சினிமா தியேட்டர்களில் பார்க்கிங் கட்டண உயர்வு வழக்கு..; ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

சினிமா தியேட்டர்களில் பார்க்கிங் கட்டண உயர்வு வழக்கு..; ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமா தியேட்டர்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான கட்டணங்களை நிர்ணயித்து தமிழக அரசு.

இது தொடர்பான அரசாணை 2017ல் பிறப்பித்தது.

அப்போது.. மாநகராட்சிகளில் உள்ள திரையரங்க வாகன நிறுத்துமிடங்களில், நான்கு சக்கர வாகனங்களுக்கு 20 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாயும் நிர்ணயம் செய்தது.

அத்துடன் பேரூராட்சி, கிராம பஞ்சாயத்துக்களில், நான்கு சக்கர வாகனங்களுக்கு 5 ரூபாயும், இரு சக்கர வாகனங்களுக்கு 3 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் நகராட்சிகளில் நான்கு சக்கர வாகனங்களுக்கு 15 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 7 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த கட்டணத்தை அதிகரிக்க கோரி வாகன நிறுத்துமிடத்துக்கு உரிமம் பெற்ற இளவரசு என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில்.. தங்கள் தரப்பு கருத்தை கேட்காமலும், நிலத்தின் மதிப்பை கணக்கில் கொள்ளாமலும் அரசு, கட்டணத்தை நிர்ணயித்துள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் & மஞ்சுளா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது…

“திரையரங்குகளில் வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான கட்டணத்தை அதிகரிக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

திரையரங்கு வாகன நிறுத்துமிட கட்டணத்தை உயர்த்த சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கோரிக்கையை ஏற்றால் அது பொதுநலனுக்கு எதிரானது.

அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டணத்தை அதிகரிக்க கோரி மனுதாரர் அரசை அணுக இந்த உத்தரவு தடையாக இருக்காது எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

High court verdict on theatre parking charges

ஐகோர்ட் தீர்ப்பில் பதிவான விமர்சனத்தை நீக்கவும் அபராதத்தை ரத்து செய்யவும் விஜய் மேல் முறையீடு

ஐகோர்ட் தீர்ப்பில் பதிவான விமர்சனத்தை நீக்கவும் அபராதத்தை ரத்து செய்யவும் விஜய் மேல் முறையீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2012ல் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்து இருந்தார் நடிகர் விஜய்.

இந்த இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவுவரி செலுத்தவில்லை விஜய்.

இதனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கார் பதிவு செய்யப்படவில்லை.

நுழைவு வரி செலுத்தினால் மட்டுமே அதை வாகன போக்குவரத்துக்குப் பயன்படுத்தலாம் என வணிகவரித் துறை உதவி ஆணையர் உத்தரவிட்டார்.

எனவே இந்த உத்தரவை எதிர்த்தும், நுழைவு வரி வசூலிக்கத் தடை விதிக்கக் கோரியும் நடிகர் விஜய் தன்னுடைய உண்மையான இயற்பெயரில் (சி.ஜோசப் விஜய்) சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு மனுதாக்கல் செய்திருந்தார்.

கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு பிறகு…

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘மனுதாரர் என்ன தொழில் செய்கிறார் என்பதைக்கூட மனுவில் குறிப்பிடவில்லை என்றார்.

விஜய்யின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் திரைப்பட நடிகர் என தெரிவித்தார்.

திரையுலகில் புகழ்பெற்ற நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்தி மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக திகழ வேண்டும்.

வரி என்பது நாட்டின் வளர்ச்சிக்கு செலுத்த வேண்டிய பங்களிப்பு தானேயன்றி, அது தானாக மனமுவந்து வழங்கும் நன்கொடை அல்ல.

பொதுமக்கள் வரியின் மூலமாகக் கிடைக்கும் நிதி ஆதாரத்தைக் கொண்டே கல்வி, மருத்துவம், பாலங்கள், ரயில்வே, சாலை, துறைமுகம், சட்டம் – ஒழுங்கு, வறுமை ஒழிப்பு என பல்வேறு சமூக நலத்திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

தமிழகத்தில் நாட்டை ஆளும் அளவுக்கு நடிகர்கள் உயர்ந்துள்ளனர். ரீலிலும் மட்டுமல்ல ரியலிலும் ஹீரோக்களாக நடிகர்கள் திகழ வேண்டும்.

எனவே சொகுசு காருக்கான வரியை நடிகர் விஜய் 2 வாரங்களில் செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்தாவிட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கலாம்.

