவர்.

அதிலும் நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்வார். அதுதான் அவர் 82 வயதிலும் மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு முக்கியக் காரணமாக விளங்கி வருகிறது.

ஆகையால், தன்னைப் போலவே எல்லோரும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக GK Reddy என்ற அவரது பெயரிலேயே ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்திருக்கிறார்.

முக்கியமாக, இந்த கொரோனா காலத்தில் உடல் ஆற்றலை மேம்படுத்திக்கொள்ள வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகளை விவரிக்கிறார்.

பல்வேறு உடற்பயிற்சிகளை பதிவேற்றம் செய்து வருகிறார். அந்த காணொளியில் அவரே உடற்பயிற்சி செய்தும் காட்டுகிறார்.

How to keep the body energized during the corona period? – Explains actor Vishal’s father GK Reddy

BREAKING எவனென்று நினைத்தாய்.; கமல் லோகேஷ் அனிருத் மெகா கூட்டணி

BREAKING எவனென்று நினைத்தாய்.; கமல் லோகேஷ் அனிருத் மெகா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கைதி பட வெற்றியை தொடர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

விஜய் & விஜய்சேதுபதி இணைந்துள்ள இந்த பட ரிலீஸ் கொரோனா ஊரடங்கால் தள்ளி போய்விட்டது.

கொரோனா பிரச்சினை முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள படத்தை லோகேஷ் இயக்குவார் என கூறப்பட்டது.

ஆனால் அண்ணாத்த படத்தை முடிக்காமல் ரஜினி வேறு படங்களில் நடிக்க மாட்டார்.

மேலும் நவம்பர் மாதம் முதல் அரசியலில் களம் காணவுள்ளார் ரஜினிகாந்த்.

எனவே கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தை முடிவு செய்துவிட்டார் லோகேஷ் என்பதை நாம் நேற்றே பார்த்தோம்.

இப்பட அறிவிப்பை இன்று செப்டம்பர் 16 மாலை 6 மணிக்கு சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.

கமல்ஹாசனின் 232 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

இப்படத்தை கமலே தன் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார்.

அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தை 2021 கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்வதாக அறிவித்து பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் இணையும் படத்துக்கு தலைப்பு வைக்கப்படவில்லை.

எவனென்று நினைத்தாய் என்ற வார்த்தை ஹேஷ்டேக் மட்டுமே..ராஜ்கமல் பிலிம்ஸ் தகவல்

Kamal 232 will be directed by Lokesh Kanagaraj and music by Anirudh

IMG-20200916-WA0044

காந்தி ஜெயந்தியன்று ஓடிடியில் ரிலீசாகும் விஜய்சேதுபதியின் ‘கா.பெ. ரணசிங்கம்’

காந்தி ஜெயந்தியன்று ஓடிடியில் ரிலீசாகும் விஜய்சேதுபதியின் ‘கா.பெ. ரணசிங்கம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ka Pae Ranasingamதமிழ் சினிமாவின் ராசியான ஜோடியான விஜய்சேதுபதி & ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரது நடிப்பில் உருவான திரைப்படம் கா.பெ. ரணசிங்கம்.

சமுத்திரக்கனி, ராம், வேல.ராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்டோரும் இவர்களுடன் நடித்துள்ளனர்.

விருமாண்டி என்பவர் இயக்கிய இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

தண்ணீர் வியாபாரம் & விவசாயம் உள்ளிட்ட பல போராட்டங்களை மையப்படுத்தி இப்படத்தை எடுத்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன் இந்த படத்தில் இடம்பெற்ற முதல் பாடலான அழகிய சிறுக்கி பாடலை வெளியிட்டு இருந்தனர்.

க/பெ ரணசிங்கம் படம் சில மாதங்களுக்கு முன்பே ரிலீஸுக்கு தயாரான நிலையில் தியேட்டர்கள் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டது.

எனவே இதனை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட படத்தயாரிப்பாளர் முடிவு செய்து Zeeplex ஓடிடி தளத்தில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று வெளியிடவுள்ளனர்.

Vijay Sethupathi’s in Ka Pae Ranasingam to release on October 2 on Zeeplex

விஜய் & தனுஷ் பட நடிகர் பிளோரண்ட் பெரேரா கொரோனாவினால் மரணம்

விஜய் & தனுஷ் பட நடிகர் பிளோரண்ட் பெரேரா கொரோனாவினால் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Florent Pereiraவிஜய்யின் ‘புதிய கீதை’ பட மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிளோரண்ட் பெரேரா.

இவர் ’கயல்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து மக்களிடம் பிரபலமானார்.

