செஞ்சு காட்டிடுடோம்ல…. ‘மீசைய முறுக்கு’ம் ஹிப் ஹாப் ஆதி

செஞ்சு காட்டிடுடோம்ல…. ‘மீசைய முறுக்கு’ம் ஹிப் ஹாப் ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hiphop thamizhaதனி பாடல் ஆல்பங்களை வெளியிட்டு வந்த, ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி, சுந்தர்.சி-விஷால் கூட்டணியில் வெளியான ‘ஆம்பள’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

மேலும் பல படங்களுக்கு இசையமைத்து வந்த இவர் ஜல்லிக்கட்டை ஆதரித்து ஒரு பாடலை வெளியிட்டு அசத்தினார்.

தற்போது ஒரு புதிய படத்திற்காக ஆறு துறை பொறுப்புகளை ஏற்று, அதனை வெற்றிக்கரமாக செய்துக் காட்டியிருக்கிறார்.

சுந்தர்.சி தயாரித்துள்ள, ‘மீசைய முறுக்கு’ என்ற படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், இசை மற்றும் பாடல்கள் என முக்கிய பொறுப்புகளை ஏற்றுள்ளார்.

இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை இன்று வெளியிட்டுள்ளார்.

மீண்டும் ‘அது இது எது’ நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன்

மீண்டும் ‘அது இது எது’ நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanவிஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகள் பிரபலமாக சிவகார்த்திகேயனும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல.

இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் அது இது எது நிகழ்ச்சியும் ஒன்று.

இந்நிலையில், சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன், இன்று இந்த நிகழ்ச்சி வாயிலாக விஜய் டிவியில் தோன்றினார்.

அதில், ரெமோ படத்தை மையமாக வைத்து ஒரு எபிசோடு ஒளிபரப்பானது.

அப்போது அந்த நர்ஸ் கெட்டப்புக்கு தான் மேற்கொண்ட சிரமங்களை எடுத்து கூறினார்.

அதன்பின்னர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் திறமையான கலைஞர்களை தனது படங்களில் பயன்படுத்திக் கொள்வதாக உறுதி அளித்தார்.

சௌந்தர்யா ரஜினி படத்தில் தனுஷுடன் பாலிவுட் நடிகை

சௌந்தர்யா ரஜினி படத்தில் தனுஷுடன் பாலிவுட் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush Sonam Kapoorகோச்சடையான் படத்தை தொடர்ந்து, செளந்தர்யா ரஜினிகாந்த் தனது இரண்டாவது படத்தை இயக்க தயாராகிவிட்டார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு  ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதன்  படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதை பார்த்தோம்.

இதில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருடன் பாலிவுட் நாயகி சோனம் கபூரும் நடிக்கவிருக்கிறாராம்.

இவர் ஏற்கனவே ரஞ்சனா படத்தில் தனுஷுடன் நடித்தவர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மேலும் இதில்  மோகன்லால் மகன் பிரணவ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘விஜய் சொல்லிட்டாரு; ரஜினி என்ன சொல்லுவாரோ?’ ரெமோ வெயிட்டிங்

‘விஜய் சொல்லிட்டாரு; ரஜினி என்ன சொல்லுவாரோ?’ ரெமோ வெயிட்டிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini vijay sivakarthikeyanரெமோ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தை பார்த்த நடிகர் விஜய்யும் சிவகார்த்திகேயனை பெரிதும் பாராட்டி இருக்கிறார்.

அப்போது குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் பிடித்த கேரக்டரை பண்ணியிருக்கிறீர்கள் என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

இந்நிலையில், ரஜினிக்கு ரெமோ படத்தை திரையிட்டு காட்டப் போகிறார்களாம்.

ரஜினியின் தீவிர ரசிகர் சிவகார்த்திகேயன் என்பதால் ரஜினி என்ன சொல்வாரோ? என்று எதிர்பார்த்து காத்திருக்கிறாராம்.

விஜய்க்கு ‘தேவி’யால் நேற்று வலி…. இன்று குஷி..!

விஜய்க்கு ‘தேவி’யால் நேற்று வலி…. இன்று குஷி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

devi teamஇயக்குனர் விஜய் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் தேவி.

பிரபுதேவா, தமன்னா, ஆர். ஜே. பாலாஜி நடித்துள்ள இப்படம் நேற்று முன்தினம் வெளியானது.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இரண்டு நாட்களில் மட்டும் ரூ 3 கோடி வரை படம் இப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம் ஒரே நாளில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியானது.

எனவே, பிரபுதேவா மூன்று மொழிகளிலும் டப்பிங் கொடுத்தாராம்.

ஆனால் மற்ற நடிகர்களோ ஒரு மொழியிலே பேசி இருக்கிறார்கள்.

எனவே இப்படத்தை முடிப்பதற்குள் விஜய்க்கு பெரும் பாடாகிவிட்டதாம்.

ஆனால் தற்போது பாசிட்டிவ் ரிசல்ட் வருவதால் அந்த வலி பறந்து போய் விட்டதாக உணர்கிறாராம்.

மீண்டும் ‘ரெமோ’ இயக்குனருடன் சிவகார்த்திகேயன்

மீண்டும் ‘ரெமோ’ இயக்குனருடன் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Remo director Bhagyaraj Kannan Sivakarthikeyanபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

எனவே இதுபோன்று காமெடியுடன் கூடிய தனக்கு பேர் வாங்கித் தரும் கேரக்டர்களை தேர்ந்தெடுக்க உள்ளாராம்.

ரெமோ படத்தை தொடர்ந்து, மோகன்ராஜா இயக்கும் ஒரு படத்திலும், பொன்ராம் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இந்த இரண்டு படங்களையும் ரெமோவை தயாரித்த, 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படங்களை தொடர்ந்து, மீண்டும் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறாராம்.

More Articles
Follows