‘ரஜினியை காப்பாத்துங்க…’ இந்திய இந்து சத்திய சேனா போலீசில் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடவிருப்பதால், அவருக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் ரஜினிகாந்த் மற்றும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில இந்திய இந்து சத்திய சேனா என்ற அமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் சூழ்நிலை காரணத்தையும் மனதில் கொண்டு தமிழ்நாட்டில் ஒரு பெரிய மாற்றம் உண்டாக்க வேண்டும் என்ற சமூக ஆர்வத்துடன், பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வந்தார்.

இதை சில அரசியல் கட்சிகள் ரஜினிகாந்த் அவர்களின் கருத்திற்கு முரண்பாடாக பேசிக்கொண்டும் மற்றும் சில அமைப்பை சார்ந்தவர்கள் ரஜினிகாந்த் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் அவரது உருவபொம்மையை எரித்தும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

எனவே ரஜினிகாந்த் அவர்களுக்கும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று எங்கள் அகில இந்திய இந்து சத்திய சேனாவின் அமைப்பின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘காலா’ என்றால் என்ன..? மும்பையில் வாழ்ந்த நெல்லை தமிழர்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் தயாரித்து, ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள காலா படத் தலைப்பு சற்றுமுன் வெளியானது.

இப்படத்தில் ரஜினியின் முழுப்பெயர் கரிகாலன் என்றும் அதனை சுருக்கி காலா என்று பெயரிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் நெல்லை பகுதிகளில் காலா என்ற சொல்லுக்கு எமன் என்ற பொருள் உள்ளதாம்.

இது நெல்லையில் பிறந்த ஒரு மனிதரின் கதை என்றும் அவர் மும்பை சென்ற பின் எப்படி ஒரு சாம்ராஜ்யத்தை கட்டியாளும் அளவுக்கு எப்படி முன்னேறினார்? என்பதே கதைக்களம் என சொல்லப்படுகிறது.

பாலிவுட் நடிகை ஹீமா குரோஷிமா நாயகியாக நடிக்க, இதன் சூட்டிங் மே 28ஆம் தேதி தொடங்குகிறது.

மனைவி போலீசில் புகார்; என்ன சொல்கிறார் தாடி பாலாஜி…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் காமெடி நடிகராக வலம் வருபவர் பாலாஜி. இவருக்கு தாடி பாலாஜி என்ற செல்லப் பெயரும் ரசிகர்களிடையே உண்டு.

இந்நிலையில் இவர் மீது இவரது மனைவி போலீசில் புகார் அளித்திருந்தார் என்பதை பார்த்தோம்.

இதுகுறித்து பாலாஜி என்ன சொல்கிறார் என்றால்…

ஒவ்வொரு குடும்பத்திலும் நடைபெறும் சாதாரண சண்டைதான்.

ஆனால், அதை வைத்து நான் ஜாதியை பெயரை சொன்னதாக குறிப்பிடுகிறார்.

நான் என் மாமனார் வீட்டில்தான் இருக்கிறேன். ஆனால் மாத வாடகை கொடுத்திருக்கிறேன்.

ஆனால் அடிக்கடி வீட்டைவிட்டு வெளியே போ என்று சொல்கிறார்கள்.

என் மனைவி சிலரின் பேச்சை கேட்டு இப்படி நடந்து கொள்கிறார்.

உன்னை ஜெயில்ல உட்காரவைப்பேன் என்று கூறுகிறார்.

இதில் எங்கள் குழந்தை பாதிக்கப்படுவதை நினைத்தால்தான் கஷ்டமாக இருக்கிறது” என்றார்.

‘ரஜினியின் முடிவு எப்பவும் சரியாகத்தான் இருக்கும்..’ தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி அரசியலுக்கு வருவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர் அரசியலுக்கு வந்து மோதி பார்க்கட்டும் என எவரும் குறிப்பிடவில்லை. மாறாக அரசியலுக்கு வரவே கூடாது என பல்வேறு அமைப்புகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷ், ரஜினியின் அரசியல் நிலைப்பாடு குறித்து கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பிலிம் பேர் திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தனுஷ் கூறியதாவது…

‘ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த பேச்சுகளால் எங்களது குடும்பத்திற்கு எந்த அழுத்தமும் இல்லை.

அரசியல் முடிவு மட்டுமல்ல. எந்த முடிவாக இருந்தாலும் அவர் எடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும்’ என்றார்.

ஓராண்டு ஆட்சி செய்த முதல்வருக்கு கமல் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் அதிமுக அரசு பொறுப்பேற்று ஓர் ஆண்டை நிறைவு செய்துவிட்டது.

அதுபோல் நமது பக்கத்து மாநிலமான கேரளாவிலும் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிச ஆட்சி வெற்றிகரமாக ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ளது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கேரள அரசுக்கு அனுப்பியுள்ள இமெயில் ஒன்றின் மூலம் ஓராண்டு ஆட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது… ‘ கேரளா அரசின் ஒரு ஆண்டு கால சிறந்த ஆட்சியை அம்மாநில மக்களுடன் இணைந்து நானும் கொண்டாடுகிறேன்.

கேரள அரசு, பல்வேறு துறைகளில் அண்டை மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் என்று நம்பிக்கை உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவலை கேரள அரசு வெளியிட்டுள்ளது.

ரஜினிக்கு சந்திரமுகி மாதிரி விஜய்க்கு தளபதி 61.. சொல்வது யார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினியின் சினிமா கேரியரில் சந்திரமுகி படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

ரஜினிக்கு சந்திரமுகி படம் அமைந்த்து போல, விஜய்க்கு தளபதி 61 படம் (தற்காலிக பெயர்) அமையும் என ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த முரளி தெரிவித்துள்ளார்.

அட்லி இயக்கி வரும் இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, காஜல், நித்யா, எஸ்
ஜே சூர்யா, சத்யராஜ், வடிவேலு உள்ளிட்டோர் நடிக்க, ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

More Articles
Follows