அப்படத்தை தொடர்ந்து ‘ராஜா மந்திரி’, ‘தொடரி’, ‘சத்ரியன்’, ‘தரமணி’, ‘கொடிவீரன்’, ‘வேலையில்லா பட்டதாரி 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

மேலும் பல வருடங்களாக ஊடகத்துறையிலும் பணியாற்றி வந்துள்ளார் பெரேரா.

கலைஞர் தொலைக்காட்சியின் பொது மேலாளராக தற்போது பணியாற்றி வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்த நிலையில், பிரபல குணச்சித்திர நடிகரும் கலைஞர் தொலைக்காட்சியின் பொது மேலாளருமான பிளோரண்ட் பெரேரா (Florent Pereira) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இவரது மரணம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil actor Florent Pereira dies due to Corona

வருண் & சஜித் இணையும் ‘சங்கி’..; அட்லி ஆசையில் மண் போட்ட பாலிவுட்..!

வருண் & சஜித் இணையும் ‘சங்கி’..; அட்லி ஆசையில் மண் போட்ட பாலிவுட்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

varun dhawan sajid nadiadwalaவிஜய் நடித்த பிகில் படத்தை அடுத்து பாலிவுட்டில் ஷாருக்கானை அட்லி இயக்கவுள்ளதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

இவர்கள் இணையும் படத்திற்கு சங்கி (Sanki) என்று பெயரிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

பாஜக கட்சியினரை கிண்டலாக சங்கி என அழைத்து வருகின்றனர் மக்கள்.

அப்படியிருக்கையில் இந்த தலைப்பை வைத்தால் நிச்சயம் அரசியல் சர்ச்சைகள் உருவாகும்.

அதுவே படத்திற்கு பப்ளிசிட்டியாக அமையும் எனவும் சிலர் நம்பினர்

ஆனால் பாலிவுட்டில் ‘சங்கி’ என்ற பெயரில் ஒரு படம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதில் பிரபல ஹீரோ வருண் தவான் நடிக்க சஜித் நதித்வாலா இயக்கி தயாரிக்கிறாராம்.

அட்லி ஆசையில் இப்படி மண் போட்டுடுச்சே பாலிவுட்..??

Varun Dhawan reunites with Sajid Nadiadwala for Sanki

எழுச்சிக்கு பின் வருபவன் தலைவனா?; புரட்சி ஏற்படுத்துபவனே தலைவன்..; ரஜினியை வம்பிழுக்கும் சூர்யா ரசிகர்கள்

எழுச்சிக்கு பின் வருபவன் தலைவனா?; புரட்சி ஏற்படுத்துபவனே தலைவன்..; ரஜினியை வம்பிழுக்கும் சூர்யா ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

அப்போது சினிமாவில் சூர்யாவின் முன்னேற்றம் குறித்து பேசினார். அவரின் நடிப்பை புகழ்ந்தார்.

மேலும் சூர்யாவின் கல்வி சேவை குறித்தும் பாராட்டினார். கல்விக்காக சூர்யா பேசினாலும் அது பிரதமர் மோடிக்கு கேட்கும் என்று பேசினார் ரஜினி.

இதனை சூர்யா ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினார்கள்.

ஆனால் தற்போது நீட் தேர்வு விவகாரத்தில் சூர்யாவின் அறிக்கையும் ரஜினியின் மௌனமும் உள்ளது.

இதனையடுத்து ரஜினியை மறைமுகமாக தாக்கி வால் போஸ்டர்கள் அடித்துள்ளனர்.

எழுச்சி வந்தபின் வருபவன் தலைவன் அல்ல; புரட்சி ஏற்படுத்துபவனே தலைவன் என திண்டுக்கல் சூர்யா ரசிகர்கள் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 12 தேதி அன்று ரஜினி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது… தனக்கு முதல்வர் ஆகும் எண்ணமில்லை. ஆட்சியை விட கட்சிக்கு மட்டுமே தலைமை தாங்குவேன் என்றார்.

மேலும் அரசியல் மாற்றத்தை மக்கள் உணர வேண்டும். அவர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்ப வேண்டும். எழுச்சி உண்டாகட்டும்… புரட்சி உண்டாகட்டும். அப்போது அரசியலுக்கு வருகிறேன் என்றார்.

ரஜினியின் அன்றைய பேச்சை கிண்டலடித்து தான் தற்போது.. எழுச்சி வந்தபின் வருபவன் தலைவன் அல்ல; புரட்சி ஏற்படுத்துபவனே தலைவன்.. என போஸ்டர்கள் அடித்துள்ளனர்.

suriya fans criticise rajinikanth

suriya fans poster

More Articles
Follows