அத்துடன் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கிறேன். அவர் அந்த தொகையை தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும்’’ என அதிரடியாக உத்தரவிட்டார்.

இத்துடன் நடிகர் விஜய் தொடர்ந்திருந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த நிலையில், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு வரும் திங்கள்கிழமை ஜூன் 19 ஆம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது.

அந்த மனுவில்… “தான் வாகன நுழைவு வரி பாக்கியை செலுத்த தயாராக இருப்பதாகவும், அதேசமயம் தன்னை பற்றி தீர்ப்பில் பதிவு செய்த விமர்சனங்களை நீக்கக் கோரியும், அபராதத்தை ரத்து செய்யக் கோரியும் அந்த மனுவில் நடிகர் விஜய் தரப்பு தெரிவித்திருக்கிறாராம்.

Thalapathy Vijay decides to re-appeal High Court’s statement

பாய்ஸ் ஹாஸ்டலில் சிக்கிய பிரியா பவானி சங்கர்.; வைரலாகும் காட்சிகள்.!

பாய்ஸ் ஹாஸ்டலில் சிக்கிய பிரியா பவானி சங்கர்.; வைரலாகும் காட்சிகள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள படம் ‘ஹாஸ்டல்’.

இவர்களுடன் நாசர், சதீஷ் கிரிஷ் குமார், முனிஸ்காந்த் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு போபோ என்பவர் இசையமைத்துள்ளார்.

மலையாளத்தில் 2015ல் வெளியான ‘அடி கப்பியாரே கூட்டமணி’ என்ற படத்தின், ரீமேக் படம் இது.

ஹாஸ்டல்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டார்.

தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரியா பாவனியிடம் 50 ஆயிரம் பெற்று, வேறு வழியே இல்லாமல் அவரை ஹாஸ்டலுக்குள் அழைத்து செல்கிறார் அசோக் செல்வன்.

பின்னர் ஹாஸ்டல் வார்டன் மற்றும் ஃபாதரின் கண்ணில் படாமல் இவரை எப்படி மறைக்கிறார் என்பதே டீசரில் காட்சிகளாக உள்ளது.

விரைவில் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாய்ஸ் ஹாஸ்டலில் பிரியாவுக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியனுமா.? படம் வரும்வரை காத்திருப்போம்.

Priya bhavani shankar in hostel teaser goes viral

‘அருள்நிதி 15’ பட அனைத்து உரிமைகளையும் கைப்பற்றியது சக்தி ஃபிலிம் பேக்டரி

‘அருள்நிதி 15’ பட அனைத்து உரிமைகளையும் கைப்பற்றியது சக்தி ஃபிலிம் பேக்டரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MNM Films நிறுவனத்தின் சார்பில் அரவிந்த் சிங் தயாரிக்க, YouTuber விஜய் குமார் ராஜேந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்

B. சக்திவேலன் அவர்களின் Sakthi Film Factory நிறுவனம் தமிழ் திரைத்துறையில் ரிலீஸ் மற்றும் மார்க்கெட்டிங் மூலம் பல அற்புதமான வெற்றி திரைப்படங்களை தந்துள்ளது.

அவர்களின் மிகச்சிறந்த மார்க்கெட்டிங் உத்திகள், ரிலீஸில் அவர்கள் கடைப்பிடிக்கும் புதுமையான நடைமுறைகள், பட்டி தொட்டி வரை, திரைப்படங்களை அவர்கள் கொண்டு சேர்க்கும் பாங்கு, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் நடிகர்கள் மத்தியில் Sakthi Film Factory நிறுவனத்திற்கு மிகப்பெரிய பெயரினை பெற்று தந்திருக்கிறது.

திரைத்திறையில் புகழ்பெற்ற நிறுவனமாக மாறியுள்ள, Sakthi Film Factory நிறுவனம் முதல் முறையாக ஒரு திரைப்படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்று அதனை வெளியிடும் பயணத்தில் இறங்கியுள்ளது.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் அவர்களின் MNM Films நிறுவன தயாரிப்பில், YouTubeல் எரும சாணி தொடர் மூலம் புகழ் பெற்ற விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கத்தில், தற்போதைக்கு “அருள்நிதி15” என தலைப்பிடப்பட்டிருக்கும், புதிய திரைப்படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்றிருக்கிறது Sakthi Film Factory நிறுவனம்.

Sakthi Film Factory நிறுவனம் சார்பில் B.சக்திவேலன் இது குறித்து கூறியதாவது…

நடிகர் அருள்நிதி மிக வித்தியாசமான களங்களில், ரசிகர்கள் ரசிக்கும்படியான படங்களையும், குடும்பத்தினர் கொண்டாடும் படங்களையும், தொடர்ச்சியாக தந்துவருகிறார்.

