ரஜினி ரசிகர்களின் கோபத்தை தணித்த தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த்-தனுஷ்-ரஞ்சித் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் காலா.

இப்படம் வருகிற ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இதன் டீசரை இன்று மார்ச் 2ஆம் காலை 10 மணிக்கு வெளியிடவிருப்பதாக தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்தார்.

ஆனால் சில நபர்களால் டீசர் இணையத்தில் லீக்காகிவிட்டது.

டீசர் லீக்கானவுடன் பலரும் வாட்ஸ் அப்களில் இதை பரப்ப ஆரம்பித்து விட்டனர்.

யூடிப்பில் பலமுறை பார்த்து ரெக்கார்டு செய்ய காத்திருந்த ரஜினி ரசிகர்கள் இதனால் செம கடுப்பில் இருந்தனர்.

இந்நிலையில் இனியும் தாமதித்தால் சரி வராது என நினைத்த தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் டீசரை அதிகாரப்பூர்வமாக நள்ளிரவே வெளியிட்டு விட்டார்.

அவர் இதை ட்விட்டரில் பதிவிடும்போது…

தலைவர் டீசர் எப்போ ரிலீஸானாலும் எப்பிடி ரிலீஸானாலும் தீபாவளிதான். மாஸ் தான் என ரஜினி ரசிகர்களின் கோபத்தை தணிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

Dhanush‏Verified account @dhanushkraja
Here you go !! Kaala teaser. http://bit.ly/KaalaTamilTeaser … thalaivar teaser eppo release aanaalum eppidi release aanaalum diwali dhaan. Mass dhaan.

சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாத தனுஷ்; கடுப்பில் ரஜினி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தை தனுஷ் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் இன்று மார்ச் 2ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தார் தனுஷ்.

இதனால் இரவு நேரம் முன்பே உறங்கி காலையில் எழுந்து டீசரை பார்த்துக் கொள்ளலாம் என நினைத்திருந்தனர் ரசிகர்கள்.

ஆனால் எவரும் எதிர்பாரா வகையில் மார்ச் 2 தொடங்கும் நேரத்தில் இரவு 12.05 மணிக்கு எல்லாம் காலா டீசர் லீக்காகிவிட்டது.

இதனையடுத்து சில நிமிட இடைவெளியில் வேறு வழியில்லாமல் அதிகாரப்பூர்வமாக தன் ட்விட்டரில் வெளியிட்டுவிட்டார் தனுஷ்.

இதனால் ரஜினி ரசிகர்கள் பலரும் கடுப்பில் உள்ளனர். எப்படி இது லீக்கானது..? இதை செய்தவர் யார்? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இந்த டீசரை முன்பு அறிவித்தப்படி நேற்று மார்ச் 1ஆம் தேதியே வெளியிட்டு இருக்கலாம். அப்படி செய்திருந்தால் இந்த லீக் பிரச்சினை ஏற்பட்டிருக்காது எனவும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Kaala Teaser leaked Rajinikanth fans disappointed

https://www.filmistreet.com/video/kaala-official-teaser/

தொழிலதிபர் மகள் சஞ்சனாவை மணக்கிறார் நடிகர் கதிர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கதிர்.

இதனையடுத்து கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா படங்கள் மூலம் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானார்.

தற்போது `சிகை’, `சத்ரு’, `பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவை விரைவில் திரைக்கு வரத் தயாராகியுள்ளது.

இந்நிலையில், கதிருக்கும், ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் சஞ்சனா என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

வருகிற மார்ச் 4-ஆம் தேதி ஈரோட்டில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது.

மார்ச் இறுதியில் சென்னையில் வரவேற்பு நடைபெறவுள்ளது.

Actor Kathir going to get married with Sanjana

போதை ஒழிப்பு நடவடிக்கையில் ஐ-ப்ரோ அழகி பிரியா வாரியர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளாவில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து, போதை மருந்து வியாபாரம் களை கட்டியுள்ளது.

இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் செய்து வருகிறார்.

இந்நிலையில் போதை மருந்து இல்லாத மாநிலமாக கேரளாவை மாற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி கேரள மாநில போலீஸ் சார்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா, நடிகர் ஜெயசூர்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இளைஞர்கள் மற்றும் இணையத்தின் சென்சேஷன் பெண்ணான நடிகை பிரியா வாரியரும் கலந்துக் கொண்டார்.

Priya warrier in Drug awareness event at Kerala

தென்னிந்தியா முழுவதும் இன்றுமுதல் புதிய படங்கள் ரிலீஸாகாது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் கியூப், யூஎப்ஒ, பிஎக்ஸ்டி உள்ளிட்ட டிஜிட்டல் சேவை அமைப்புகள் மூலம் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

இதற்காக அந்த அமைப்புகள் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலித்து வருகின்றன.

புதிய படங்களை திரையிடுவதற்கு டிஜிட்டல் சேவை அமைப்புகள் ரூ.22 ஆயிரத்தில் இருந்து ரூ.34 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும் இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

இதுபோல் மலையாளம், தெலுங்கு, கன்னட திரைப்பட தயாரிப்பாளர்களும் டிஜிட்டல் சேவை கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று மார்ச் 1ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் புதிய படங்களை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் வெளியிடமாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தை கைவிட தயாரிப்பாளர்களுக்கும், டிஜிட்டல் சேவை அமைப்பினருக்கும் நடந்த சமரச பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இந்த மாதம் திரைக்கு வரவுள்ள கரு, பக்கா, இரும்புத்திரை உள்ளிட்ட பல படங்களின் ரிலீஸ்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

From 1st March new films wont be released in South India

Breaking: முதன்முறையாக ரஜினி படத்திற்கு அனிருத் இசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா மற்றும் 2.0 படங்கள் திரைக்கு வரத் தயாராகி விட்டன.

இதில் காலா திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது.

2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதால் படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்புக் கொண்டுள்ளாராம்.

ரஜினி படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதன்முறையாகும்.

Anirudh composing music for Rajini movie directed by Karthik Subbaraj

More Articles
Follows