தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டிமான்டி காலனி பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 5 ஆண்டுகளாக உருவாகியுள்ள படம் இமைக்கா நொடிகள்.
இதில் அதர்வா, நயன்தாராவுடன் முக்கிய கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.
ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள இப்படத்தை இந்த மாதம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடுகின்றனர்.
இந்நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது ஹிப் ஹாப் ஆதி பேசியதாவது…
தமிழில் மல்ட்டிஸ்டாரர் படம் செய்வது ரொம்ப கஷ்டமான விஷயம். ஆனால் அதை செய்து காட்டியிருக்கிறார் தயாரிப்பாளர் ஜெயகுமார். எல்லா முன்னணி நடிகர்களுக்கும் எந்தவித குறையும் இல்லாதவாறு கதாபாத்திரத்தை எழுதியிருக்கிறார் இயக்குனர்.
நயன்தாராவுக்காகவே எழுதப்பட்ட கதையாக எனக்கு தெரிகிறது. ஆக்ஷன் படம் என்றாலே பெரிய பட்ஜெட் படம் தான். நிச்சயம் அனைவரையும் திருப்திப்படுத்தும் என்றார் ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகர்.
இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், படத்தின் பின்னணி இசை தான் மிகப்பெரிய தூணாக இருக்க போகிறது. இசை வெளியீட்டுக்கு பிறகு இரண்டு பாடல்களை உருவாக்கியிருக்கிறோம்.
படப்பிடிப்பின்போதே அவ்வப்போது ஸ்டுடியோவுக்கு வந்து பின்னணி இசையை பற்றி பேசிக் கொண்டே இருப்பார். படத்தின் மிகப்பெரிய பலம் ஆக்ஷன் மற்றும் ஒளிப்பதிவு.
அவர்கள் பட்ட கஷ்டம் தான் என்னையும் நல்ல இசையை கொடுக்க ஊக்குவிக்கிறது. எல்லா நடிகர்களும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். நயன்தாரா கம்பீரமாக இருக்கிறார். படத்தின் சக்திக்கும் மீறி அதிகமாக செலவு செய்திருக்கிறார்கள்.
அவர்களுக்காக இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன் என்றார் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.
டிமாண்டி காலனி படத்தின் போதே நான் பயந்தேன், அதை வெற்றிப் படமாக்கி விட்டீர்கள். இனிமேல் அந்த மாதிரி பயமே கூடாது என நினைத்தேன், அதற்காக உழைத்திருக்கிறேன்.
எல்லா தொழில்நுட்ப கலைஞர்களுமே மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள், நான் தான் கத்துக்குட்டி. அவர்களுடன் வேலை பார்த்தது ஒரு ஜாலியான, நல்ல அனுபவம். என் குரு முருகதாஸ் சார் சொன்னது பாதி வெற்றி திரைக்கதையிலும், நடிகர்கள் தேர்வில் 25% வெற்றியும் இருக்கும். மீதி 25% தான் படப்பிடிப்பில் செய்ய வேண்டியவை.
அதனால் தான் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுடன் உட்கார்ந்து சண்டை போட்டு திரைக்கதையை எழுதினோம். 2013ல் அதர்வாவிடம் இந்த கதையை சொன்னேன், அவரும் ஓகே சொன்னார்.
ஆனால் முதல் பட இயக்குனர் என்பதால் அப்போது தொடங்க முடியவில்லை. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து இப்போது தான் படமாக வந்திருக்கிறது. அதர்வா என் மீது வைத்த நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன் என நம்புகிறேன்.
ஆதி ரொம்பவே பாஸிடிவான மனிதர், நமக்கு தன்னம்பிக்கையை விதைத்து விடுவார். தயாரிப்பாளர் செய்த எல்லா விஷயங்களுமே படத்தின் மெறுகேற்றலுக்காக உதவியது, ஆகஸ்ட் 30ஆம் தேதி படம் ரிலீஸ் அக இருக்கிறது என்றார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
இமைக்கா நொடிகள் ரோலர் கோஸ்டர் ரைடை விட மிகவும் கஷ்டமான ஒரு ரைட். என்ன ஆனாலும் இந்த படத்தை சமரசத்தோடு எடுக்க வேண்டாம் என நானும் அஜயும் முடிவெடுத்தோம். நிறைய அலைச்சலுக்கு பிறகு தயாரிப்பாளர் ஜெயகுமார் படத்துக்குள் வந்தார்.
அவர் தான் கதையை நம்பி செலவு செய்தார். நயன்தாரா, ஆர்டி ராஜசேகர், அனுராக் காஷ்யாப் என என் ஃபேவரைட் லிஸ்டில் உள்ள அத்தனை பேருடனும் ஒரே படத்தில் வேலை செய்தது பெரிய சர்ப்ரைஸ்.
இந்த படத்தின் ஆல்பம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இந்த படத்தின் சண்டைக்காட்சிகளில் நடித்ததை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்றார் நாயகன் அதர்வா முரளி.
இந்த சந்திப்பில் நாயகி ராஷி கண்ணா, ஆடை வடிவமைப்பாளர் பூர்த்தி, இணை தயாரிப்பாளர் அருண், விஜய், சைதன்யா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.
Hiphop Aadhi composed 2 songs after Imaikka Nodigal audio launched