அவரது சமீபத்திய படமான “களத்தில் சந்திப்போம்” திரைப்படத்தின் வெற்றி திரைத்துறையில் அவரது மதிப்பை உயர்த்தியிருக்கிறது.

ஒரு நண்பரின் மூலமாக அவரது இந்த திரைப்படத்தின் இறுதி பதிப்பை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் முடியும் வரையிலும் படம் எவ்வாறு செல்லும் என்பதை கணிக்கமுடியாதபடி, பல ஆச்சர்யஙகளை தந்தது இந்த திரைப்படம். அனைத்து வகையான ரசிகர்களும் கொண்டாடும் அம்சங்கள் படத்தில் நிரம்பியிருந்தது.

படம் முடிந்த கணத்திலேயே படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்று விட வேண்டும் என்கிற வேட்கை என்னுள் உண்டானது.

படத்தின் கதையில் அருள்நிதியின் நடிப்பு மிக அபாரமானதாக இருந்தது. இப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அவர் முன்னணி நட்சத்திரங்களுல் ஒருவராக உயர்வார்.

பல படங்களில் பெருமையுடன் வழங்குகிறோம் என்பதை வாய்வார்த்தையாக உபயோகிப்பார்கள்.

ஆனால் இத்திரைப்படம் Sakthi Film Factory நிறுவனத்திற்கு மிக உணர்ச்சிகரமான தருணம் ஆகும். உண்மையிலேயே இப்படத்தை மிக பெருமையுடன் வழங்கவுள்ளோம்.

இப்படத்தை கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் 2021 ஜூலை 21 அன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பெருமையுடன் வெளியிடவுள்ளோம்” என்றார்.

MNM Films நிறுவனம் சார்பில் அரவிந்த் சிங் கூறியதாவது…

தமிழ் திரையுலகில் மிகப்பெரும் பெயரைபெற்றிருக்கும் Sakthi Film Factory நிறுவனம், எனது முதல் தயாரிப்பாக உருவாகியுள்ள படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.

தரமான கதைகளை கொண்டு உருவாகும் படைப்புகள், சரியான குழுவினரை சென்றடைந்தால் மிகப்பெரிய அளவிலான வெற்றியை அடையும், எனும் மிகப்பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இத்திரைப்படம் குழுவினர் அனைவரின் கனவின் படி உருப்பெற்றதற்கு, மிக முக்கிய காரணமாய் விளங்கிய நடிகர் அருள்நிதி அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

தரமான ஒரு படைப்பினை உருவாக்கி, அந்த படைப்பு Sakthi Film Factory நிறுவனம் போன்ற மிகச்சிறந்த நிறுவனத்தால் அங்கீகரிகப்படுவது, மிகப்பெரும் ஊக்கத்தையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது என்றார்.

இயக்குநர் விஜய் குமார் ராஜேந்திரன் பகிர்ந்துக் கொண்டதாவது…

எனது முதல் திரைப்படத்தை இயக்கும், இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த போது, எனது முழுத்திறமையை மட்டும் நிரூபித்தால் போதாது.

சினிமா இயக்கும் கனவுகளோடு இருக்கும், மற்ற YouTuber களுக்கு முன்னுதாரணமாகவும் நான் இருக்க வேண்டும், என்பதில் உறுதியாக இருந்தேன்.

தற்போது எனது படைப்பு, Sakthi Film Factory நிறுவனம் போன்ற மிகப்பெரும் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டு, அவர்கள் மிகப்பெரும் வெளியீடாக, இப்படத்தை வெளியிட இருப்பது, மிகப்பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இப்படம் அனைத்து தரப்பினரும் கொண்டாடும் படமாக இருக்கும்.

அதிலும் கல்லூரி பின்னணியில் கதை நடப்பதால், இளைஞர்களை கண்டிப்பாக ஈர்க்கும்.

மிகப்பெரிய அளவில் படத்தினை விளம்பரப்படுத்தி, அனைத்து ரசிகர்களிடமும் இப்படத்தினை கொண்டு செல்லும் முனைப்பில் இருக்கிறோம். விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் என்றார்.

Arulnithi 15 theatrical rights bagged by Sakthi film factory

ஒலி தொடர்பான தேவைகளுக்கு சென்னையில் ஒரே இடத்தை உருவாக்கிய இசையமைப்பாளர் சக்தி பாலாஜி

ஒலி தொடர்பான தேவைகளுக்கு சென்னையில் ஒரே இடத்தை உருவாக்கிய இசையமைப்பாளர் சக்தி பாலாஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தரமான சவுண்ட் ஸ்டூடியோவுக்கான தேவை சென்னையில் இருப்பதை கருத்தில் கொண்டு, சவுண்டபிள் எனும் அதி நவீன ஒலியகத்தை வடபழனியில் தொடங்கி உள்ளார் இசை அமைப்பாளர் சக்தி பாலாஜி என்.

கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக செயல்பாட்டில் உள்ள போதும், கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையின் காரணமாக இன்று தனது பயணத்தை முறைப்படி சவுண்டபிள் தொடங்கியுள்ளது.

ஃபாரம் மாலுக்கு எதிரே ஆற்காடு சாலையில் ரத்னா ஸ்டோர்ஸ் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்திருக்கும் சவுண்டபிள், திரைத்துறை தொடர்புடைய அனைவரும் எளிதில் அணுகக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

சவுண்டபிள் ஸ்டூடியோ குறித்து மனம் திறந்த சக்தி பாலாஜி, “மும்பை மற்றும் ஹைதராபாத்தில் இருப்பது போன்ற தரமான ஒலியகங்கள் சில மட்டுமே சென்னையில் உள்ளன. மேலும், நான் ஒரு இசை அமைப்பாளராகவும் உள்ள காரணத்தால், ஒலி தொடர்பான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஸ்டூடியோ ஒன்று நமது ஊரில் தேவை என்று தோன்றியதன் விளைவாக சவுண்டபிளை தொடங்கி உள்ளேன்,” என்றார்.

மேலும் பேசிய அவர்,
“தற்போது டப்பிங் மற்றும் மிக்சிங் இரண்டு சூட்டுகள் சவுண்டபிளில் உள்ளன. திரைப்பட டப்பிங்கிற்கான ஸ்டீரியோ வசதியுடன் டப்பிங் சூட் உள்ள நிலையில், 7.1 வசதியுடன் மிக்சிங் சூட் உள்ளது. 10 படங்களுக்கான பணிகள் ஏற்கனவே நடைபெற்றுள்ள நிலையில், ஸ்டூடியோவை பயன்படுத்தும் அனைவருமே பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.”
“குறைந்த கட்டணத்தில், மிகச்சிறந்த சேவை மற்றும் வசதிகளை சவுண்டபிள் அளிக்கும். இங்குள்ள அமைதியான மற்றும் அழகான சூழ்நிலை படைப்புத்திறனை சிறப்பாக வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளது. வெப் சீரிஸ் எடுப்பவர்கள் டால்பி அட்மாஸ் வசதி கேட்பதால் டால்பி அட்மாஸ் வசதியையும், மற்றுமொரு சூட்டையும் விரைவில் சேர்க்கவுள்ளோம்.
ஒலி தொடர்பான அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் விதத்தில் சவுண்டபிள் செயல்படும்,” என்று நிறைவு செய்தார் வெப் சீரிஸ் சிலவற்றுக்கும், திரைப்படங்களுக்கும் தற்போது இசை அமைத்து வரும் சக்தி பாலாஜி.

Soundable starts its journey: State-of-the-art sound studio in Chennai

இயக்குனர் டீகே-யின் கருங்காப்பியத்தில் ‘நச்’சுன்னு நாலு நாயகிகள்

இயக்குனர் டீகே-யின் கருங்காப்பியத்தில் ‘நச்’சுன்னு நாலு நாயகிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் உள்ளிட்ட ஐந்து நடிகைகள், கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ‘கருங்காப்பியம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’, ‘காட்டேரி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் டீகே இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கருங்காப்பியம்’.

இந்த படத்தில் நடிகைகள் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகியோர் கதையின் நாயகிகளாக நடிக்க, இவர்களுடன் நடிகர்கள் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், ஷா ரா, ‘லொள்ளு சபா’ மனோகர், விஜே பார்வதி, விஜே ஆஷிக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் ஈரான் நாட்டு நடிகையான நொய்ரிகா புதுமுக நாயகியாக அறிமுகமாகிறார்.

விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார். விஜய் படத்தைத் தொகுக்க, செந்தில் ராகவன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.

சண்டைக்காட்சிகளை அசோக் அமைத்திருக்கிறார்.

பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘கருங்காப்பியம்’ படத்தை வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் (PAVE) என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ. பி. இன்டர்நேஷனல் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளது.

இந்நிலையில் ‘கருங்காப்பியம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

4 top heroines join for Director Deekay’s next film

More Articles
Follows